முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரசிகர்களை கவர்ந்த ஏஜென்ட் டீசர்

  அகில் அக்கினேனி, சுரேந்தர் ரெட்டி, இணையும், ஏகே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் பான் இந்திய திரைப்படமான ‘ஏஜென்ட்’ படத்தின் மாஸ், ஸ்டைலிஷ் மற்றும் அதிரடி டீசர் வெளியிடப்பட்டது. திரைத்துறையின் உச்ச நட்சத்திரங்களான நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கிச்சா சுதீப் ஆகியோர் இணைந்து இவ்வாண்டின் மிக முக்கியமான திரைப்படமான ஏஜென்ட் படத்தின் தமிழ் மற்றும் கன்னட மொழி டீசரை வெளியிட்டனர். அதே நேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளத்தில் முறையே அகில் மற்றும் மம்முட்டி இதன் டீசரை வெளியிட்டனர். இந்தி பதிப்பு டீசரும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் மகாதேவாக நடித்துள்ள நடிகர் மம்முட்டி அவர்களின் பார்வையில் இந்த டீசர் காட்டப்பட்டுள்ளது. ஒரு விசாரணைக்கு அழைக்கப்பட்ட அவர், 'ஏஜென்டின்' தைரியம், வீரம் மற்றும் கணிக்க முடியாத தன்மையை பற்றி கூறுகிறார். அவன் மிகவும் தைரியமான, தீவிரமான தேசபக்தன். அவனைப் பிடிப்பது என்பது சாத்தியமில்லை என்று கூறுகிறார். அவரது மரண அஞ்சலி ஏற்கனவே எழுதப்பட்டதாக அவர் கூறுகிறார். காதலி அவனை, ‘வைல்ட் சாலே’ காட்டுப்புலி என்று அழைக்கிறாள். ‘ஏஜென்ட்’ பற்றிய ஒ

சோனி மியூசிக் யூடுயூப் தளத்தில் வெளியாகியுள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும்  “கனா காணும் காலங்கள்”  தொடருக்காக,  இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் சிறப்பு ஆந்தம்  பாடல்

  ‘கனா காணும் காலங்கள்’ இப்போது டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய எபிசோடுகளுடன் ஒளிப்பரப்பாகி வருகிறது. சென்னை, ஜூலை 15, 2022: டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் தலைமுறை தாண்டி ரசிகர்களை அசத்தி வரும்,  “கனா காணும் காலங்கள்” தொடரின் புதிய சீசன் ஒளிப்பரப்பாகி வருகிறது. இத்தொடர் அதன் ரசிகர்களுக்கு ஒரு ஆச்சரியமான இசை விருந்தை அளித்துள்ளது. இத்தொடருக்காக மகிழ்ச்சியான மற்றும் வேடிக்கை நிறைந்த  பள்ளி நினைவுகள் போற்றும்  ‘எல்லாமே ஜாலி தான்’ எனும் தீம் பாடல் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்பாடலுக்கு    சிறந்த இசை இயக்குநர்களில் ஒருவரான ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ புகழ் ஆதித்யா ஆர்.கே பாடியுள்ளார், பிரபல பாடலாசிரியர் ஜி.கே.பி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல்  பள்ளி வாழ்க்கையின் அழகிய தருணங்களை நினைவுபடுத்தும், மகிழ்ச்சியான கொண்டாட்டமாகும். சோனி மியூசிக் சவுத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்ட இந்த பாடல், ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘கனா காணும் காலங்கள்’ தொடர்  வெறும் நிகழ்ச்சி என்பதை தாண்டி பள்ளி வாழ்வி

ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் “மாமனிதன்”

  தமிழ் ஓடிடி தளத்தில் கோலோச்ச ஆரம்பித்திருக்கும் ஆஹா ஓடிடி தளத்தின் அடுத்த அதிரடி வெளியீடாக, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் “மாமனிதன்” திரைப்படம் ஜூன் 14 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தை இப்போது 155 நாடுகளில் ஆஹா ஓடிடி தளத்தின் வழியாக கண்டுகளிக்கலாம். இதனை ஒட்டி படக்குழுவினர் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இயக்குநர் சீனு ராமசாமி  பேசியதாவது… கலாப்பிரியாவின் கவிதை ஒன்று இருக்கிறது காயங்களோடு இருப்பவனை விரட்டி கொத்தும் காக்கையை பற்றியது. அப்படி காயத்தோடு இருந்த ஒரு படைப்பை, தங்கள் தோளில் தூக்கி உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பத்திரிக்கை நண்பர்களுக்கு என் மகள்களின் கைகளால் நன்றி சொல்கிறேன். நீங்கள் இல்லையென்றால் இந்தப்படம் இல்லை. ஒரு படத்தின் வெற்றி என்பது இந்த காலத்தில் பல அடுக்குகளாக இருக்கிறது. தயாரிப்பாளருக்கு போட்ட பணம் திரும்ப வந்தால் அதுவே வெற்றி தான். திரையரங்குகளில் இந்தப்படம் நன்றாகவே போனது ஆனால் அதன் லாபம் என்பது தொக்கி நின்றது, அந்த நேரத்தில் தான் ஆஹா ஓடிடி வந்தது. அவர்களால் இன்று இப்படம் 155 நாடுகளை சென்றடைந்துள்ளது. எல்லோரு

நடிகர் ரக்‌ஷன் நாயகனாக அறிமுகமாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்

  பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க, இரா கோ யோகேந்திரன் இயக்கத்தில், கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படப்புகழ்  நடிகர் ரக்‌ஷன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் துவங்கியது.கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் தனது தனித்த, நகைச்சுவை நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ரக்‌ஷன், நாயகனாக புதிய படத்தில் அறிமுகமாகிறார். உணர்வுபூர்வமான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது. கலக்கப்போவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க் ஸ்டார் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். தாமரை பாடல் வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் மாலி படத்தொகுப்பு பணிகளை செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி  மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக்,  டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இர

சீயான் விக்ரம் - பா. ரஞ்சித் இணையும் படத்தின் தொடக்க விழா

  சீயான் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் பெயரிடப்படாத படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. விரைவில் வெளியாக இருக்கும் 'கோப்ரா', 'பொன்னியின் செல்வன்: எனும் இரண்டு பிரம்மாண்ட அகில இந்திய அளவிலான படங்களை தொடர்ந்து, சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தினை முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்குகிறார்.  இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ.ஞானவேல் ராஜா நீலம் புரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார் . ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 22 ஆவது தயாரிப்பாக தயாராகும் இந்த படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் சிவகுமார், ஆர்யா, தயாரிப்பாளர்கள் T. சிவா, S.R. பிரபு, அபினேஷ் இளங்கோவன், C.V. குமார், இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். 'சீயான் 61' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தின் கதை, திரைக்கதையை தமிழ் பிரபா எழுத, ஒளிப்பதிவை கிஷோர் குமார் கவனிக்கிறார். 'இசை

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' படப்பிடிப்பு தொடக்கம்

  நடிகர் ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தின் படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியிருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். ராகவா லாரன்ஸ்  கதையின் நாயகனாக நடிக்க, 'வைகை புயல்' வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கும் 'சந்திரமுகி 2' படத்தைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது அனைவரும் அறிந்ததே. தற்போது இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மைசூரில் தொடங்கி இருக்கிறது. லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில்  'சந்திரமுகி 2' எனும் புதிய பிரம்மாண்டத் திரைப்படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் வடிவேலு இணைந்து நடிக்கிறார்கள். இதனை 'சந்திரமுகி' படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குநர் பி வாசு இயக்குகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை

“ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பம்

  வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் S. P. ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து தயாரிக்கும் “ரெயின்போ” திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜை சென்னையில் ஆரம்பமானது, இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் S. P. ஹோசிமின் . பரத் நடித்த பிப்ரவரி 14 , சாந்தனு பாக்யராஜ் , சத்யராஜ் நடிப்பில் ஆயிரம் விளக்கு திரைப்படங்களை இயக்கியவர். இவரின் இயக்கத்தில் ஜப்பான் சுமோ Yoshinori Tashiro, மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த் , யோகி பாபு , VTV கணேஷ் -நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய படம் "சுமோ" விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் "BIGBOSS" புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன் நடிக்கிறார். இப்படத்தின் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருகிறது. இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ரன் ராஜ் , மற்றும் ஆறு முன்னனி கதாநாயகிகள் நடிக்க மற்றும் மைம் கோபி , மனோபாலா ,சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம் பெறுகிறார்கள். பிரமாண்ட பொருட்செலவில் பரபரப்பான திரைக்கதையில்

தளபதி விஜய் மஹால் திறப்பு விழா

  திருச்சி மாவட்டத்தில் வயலூர் பகுதியில் தளபதி விஜய் மஹால் புதிதாக திறந்து தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு ஏழை எளிய ‌‌மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பால்கேன் 5நபர்களுக்கும் சில்வர் பாத்திரம் 30பேர்க்கும் வேட்டி 40பேருக்கும்  சேலை 60பேருக்கும்  மளிகை பொருட்கள் 80பேருக்கும்  பள்ளிகுழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் 50பேருக்கும்  மரக்கன்றுகள் 50பேருக்கும் அகில இந்திய பொதுச் செயலாளர் புஸ்ஸி.N.ஆனந்துex.mla அவர்கள் வழங்கினார்.நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்ட தலைவர்கள் அணி தலைவர்கள் நகர ஒன்றிய பகுதி நிர்வாகிகள் தளபதியின் ரசிகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The Red Box group launches “The Green Box” - a Pure Vegetarian Indo-Chinese Food On-The-Go & Restaurant model

  India, 12th July 2022: The Green Box is a well-planned concept by The Red Box group to target a new set of audience with an aim to have a similar brand connect to The Red Box. Keeping in mind the universal colour codes: Green standing for Vegetarian and Red standing for non-vegetarian – The Green Box stands Pure, Tasty & Green - inside & out! The Red Box is a well-established brand that is much-loved by people of different groups, societies and across different cities. With its success, the group is proud to launch “The Green Box”: a Pure Veg Indo-Chinese food on-the-go concept with a dine-in model incorporated. The primary goal of The Green Box is to cater to people who are strictly Vegetarian and prefer the kitchen also to be fully Vegetarian as well. Same quality and taste of The Red Box, The Green Box too is quick, tasty and a value for money. Although the group’s USP is Tasty Food On-The-Go, The Green Box also has a seating capacity to accommodate up to 20 people. An int

நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”

  Etcetera Entertainment சார்பில் திரு மதியழகன் மற்றும் Malik Streams Corporations (Production & Distribution) சார்பில் தத்தோ அப்துல் மாலிக், முகம்மது ஜுபையர் மற்றும் ராசிக் அஹமத் ஆகியோர் தயாரிப்பில் நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்க, அவரது 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள படம் “மஹா”. இயக்குநர் U.R. ஜமீல் இயக்கத்தில் நடிகர் STR சிம்பு மிக முக்கியமான கேமியோ பாத்திரத்தில் நடிக்க, நடிகர் ஶ்ரீகாந்த் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு பரபர திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினர் மற்றும் பிரபலங்கள் கலந்து கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் K ராஜன் பேசியதாவது.., மஹா திரைப்படம் ஒரு மகளுக்கும், தாய்க்கும் இடையேயான பந்தத்தை கூறும் படம். இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் சிறப்பாப பங்களிப்பை கொடுத்துள்ளனர். இயக்குனர் சிறப்பான திரைப்படத்தையும், ஒரு முக்கியமான கருத்தையும் தந்துள்ளார். நடிகர் சிம்பு சிறந்த நட

துளசி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு பெருமையுடன் வழங்கும் திரைப்படம் சிவி 2

  சில ஆண்டுகளுக்கு முன் வெளியாகி மக்கள்  மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் சிவி. ஒருவரின் கழுத்து மேல் பேய் உட்கார்ந்து பழிவாங்கும் கதை பலருடைய கவனத்தை ஈர்த்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் 2 ஆம் பாகம் உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் திரையுலகில் சொல்லப்படாத வகையில் மாறுபட்ட கோணத்தில் ஆங்கில படத்திற்கு நிகராக படமாக்கியுள்ளார்கள். சிவி 2 திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஆர் மாஸ் புரொடக்ஷன் ஆனந்த் பாபு வெளியிடுகிறார்.இவர் இதற்கு முன்பாக சமீபத்தில் வெளியான மாயோன் திரைப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார் இதை தொடர்ந்து விரைவில் படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார் விஷூவல் கம்யூனிகேஷன் படிக்கின்ற மாணவ, மாணவிகள், பல வருடங்களாக அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட ஒரு மருத்துவமனைக்கு ஆய்வு செய்ய செல்கிறார்கள். காணாமல் போன மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் போலீசாரிடம் புகார் அளிக்க, போலீசார் சில விசாரணைக்கு பிறகு மாணவ மாணவிகள் சென்ற மருத்துவ மனைக்கு தேடிச் செல்கிறார்கள். அங்கு சில வீடியோ ஆதாரம் மற்றும் செல்போன் ஆதாரங்களை கைப்பற்றுகின்றனர். அதை ஆய்வு செய்த போலீசார், அதில் பல ரத

உறியடி விஜய் குமார் ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்து அடுத்த படத்திற்கான படப்பிடிப்பை துவங்கியுள்ளனர்.

  கிராமப்புற பின்னணியில் அரசியல், ஆக்‌ஷன், காதல், கலந்த குடும்ப பாங்கான திரைப்படமாகவும்,  ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாகவும் உருவாகிறது. இதற்கான படப்பிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து 60 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கதாநாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கிறார். மேலும் திலீபன், பாவெல் நவகீதன், மரியம் ஜார்ஜ் மற்றும் பலர் இணைந்து நடிக்கின்றனர். 96 படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்கிறார். கோவிந்த வஸந்தா இசையமைக்கிறார். CS பிரேம் குமார் எடிட்டராகவும், ஸ்டன்னர் சாம் சண்டை பயிற்சியாளராகவும், ஏழுமலை கலை இயக்குநராகவும் பணியாற்றுகின்றனர். எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனங்களை எழுதியுள்ளார்.

‘சினிமா தான் என் உயிர்’ = சீயான் விக்ரம் உருக்கம்

  ஏ ஆர் ரஹ்மானின் மாயஜால பின்னணியிசைக்காகக் காத்திருக்கிறேன் = இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘சீயான்’ விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘கோப்ரா’ படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் உள்ள பிரம்மாண்டமான பீனிக்ஸ்சிட்டி வணிக வளாகத்தில் அமைக்கப்பட்ட பிரத்யேக அரங்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித் குமார், இயக்குநர் அஜய் ஞானமுத்து, படத்தின் நாயகன் சீயான் விக்ரம், அவரது வாரிசும், நடிகருமான துருவ் விக்ரம், ரெட் ஜெயண்ட் மூவிஸ் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் கே. எஸ். ரவிக்குமார், ஆனந்த்ராஜ், ரோபோ சங்கர், நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி, நடிகர் ரோஷன் மேத்யூ, கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், பாடலாசிரியர் தாமரை ஆகியோருடன் படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் உள்ளிட்ட பட குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 'கோப்ரா' படத்தில் இடம்பெற்ற ஐந்து பாடல்களும், ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் மற்றும் அவரது குழுவினர் மேடையில் பாடி, படத்தின்பாடல்களை அறிமுகப்படுத்தி, ரசிகர்களை உற்சாகமடைய செய்தனர். விழாவில் இ

சிறப்பான வளர்ச்சியில் சென்னை ரியல் எஸ்டேட் துறை

  சொத்துகள்   வாங்க   இது   சரியான   தருணம்  –  கிரடாய்   அறிவிப்பு   சென்னை, ஜூலை 13–கொரோனா தொற்று பரவலுக்கு பிந்தைய நிலையில் வணிக மற்றும் குடியிருப்பு சொத்துகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக தற்போது சென்னையில் ரியல் எஸ்டேட் துறை நல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே சொத்துகள் வாங்க இது சரியான தருணம் என்று கிரடாய் அறிவித்துள்ளது. கடந்த காலத்தில் பெரும் பின்னடைவைச் சந்தித்த இந்த துறை தற்போது நல்ல வளர்ச்சி கண்டு வருவது என்பது மிகுந்த ஊக்கத்தை அளிக்கிறது. எனவே, இப்போது வணிக கட்டிடங்கள், வீடுகள், பிளாட்டுகள் வாங்குபவர்களுக்கு இது சரியான காலக்கட்டமாகும் என்று கிரடாய் சென்னை பிரிவு தலைவர் சிவகுருநாதன் தெரிவித்தார்.     மேலும் அவர் கூறுகையில், தற்போது வீடுகள் அல்லது பிளாட்கள் வாங்குவதற்கு இது சரியான தருணம் ஆகும். இன்று கட்டுமான நிறுவனங்கள் விளம்பரம் செய்யும் குறைந்த விலையை இனி வரும் காலங்களில் எதிர்பார்க்க முடியாது.   மொத்த கட்டுமான செலவில் ஸ்டீல், மணல், சிமெண்ட் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட கட்டுமான பொருட்களின் செலவானது 65 சதவீதம் வரை ஆகிறது. இது கட்டுமான நிறுவனங்களுக்கு

முழுமையாக முடிவடைந்தது ஒரு பாடல் தவிர்த்து, சமந்தாவின் “யசோதா” படப்பிடிப்பு

  முன்னதாக வெளியான சமந்தாவின் 'யசோதா' படத்தின் ஃபர்ஸ்ட் க்ளிம்ப்ஸே இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், படக்குழு தற்போது ஒரு பாடலைத் தவிர்த்து, முழு படப்பிடிப்பிபையும் முடித்துள்ளது. மூத்த தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் Sridevi Movies தயாரிப்பு நிறுவனம் சார்பில் தங்களின் 14வது தயாரிப்பாக இப்படத்தை தயாரித்து வருகிறார். திறமையான இயக்குநர் கூட்டணியான ஹரி-ஹரிஷ் இணைந்து இப்படத்தை இயக்குகிறார்கள் தயாரிப்பாளர் சிவலெங்க கிருஷ்ண பிரசாத் கூறுகையில்.., இப்படத்தை எந்த சமரசமும் இல்லாமல் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரித்து வருகிறோம். இதுவரை 100 நாட்கள் கடந்து படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னும் ஓர் பாடல் தவிர்த்து படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துவிட்டது. ஒரு பாடலின் படப்பிடிப்பிற்காக சிஜி வேலைகள் ஏற்கனவே நடந்து வருகிறது. இம்மாதம் 15ஆம் தேதி முதல் டப்பிங் பணிகள் தொடங்கும் நிலையில், மற்ற மொழிகளுக்கான டப்பிங் பணியை ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளோம். மேலும், இந்த பான்-இந்தியப் படத்தை பெரிய அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். படத

ZEE Studios, Trident Arts and Naad Sstudios பெருமையுடன் வழங்கும் ‘லேடி சூப்பர்ஸ்டார் 75’

  ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், நடிகை நயன்தாராவின் புதிய திரைப்படம் ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’, இன்று காலை (ஜூலை 12, 2022) எளிமையான பூஜையுடன்  துவங்கப்பட்டது. ஏறக்குறைய 2 தசாப்தங்களாக திரைத்துறையில் கோலோச்சும், நடிகை நயன்தாராவின் 75வது படமாக இப்படம் உருவாகிறது. லேடி சூப்பர்ஸ்டார், நயன்தாராவின் உடைய இந்த  திரைப்பயணத்தில், அவர் மிக கடின உழைப்பினாலும் மற்றும் திறமை மிகு நடிப்பினாலும்,  தன்னை மிகச்சிறந்த நடிகையாக திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக  ஜெட் வேகத்தில்  முன்னேறியுள்ளார். அவரது அற்புதமான நடிப்பு மற்றும் அவர் ஏற்று நடிக்கும் வலுவான கதாபாத்திரங்களின் மூலமாக, அவர் கிட்டத்தட்ட இருபது ஆண்டு காலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை தொடர்ந்து மகிழ்வித்துள்ளார். நடிகை நயன்தாரா இப்போது தனது மைல்கல்லான 75வது படத்தில் அறிமுக இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ZEE Studios, Trident Arts and Naad Sstudios இணைந்து தயாரிக்கும், இந்த “லேடி சூப்பர் ஸ்டார் 75” திரைப்படம் இன்று காலை சென்னையில் ஒரு எளிய பூஜையுடன் தொடங்கப்பட்டது. இந்தப் படத்த

“நெஞ்சுக்கு நீதி” திரைப்பட 50 வது நாள் வெற்றி கொண்டாட்டம்

  தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”. சமூக அவலத்தை சாடும் ஒரு அழுத்தமான திரைப்படமாக, ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்ட இப்படம், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து பெரும் வெற்றியை பெற்றுள்ளது. வசூல் ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்த நிலையில், படக்குழு இன்று படத்தின் 50 வது நாளை பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கொண்டாடினர். முதலில் மேடையேறி நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் போனிகபூர் நடிகர் உதயநிதி, ரெட் ஜெயன்ட் மூவீஸ் இணைத் தயாரிப்பாளர்கள் M.செண்பகமூர்த்தி, R.அர்ஜூன் துரை ஆகியோருக்கு தங்க செயின் அணிவித்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜுக்கு மோதிரம் அளித்தார். மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு பரிசுகள் அளித்தார். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் போனிகபூர் பேசியதாவது…, “இந்த படத்தின் வெற்றியை உங்களுடன் கொண்டாடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நெஞ்சுக்கு நீதி படக்குழுவுடன் பணிபுரிந்தது மிக மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் நிறுவன

கப்பலில் பணியாற்றியவர்களால் எடுக்கப்பட்ட ‘ஃபாரின் சரக்கு’ ஜூலை 8 ஆம் தேதி வெளியாகிறது

நெப்டியூன் செய்லர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கோபிநாத் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஃபாரின் சரக்கு’. முழுக்க முழுக்க புதுமுக நடிகர், நடிகைகள் நடித்துள்ள இப்படம் வரும் ஜூலை 8 ஆம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரித்து முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் கோபிநாத், படத்தை இயக்கியிருக்கும் விக்னேஷ்வரன் கருப்புச்சாமி, படத்தின் இணை தயாரிப்பாளராக பணியாற்றியதோடு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் சுந்தர் ஆகிய மூன்று பேரும் கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்த போதே குறும்படங்களை எடுத்துள்ளனர். பிறகு மூவருக்கும் சினிமா மீது இருந்த ஆசை மற்றும் ஆர்வத்தினால் திரைப்படத்துறையில் நுழைவதென்று முடிவு செய்துள்ளனர். அதன்படி, தங்களைப் போல் சினிமா மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு தங்களுடைய படம் மூலம் வாய்ப்பளிக்க வேண்டும் என்று முடிவு செய்த இவர்கள், ‘ஃபாரின் சரக்கு’ படத்தில் நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என 300 கலைஞர்களை அறிமுகம் செய்துள்ளனர். வரும் ஜூலை

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் “மூத்தகுடி”

  தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்து பலரின் பாராட்டைப் பெற்ற “சாவி” திரைப்படத்தை தொடர்ந்து தங்களது இரண்டாவது படமாக “முத்தகுடி” என்று பெயரிடப்பட்டுள்ள படத்தை தயாரிக்கின்றனர். இப்படத்தில் ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியான முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம், மற்றும் சாவி படத்தில் கதாநாயகனாக நடித்த பிரகாஷ் சந்திராவும், மாயாண்டி குடும்பத்தார் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த தருண்கோபியும் இணைந்து நடிக்கின்றனர். வெல்டன், கடைசி பெஞ்ச் கார்த்தி உள்ளிட்ட படங்களை இயக்கிய ரவி பார்கவன் “முத்தகுடி” படத்தின் திரைக்கதை எழுதி இயக்குகிறார். விசாகப்பட்டினத்தை சேர்ந்த அன்விஷா இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இப்படத்தில் R.சுந்தர்ராஜன், ராஜ்கபூர், சிங்கம் புலி, யார் கண்ணன், சாம்ஸ் உள்ளிட்ட பலர் நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு பழம்பெரும் நடிகை K.R.விஜயா நடிக்கிறார். 1970களில் கோவில்பட்டி அருகில் நடந்த உண்மை சம்பவத்தை படமாக்குகிறார்கள். எனவே 1970 மற்றும் 1980களில் உள்ளது போன்ற இடங்களை தேர்வு செய்து படப்படிப்பு நடத்துகின்றனர். கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவி

தமிழ் சினிமாவின் பெருமையை உலகின் உச்சிக்கு கொண்டுசென்ற ‘கடைசி விவசாயி’

இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'கடைசி விவசாயி'. நல்ல படங்களைத் தயாரிப்பதில், ஒரு தயாரிப்பாளராக ‘மேற்குத் தொடர்ச்சி மலை’யின் உச்சியில் அமர்ந்திருக்கும் விஜய் சேதுபதியின் இன்னொரு பெருமை மிகு தயாரிப்பும் கூட இந்த ‘கடைசி விவசாயி’. கடந்த 100 ஆண்டுகால தமிழ் சினிமாவின் தலை சிறந்த படம்’, மண் மணம் வீசும் காவியம்’ என்பது போன்ற உயர்ந்த அபிப்ராயங்களுடன் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம், தியேட்டர் வசூலில் தயாரிப்பாளருக்கு சாதகமாக அமையவில்லை.. இருப்பினும் 'கடைசி விவசாயி' படத்தை பார்த்த ரசிகர்கள் கதையின் நாயகனாக நடித்த நிஜ விவசாயி நல்லாண்டி ஐயா அவர்களையும், உலகத்தரம் வாய்ந்த படத்தைத் தயாரித்து அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் வாழ்ந்த 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியின் நடிப்பையும் பாராட்டினார்கள். பல திரையரங்குகளில் படம் நிறைவடைந்ததும் பார்வையாளர்கள் எழுந்து நின்று அரங்கம் அதிர கரவொலி எழுப்பி தங்களின் பாராட்டைத் தெரிவித்தனர். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு விருதுகளையும்,

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'காட் பாதர்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் தயாராகி வரும் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதற்கான வீடியோ வெளியாகியிருக்கிறது. அத்துடன் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தின் போது 'காட் ஃபாதர்' திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் பிரம்மாண்டமான திரைப்படம் 'காட் ஃபாதர்'. மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்தை முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான வீடியோ, ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் 'காட் ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி முதன் முறையாக ஸ்போர்ட்ஸ் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கருப்பு நிற ஆடை அணிந்து நாற்காலியில் தனக்கே உரிய பாணியில் ஸ்டைலாக அமர்ந்தபடி தோற்றமளிப்பது ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருக்கிறது. முன்னணி இயக்குநர் ம

'மெட்ராஸ்' ஹரி, 'டூலெட்' ஷீலா நடிக்கும் புதிய படம் - துவங்கி வைத்த பா.ரஞ்சித்

மஞ்சள் சினிமாஸ் சார்பில் கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நடிகர் ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்கிறார். இயக்குநர் பா.ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தில் ஜானியாக தோன்றி அனைவரையும் கவர்ந்த நடிகர் ஹரிகிஷ்ணன் இந்த படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக டூலெட், மண்டேலா திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகை ஷீலா ராஜ்குமார் நடிக்கிறார். கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்குகிறார். A.குமரன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, வெங்கட் ரமணன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். சிவசங்கர் வசனம் எழுதுகிறார். ஸ்டில் கேமரா மேனாக M.குமரேசன் பணிபுரிய, புரொடக்‌ஷன் மேனேஜராக T.ராஜன், மக்கள் தொடர்பாளராக A. ஜான் பணிகளை மேற்கொள்கின்றனர். இந்தப்படத்தின் துவக்க விழா சென்னையில் ஜூலை-6 (இன்று) நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித் இந்த தொடக்க நிகழ்வில் கலந்துகொண்டு இப்பட பணிகளை துவங்கி வைத்தார். நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்கையில் நடக்கும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்ப

பொதுத்தேர்வில் வென்ற மாணவர்களுக்கு தங்க நாணயம் பரிசளித்து கவுரவித்த தளபதி விஜய் மக்கள் இயக்கம்

தளபதி விஜய்யின் பிறந்தநாள் என்பது அவரது ரசிகர்களால் கிட்டத்தட்ட ஒரு மாத அளவிற்கு மிகப்பெரிய திருவிழாவாகவே கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஜூன் மாதம் ஆரம்பத்தில் இருந்தே அவரது ரசிகர்கள் தளபதி விஜய்யின் பிறந்தநாளை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வாக தொடர்ந்து கொண்டாடி வருகின்றனர். தளபதி விஜய்யின் பிறந்தநாள் கடந்து சென்ற நிலையிலும் கூட அந்த கொண்டாட்டமும் நலத்திட்ட உதவிகளும் தற்போதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தொண்டர் அணி தலைமை சார்பில், தாம்பரம் மார்க்கெட் சண்முகா சாலையில் ரூ 6 லட்சம் மதிப்பில் 648 நபர்களுக்கு மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி அகில இந்திய விஜய் மக்கள் இயக்க மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சமீபத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகள் 15 பேருக்கு தங்க நாணயம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும் 3 பேருக்கு இஸ்திரி பெட்டி, சாலையோர வியாபாரம் செய்யு

‘விஜய் குருதியகம்’ ; விஜய் மக்கள் இயக்கத்தினரின் உயிர் காக்கும் புதிய முன்னெடுப்பு

இளைஞர்கள் சக்தியை பயனுள்ளதாக மாற்றும் விதமாகத்தான் தளபதி விஜய்யின் ரசிகர்கள், விஜய் அகில இந்திய நற்பணி இயக்கம் மூலமாக தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டப் உதவிகளை செய்து வருகின்றனர். அடித்தட்டு மக்களுக்கு உணவுப்பொருட்கள், அவர்கள் வாழ்வாதாரத்திற்கான தையல் மிஷின், இஸ்திரி பெட்டி உள்ளிட்ட உபகரணங்கள், மாணவர்களுக்கான கல்வி உதவி என தேவைப்படுவோருக்கு தேவையான உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் புஸ்ஸி என்..ஆனந்த் அவர்களின் வழிகாட்டுதலின்படி உரிய நேரத்தில் தொடர்ந்து வழங்கி வருகின்றனர். அந்தவகையில் தற்போது தளபதி விஜய் மக்கள் இயக்கத்தால் தொடங்கப்பட்டுள்ள புதிய முன்னெடுப்பு தான் ‘தளபதி விஜய் குருதியகம்’.. ஆம்.. தானத்தில் சிறந்தது ரத்த தானம் என்பார்கள்.. அந்த ரத்த தானம் மக்களுக்கு எளிதாக கிடைக்கும் புதிய வழிமுறை தான் இந்த ‘தளபதி விஜய் குருதியகம்’.. விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் பலர் உரிய நேரத்தில் தேவைப்படும் ரத்தம் கிடைக்காமல் உயிரிழந்த நிகழ்வுகள் பல உண்டு. இந்த நிலை இனியும் தொடரக்கூடாது என்கிற விதமாகத்தான் ‘தளபதி விஜய் குருதியகம்’ என்கிற செயலியை (Mobile App) உருவாக்கியுள்ளனர். வ

பூரண குணமடைந்தார் நடிகர் டி.ராஜேந்தர்

சமீபத்தில் நடிகர் சிலம்பரசன் டி ஆரின் தந்தையும் பிரபல இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் உடல் நலம் குன்றிய நிலையில் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்லப்பட்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில், பூரணமாக குணமடைந்துள்ளார். சில தினங்களுக்கு முன் சென்னையில் திரு டி.ராஜேந்தருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனையில், அவருக்கு வயிற்றில் சிறிய இரத்த கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், அவருக்கு உயர் சிகிச்சை தரவேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இதையடுத்து அவர் உடல் நலன் கருதியும், உயர் சிகிச்சைக்காகவும், வெளிநாட்டுக்கு டி.ராஜேந்தர் அழைத்து செல்லப்பட்டார். நடிகர் சிலம்பரசன் டி ஆர் தன்னுடைய பணிகளை நிறுத்தி விட்டு, தன் தந்தையின் மேல் சிகிச்சைகான அனைத்து பணிகளையும் முன்னின்று செய்தார். வெளிநாட்டு மருத்துவமனையில் அவருக்கு மேல் சிகிச்சை தரப்பட்டது. சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், தற்போது முழுமையாக டி.ராஜேந்தர் குணமடைந்துள்ளார். மருத்துவர்கள் அவர் ஓய்வெடுக்க வேண்டுமென அறிவுறுத்தியால், அங்கேயே ஒரு மாதம் தங்கலாம்

மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் வாணி போஜன் நடிக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட இயக்குநர் விக்னேஷ் சிவன்

மாதம்பட்டி சினிமாஸ் & MJ Media Factory தயாரிப்பில், இயக்குநர் மார்க் ஜோயல் இயக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்திருக்கும் “கேசினோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் விக்னேஷ் சிவன் வெளியிட்டார். புதுமையான வகையில், ஒரு இரவில், ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும் பரபரப்பு சம்பவங்களை மையப்படுத்தி, ஒரு பரபரப்பான திரில்லராக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கே புதுமையான வகையில் ஒரு காமிக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக்கில் ஒரு குழுவின் துப்பாக்கி சண்டை, பணத்தை தேடி ஓடும் பாத்திரம் ஆகியவை காட்டப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் ரசிகர்களை இருக்கை நுனியில் வைத்திருக்கும் பரபரப்பான திரில்லரான இருக்கும் என்பதை உறுதி செய்கிறது. புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியான வேகத்தில் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் முழுக்க கோயம்புத்தூரில், இரவில் படமாக்கப்பட்டுள்ளது. படத்தின் காட்சிகளில் 70 சதவீதம் ஒரு கட்டிடத்திற்குள் நடக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. மெஹந்தி சர்க்கஸ் நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் முதன்மை பாத்திரத்தில

யோகி பாபு, கருணாகரன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “பன்னிக்குட்டி”

லைகா புரொடக்சன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும், Super Talkies சமீர் பரத் ராம் தயாரிப்பில், இயக்குநர் அனுசரண் இயக்கத்தில், யோகி பாபு, கருணாகரன் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம் “பன்னிக்குட்டி”. ஒரு அழகான காமெடி டிராமாவாக உருவாகியுள்ள இப்படம் ஜீன் 8 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் படக்குழு நேற்று பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர். இந்நிகழ்வினில் இசையமைப்பாளர் K கூறியதாவது... “பன்னிக்குட்டி” எனக்கு முக்கியமான படம், தொடர்ந்து சீரியஸான படங்களை செய்துகொண்டிருக்கும் வேளையில் இந்த படம் எனக்கு மிக நெருக்கமாக அமைந்தது. படத்தில் ஐந்து பாடல்கள் இருக்கிறது. இது உங்களுக்கு நிச்சயமாக பிடித்த படமாக இருக்கும். உங்களது ஆதரவு எங்களுக்கு தேவை. அறிமுக நாயகி லக்‌ஷ்மி பிரியா கூறியதாவது... இந்த படத்தில் பெரிய நடிகர் பட்டாளமே இருக்கிறது. அவர்களுடன் பணிபுரிந்தது பெரிய அனுபவம். படத்தின் என்னுடைய கதாபாத்திரம் அழகாக திரையில் கொண்டுவர ஒளிப்பதிவாளர் பெரிய உழைப்பை கொடுத்துள்ளார். இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் சிறப்பான பாடல்களை கொடுத்துள்ளார்கள். இது ஒரு நேர்மையான படம். எங

Ethiopian patient with Kyphoscoliosis (Anaconda Spine), treated successfully at SIMS Hospital

Chennai, 05 July 2022:  An expert group of surgeons from SIMS Hospital, a leading multispecialty hospital in the city, recently conducted a high-performance surgery to cure a severe case of Kyphoscoliosis. The 15 year old Ethiopian patient - Master Tesfaye Mengesha Mersha was diagnosed with severe Kyphoscoliosis, which in a spine surgery circle called ‘Anaconda Spine’, a 110 deformity of the upper spine in the chest area. Living with a dream of playing football, the spine deformity severely affected Mersha’s ability to walk coming in the way of his dream. The surgery was conducted by  Dr. K Appaji Krishnan ,  Senior Consultant Spine Surgeon, Asian Orthopaedic Institute, SIMS Hospital  with a panel of doctors & Nursing staff.   Mersha is suffering from Neurofibromatosis, a genetic condition which causes deformity in the spine.  Mersha was a normal boy till 6 years ago, when his parents started noticing a deformity in the upper back. The deformity has progressed to this severity over

சர்வதேச விருதுகளை பெற்ற "ஒற்று" திரைப்படம் ஜூலை 8ஆம் தேதி வெளியாகிறது

இந்தப் படத்தை இயக்கியவர் மதிவாணன் சக்திவேல். இது மதிவாணனின் மூன்றாவது படம். தனது முந்தைய படங்களைப் போலவே இப்படத்திலும் புதிய நடிகர்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் தனது மூன்று திரைப்படங்களின் கதை வரிசையில் வெவ்வேறு வகைகளை முயற்சித்துள்ளார். அவரது முதல் படமான "மகா மகா" ஒரு காதல் த்ரில்லர். அவரது இரண்டாவது திரைப்படமான "நுண்ணுணர்வு" டெலிபதியை அடிப்படையாகக் கொண்ட காதல் திரைப்படமாகும். "ஒற்று" ஒரு பரபரப்பான முடிவைக் கொண்ட ஒரு குடும்பத் திரைப்படமாகும். "ஒற்று" திரைப்படத்தில், ஒரு நாவல் எழுதும் எழுத்தாளர் பார்வையற்ற பெண்ணை சந்திக்கிறார். எழுத்தாளர் தனது அடுத்த நாவலுக்கு பார்வையற்ற பெண்ணின் தனிப்பட்ட கதையைப் பயன்படுத்த முயற்சிக்கிறார். இறுதியில் அவர் ஒரு பரபரப்பான தொடர்பை வெளிப்படுத்துகிறார். "ஒற்று" ஒரு அசாதாரண தமிழ் பெயர். ஒற்றுக்கான பொருளைக் கேட்டபோது, ​​ஒற்றுக்கு உளவு, ஒன்றாக இருத்தல் ஆகிய இரண்டு பொருள்கள் உண்டு என்கிறார் மதிவாணன். இந்த இரண்டு அர்த்தங்களும் படத்தின் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. :இந்த படம் கோவிட் லாக்டவுனின் போது படமாக

சென்னையை அடுத்த படப்பை - பனப்பாக்கத்தில் ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் வீட்டுமனை பிரிவு விற்பனை துவக்கம்

ஹரிணி புரமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் 75 வது திட்டமாக சென்னையை அடுத்த படப்பை - பனப்பாக்கத்தில் "ஸ்ரீ சாய் கார்டன்" DTCP - RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனை பிரிவு மற்றும் தனி வீடுகள் குடியிருப்புகள் திட்டம் மேளதாளங்கள் முழங்க பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது. இத்திட்டத்தினை அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைபின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, சென்னை உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி எம். புகழேந்தி, முன்னாள் குடியரசு தலைவர் அய்யா ஏபிஜே. அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகர் விஞ்ஞானி டாக்டர் V.பொன்ராஜ் ஆகியோர்கள் துவக்கி வைத்தனர். ஹரிணி பில்டர்ஸ் நிறுவனத்தின் சேர்மன் டாக்டர் கோ.ரமேஷ் அவர்கள் பேசுகையில், இந்த நிறுவனம் கடந்த 19 ஆண்டுகளில் சுமார் 10,000 வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று அவர்களின் இல்ல கனவுகளை நினைவாக்கித் தந்து, வெற்றிகரமாக 20 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில் சாதாரண சாமானிய மக்களும் தங்களின் இல்லக் கனவுகளை நினைவாக்கிக் கொள்ளும் வகையில், டிடிசிபி மற்றும் ரேரா அங்கீகாரம் பெற்ற சுமார் 325 வீட்டுமனைகள் இத்திட்டத்தில் உருவாக்கப்ப