முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி-யின் 'பவுடர்' படத்தில் 'ராகவனாக' நடித்து அறிமுகமாகிறார் நிகில் முருகன்

'பவுடர்' படத்தின் வாயிலாக பிரபல முன்னனி சினிமா பிஆர்ஓ-வான நிகில் முருகனை நடிகராக அறிமுகமாக்குகிறார் இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. 

இவர், தனது முதல் படமான 'தாதா 87'-ல் உலகநாயகன் கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசனை ஒரு டானாக அறிமுகப்படுத்தி மக்கள் மனங்களை வென்றவர். தொடர்ந்து பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். அவரின் மூன்றாவது படமாக உருவாகி வருகிறது 'பவுடர்'. இப்படத்தில் நடிகை வித்யா பிரதீப் கதையின் நாயகியாக நடிக்கிறார். மற்றும் மனோபாலா,வையாபுரி,
ஆதவன், அகல்யா வெங்கடேசன்உள்ளிட்ட பலர் நடிக்க 
இந்நிலையில், படத்தில் வலிமை மிக்க முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகராக அறிமுகமாகிறார், பிஆர்ஓ நிகில் முருகன். 

நிகில் முருகனின் கதாபாத்திரம் குறித்து இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி. கூறியதாவது:
"நிகில் முருகனை திரையுலகம் 25 ஆண்டு காலமாக சிறந்த பிஆர்ஓவாக அறியும். முன்னணி சினிமா பிஆர்ஓ.,வுக்கே உரித்தான பாணியில் எப்போதுமே பரபரப்பாக இருக்கும் அவரை, லாக் டவுன் நேரத்தில் நான் பயன்படுத்திக் கொண்டேன். 
முதலில், இந்த ஸ்க்ரிப்ட்டுடன் நான் அவரை அணுகியபோது, 'எனக்கு நடிப்பதில் விருப்பமே ஆனால் பிஆர்ஓ., ஆகவே காலூன்றி பணி புரிந்து வருகிறேனே!' என்று தயங்கினார். அதன்பின்னர் சில சுற்று பேச்சுவார்த்தைகளில் உடன்பட்டு நடிப்பதற்கு ஒப்புக் கொண்டார். அவர் சம்மதித்ததில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. எனது முதல் படத்தில் சாருஹாசன் சாரை ஒரு டானாக அறிமுகப்படுத்தினேன். அந்தப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், எனது பப்ஜி படத்தில் ஐஸ்வர்யா தத்தாவை முற்றிலும் மாறுப்பட்ட வேடத்தில் நடிக்க வைத்துள்ளேன். 10 ஆண்டுகளுக்குப் பின் நடிகர் ஜனகராஜை மக்கள் மத்தியில் தாதா -87 படம் மூலம் மீண்டும் கொண்டு சேர்த்தேன். சினிமாவில் பொதுவாக இந்த ஆர்டிஸ்ட் இந்த கேரக்டர் தான் என்று பொருத்தி வைத்திருப்பார்கள். அந்த வரையறைகளை உடைத்து வெற்றி காண்பதே எனது பாணி மற்றும் இலக்கு. அதன்படி, தாதா 87-ல் நடிகர் சாருஹாசனை நான் ஒரு டானாக காண்பித்தபோது ரசிகர்கள் அதை ஏற்று மகிழ்ந்தனர். அந்த வரிசையில் இப்போது, திரையுலகினரால் பிஆர்ஓ-வாக மட்டுமே அறியப்பட்ட நிகில் முருகனை மக்கள் முன்னால் நடிகராக களமிறக்கிவுள்ளேன். இதில், நிச்சயம் வெற்றி காண்பேன் என்ற நம்பிக்கையிருக்கிறது. 
நிகில் முருகனின் கதாபாத்திரத்தின் பெயர் ராகவன். 'வேட்டையாடு விளையாடு' படத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் சூட்டிக்கொண்டதால் வலிமை பெற்ற அந்தப் பெயரை 'பவுடர்' படத்தில் நிகில் முருகனுக்கு சூட்டியுள்ளேன். ராகவன் கேரக்டரில் இருந்து நான் தனிப்பட்ட முறையில் இன்ஸ்பையர் ஆனதால் அதே பெயரை இந்தக் கதாபாத்திரத்துக்குக் கொடுத்துள்ளேன். 
படத்தில் நடிக்கிறேன் என்று சம்மதம் தெரிவித்த நாள் முதலே நிகில் முருகன் நடிப்புப் பயிற்சி, உடற்பயிற்சி என தன்னை  தகுதிப்படுத்திக் கொண்டார். உடலை கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் வலிமையாக்கி திரையில் சிறப்பாகப் பொருந்தியுள்ளார். அவரது குரல் இந்த கதாபாத்திரத்துக்கு ஒரு ப்ளஸ் என்றே சொல்வேன். 
நிகில் முருகன் பங்குபெறும் காட்சிகள் பெரும்பாலனவை, தீவிர லாக்டவுனுக்குப் பின்னர் படப்பிடிப்புக்கு அரசு அனுமதி வழங்கியபோதே முடித்துவிட்டோம். நாயகி வித்யா பிரதீப்புடனான காட்சிகள் மட்டுமே இன்னும் படமாக்கப்பட வேண்டும். வாய்ப்புகள் நம்மைத் தேடிவரும்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சான்றோர் சொல்வார்கள். நிகில் முருகன் அதை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டிருப்பதாகவே நான் உணர்கிறேன்" 
இவ்வாறு அவர் கூறினார்.
ஒளிப்பதிவு- ராஜா பாண்டி  RP
இசை-லீயாண்டர் லீ மார்ட்டி

கதை,திரைக்கதை
வசனம், இயக்கம்

விஜய்ஶ்ரீஜி

 ஜி மீடியா நிறுவனம் தாயரிக்கும்   படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து உள்ள  நிலையில்  2021 பவுடர் திரையில் வெளியாகும்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

இனி, சட்டப்படி பேசுங்கள்

நீதிமன்றம், சட்டம், தண்டனை போன்ற வார்த்தைகள் இன்றும் பலருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. அதோடு இன்றைய ஏஐ உலகில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்களும், பணம் பறிக்கும் மோசடிகளும் அதிரிகரித்து வருகின்றன.  இந்த நிலையில் மக்களுக்கு சட்டம் பற்றிய எளிமையாகச் சொல்லித் தரும் வகையில் புதுயுகத்தில் சட்டம் ஒரு வகுப்பறை புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.  சட்டப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது எப்படி என்பது போன்ற சட்டம் சார்ந்த கேள்விகளுக்கு பிரபல வழக்கறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.

Annual Eye Screening Must for Diabetics to Save Eyesight: Dr Agarwals Eye Hospital

Chennai, November 2024: “There are 101 million people diagnosed with diabetes and 136 million people diagnosed with prediabetes in India. Around 10% of individuals (approx. 1 in 10) with diabetes will develop some form of diabetic eye disease post 10 years of their diagnosis or even earlier. This can lead to severe vision loss or even blindness. However, a vast portion of diabetics population do not go for eye checkups because there is not enough awareness that diabetes could affect eyes as much as it does heart or kidney. Also, diabetic retinopathy can remain free of symptoms initially” said Dr. Manoj Khatri, Clinical Lead and Head, Department of Vitreo-Retina, Dr Agarwals Eye Hospital, Chennai.   “Regular screening and early detection of the risks of this disorder can help crores of Indians either to prevent or manage diabetes. Type 2 diabetes can even be prevented, or its onset can be delayed with a few lifestyle changes and healthy eating. Keeping blood sugar, blood pressure, a...