முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு பிரம்மாண்ட வெற்றி கண்ட நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films).
 
கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார்களான புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar) நடித்த ‘நின்னிந்தலே’ (Ninnindale), ‘ராஜ்குமாரா’ (Raajakumara)  மற்றும் யஷ் (Yash) நடித்த ‘மாஸ்டர் பீஸ்’ (Masterpiece)  உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films). இதில் கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது ‘ராஜ்குமாரா’ (Raajakumara) திரைப்படம். இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் தன்னுடைய நிறுவனத்தை வளர்க்க முடிவு செய்தார் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனர் விஜய் கிரகண்தூர் ( Vijay Kiragandur )
இதற்காக ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) தயாரித்த படம் தான் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter : 1’ ) பிரஷான்த் நீலின் (Prashanth Neel) அட்டகாசமான இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் யஷ் (Yash) நடித்த ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) வசூல் இந்தியத் திரையுலகில் பலரையும் ஆச்சரியப்படுத்தியது. நடிப்பு, இயக்கம், ஒளிப்பதிவு, கதை, வசனம் என அனைத்து பிரிவுகளிலும் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) இப்படம் வெளியான 4 நாட்களிலேயே அதிக வசூல் செய்த கன்னடப் படம் என்ற மாபெரும் சாதனையையும் நிகழ்த்தியது. இந்திய அளவில் பரிச்சயமான தயாரிப்பு நிறுவனமாகவும் வளர்ந்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films)
தற்போது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனம் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டது. தொடர்ச்சியாக 3 படங்களின் தயாரிப்பில் பணிபுரிந்து வருகிறது.
 
கன்னடம் மற்றும் தெலுங்கில் புனித் ராஜ்குமார் ( Puneeth Rajkumar)  நடித்து வரும் ‘யுவரத்னா’ (Yuvarathnaa), ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2′ ( KGF: Chapter 2’) மற்றும் இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குனரும் இணையும் படம் ஆகியவை தயாரிப்பில் உள்ளன.
 
இந்தியத் திரையுலகில் ஒரு தயாரிப்பு நிறுவனம் தொடர்ச்சியாக, அனைத்து மொழிகளிலும் தயாராகும் 3 படங்களைத் தயாரித்ததில்லை. அந்த சாதனையை இப்போது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிகழ்த்தியுள்ளது. அனைத்து மொழிகளிலும் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ ( KGF : Chapter 1’) படத்தை வெளியிட்டு வெற்றி கண்டதைத் தொடர்ந்து, ‘கே.ஜி.எஃப் சேப்டர் 2′ ( KGF: Chapter 2’)  படத்தையும் அனைத்து மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிடத் தயாராகி வருகிறது.
இதனைத் தொடர்ந்து இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குனரும் இணையும் படத்தை அனைத்து மொழிகளிலும் தயாரித்து வெளியிடவுள்ளது. இது தொடர்பாக அதிகாரபூர்வமான அறிவிப்பு டிசம்பர் 2-ம் தேதி அன்று மதியம் 2 மணியளவில் வெளியாகவுள்ளது. இந்த அறிவிப்பு கண்டிப்பாக அனைவரையும் ஆச்சரியமூட்டும் என்பதில் சந்தேகமில்லை.
தொடர்ச்சியாக அனைத்து மொழி மக்களை ஆச்சரியமூட்டும் வித்தியாச கதைக்களங்களைப் பிரம்மாண்டமாகத் தயாரித்து வெளியிட ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

இனி, சட்டப்படி பேசுங்கள்

நீதிமன்றம், சட்டம், தண்டனை போன்ற வார்த்தைகள் இன்றும் பலருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. அதோடு இன்றைய ஏஐ உலகில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்களும், பணம் பறிக்கும் மோசடிகளும் அதிரிகரித்து வருகின்றன.  இந்த நிலையில் மக்களுக்கு சட்டம் பற்றிய எளிமையாகச் சொல்லித் தரும் வகையில் புதுயுகத்தில் சட்டம் ஒரு வகுப்பறை புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.  சட்டப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது எப்படி என்பது போன்ற சட்டம் சார்ந்த கேள்விகளுக்கு பிரபல வழக்கறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.

Annual Eye Screening Must for Diabetics to Save Eyesight: Dr Agarwals Eye Hospital

Chennai, November 2024: “There are 101 million people diagnosed with diabetes and 136 million people diagnosed with prediabetes in India. Around 10% of individuals (approx. 1 in 10) with diabetes will develop some form of diabetic eye disease post 10 years of their diagnosis or even earlier. This can lead to severe vision loss or even blindness. However, a vast portion of diabetics population do not go for eye checkups because there is not enough awareness that diabetes could affect eyes as much as it does heart or kidney. Also, diabetic retinopathy can remain free of symptoms initially” said Dr. Manoj Khatri, Clinical Lead and Head, Department of Vitreo-Retina, Dr Agarwals Eye Hospital, Chennai.   “Regular screening and early detection of the risks of this disorder can help crores of Indians either to prevent or manage diabetes. Type 2 diabetes can even be prevented, or its onset can be delayed with a few lifestyle changes and healthy eating. Keeping blood sugar, blood pressure, a...