முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிரைம் வீடியோ தமிழ் ஒரிஜினல் தொடர், சுழல் – தி வோர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை அபுதாபியில் நடைபெற்று வரும் IIFA வீக் எண்ட் 2022, 22வது பதிப்பில் பிரைம் வீடியோ இன்று அறிவித்தது

இந்த தொடர் ஜூன் 17 ஆம் தேதி பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் திரையிடப்படும் புஷ்கர் மற்றும் காயத்ரி எழுதி படைத்துள்ள சுழல் - தி வோர்டெக்ஸ் தொடரில் ராதாகிருஷ்ணன் பார்த்திபனுடன் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் வெளிவரும் சுழல் – தி வோர்டெக்ஸ் தொடர், தமிழ், ஹிந்தி,கன்னடம், மலையாளம் தெலுங்கு மற்றும் ஆங்கில மொழிகளுக்கு மேலாக பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஜப்பானிய மொழி, போலிஷ், போர்த்துகீசியம், காஸ்டிலியன் ஸ்பானிஷ், லத்தீன் ஸ்பானிஷ், அரபு மற்றும் துருக்கிய மொழி போன்ற கூடுதல் வெளிநாட்டு மொழிகளில் டயலாக் உடன் வெளிவரும் முதல் தொடராகும். ஜூன் 17 ஆம் தேதி அன்று பிரைம் வீடியோவில் சுழல் - தி வோர்டெக்ஸ் வெளியிடப்படும் என புஷ்கர் & காயத்ரியுடன் இணைந்து அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியா ஒரிஜினல்ஸ், தலைவர் அபர்ணா புரோஹித் 2022 IIFA வீக்எண்டில், அறிவித்தார். சமீபத்திய மற்றும் பிரத்யேகத் திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை, Amazon Originals, Amazon Prime Music மூலம்

’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக்

திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் பல வெற்றிப் படங்களைத் தயாரித்த திரு.சி.வி.குமார் தற்போது புதிதாக ’ரோம்காம்’ ஜானரில் தயாரித்துள்ள திரைப்படம் ‘டைட்டானிக். இதில் கலையரசன் நாயகனாகவும், ஆனந்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். இயக்குனர்கள் பாலா, சுதா கொங்காரா, பாலாஜி மோகன் ஆகியோரிடம் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய M.ஜானகிராமன் கதை திரைக்கதை வசனம் எழுதி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவைத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி கோயமுத்தூர் கொடைக்கானல் பெங்களூரு ஆகிய இடங்களில் நடைபெற்றது. இதில் பிற முன்னனி கதாப்பாத்திரங்களில் காளி வெங்கட், ஆஷ்னா ஷவேரி, ‘ஜாங்கிரி’ மதுமிதா, ராகவ் விஜய், சேத்தன், தேவதர்ஷினி, சுதா ஆகியோர் நடித்துள்ளனர். . மேலும் இப்படத்தில் ‘இயக்குனர்’ பாலாஜி மோகனும், நடிகை காயத்திரியும் ‘cameo’ appearance’ல் நடித்துள்ளனர். ‘தெகிடி’ ‘சேதுபதி’ புகழ் நிவாஸ்.கே.பிரசன்னா இசை அமைத்துள்ளார். பல்லு ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்குனராக ராம் பிரசாத்தும், எடிட்டிங்கை ராதாகிருஷ்

ஆஹா தமிழ் மற்றும் கூகுள் குட்டப்பாவுடன் கரம் கோர்க்கும் பூர்விகா

தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார் நடிப்பில் வெளியான ‘கூகுள் குட்டப்பா’, ஜூன் 3ஆம் தேதி முதல் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது. இதற்காக பிரத்யேக முன்னோட்டம் வெளியிடப்பட்டது. ‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், நடிகை லாஸ்லியா, கே. எஸ். ரவிக்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘கூகுள் குட்டப்பா’. இந்த திரைப்படம் ஆஹா டிஜிட்டல் தளத்தில் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதியன்று வெளியாகிறது. தமிழகத்தின் முன்னணி செல்போன் விற்பனை நிறுவனமான ‘பூர்விகா’ ஆஹா டிஜிட்டல் தளத்துடன் கரம் கோர்த்து , தனது கோடம்பாக்கம் கிளை அலுவலகத்தில் வாடிக்கையாளர்களின் முன்னிலையில் ‘கூகுள் குட்டப்பா’ படக்குழுவினருடன் பிரத்யேக நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் பூர்விகாவின் வணிக பொது செயலாளர் திரு சிவக்குமார், ஆஹா டிஜிட்டல் தமிழ் வணிக பிரிவின் தலைவர் சுரேஷ், தயாரிப்பாளரும், நடிகருமான கே எஸ் ரவிக்குமார், நடிகர் தர்ஷன், நடிகை லாஸ்லியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பூர்விகா அறிவித்த, ஆஹா டிஜிட்டல் தள சந்தாதாரருக்கான பரிச