முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

51-வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் வெற்றிப் பெற்ற ”தேன்”

என்னுடைய தமிழ் திரைப்படம் ”தேன்” கோவாவில் நடைபெறும் 2020-க்கான 51-வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் வெற்றிப் பெற்று இருப்பதோடு, சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியும் இருக்கிறது என்பதை திரைப்படம், அச்சு ஊடகங்கள், தொலைக்காட்சி, வானொலி, வலைதள ஊடகங்கள் மற்றும் யூடியூப் ஊடகத்தார்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்தப் படத்தில் பணிபுரிந்த என் குழுவினர்களுக்கும் இந்தப் படத்தை அங்கீகரித்த 51-வது இந்தியன் பனோரமா 2020 சர்வதேச திரைப்பட விழா தேர்வுக்குக் குழுவினர்களுக்கும், மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகத்திற்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இந்த்த் திரைப்படத்திற்கு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும், விமர்சனங்களும் இந்தத் திரைப்படத்தை பற்றி வெளிவந்த செய்திகளும் என் திரைப்படத்திற்கு பெரும் ஊக்கமாக இருந்தது. .உங்களுடைய ஆதரவையும் பங்களிப்பையும் எண்ணிப் பார்க்கையில் உங்களைப் பாராட்ட வார்த்தைகள் வரவில்லை. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அம்பலவாணன். B, பிரேமா. P (AP PRODUCTIONS), படத்தை வெளியிடும் "டிரைடன்ட் ஆர்ட்ஸ

ஜனவரி 21 ம் தேதி வெளியாகிறது “ஆண்கள் ஜாக்கிரதை“

“உளி“ மற்றும் “வந்திய தேவன் மீது ஒரு பி.சி.ஆர்  வழக்கு “ என்ற இரண்டு படங்களை தயாரிக்கிறார்  G.முருகானந்தம்.  ஜனவரி 21 ம் தேதி வெளியாகிறது “ஆண்கள் ஜாக்கிரதை“ தயாரிப்பாளர் G.முருகானந்தம் தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில்  மரப்பாச்சி என்ற திகில் படத்தை தயாரித்தது மட்டுமல்லாது திருப்பதிசாமி குடும்பம், ஆண்கள் ஜாக்கிரதை போன்ற படங்களுக்கு பைனான்ஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தற்போது தனது ஜெம் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் “ ஆண்கள் ஜாக்கிரதை “ படத்தை வருகிற ஜனவரி 21 ம் தேதி தமிழகமெங்கு வெளியிடுகிறார். “ ஆண்கள் ஜாக்கிரதை “ இது ஒரு வித்தியாசமான திரில்லர் படம். அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களையும் தவறு செய்ய தூண்டும். அதனால் என்ன மாதிரியான விளைவுகளை சந்திக்கிறார்கள் என்பதுதான் இந்த படத்தின் திரைக்கதை.   ஒரு ஆண் தவறு செய்தால் அந்த குடும்பம் மட்டும்தான் சிதையும். ஆனால் ஒரு பெண் தவறு செய்தால் அந்த சமுதாயமே அழியும் என்ற கருத்தை சொல்கிறோம். இந்தியாவிலேயே முதன் முறையாக 2000 முதலைகளை வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் இது. இதை தொடர்ந்து தயாரிப்பாளர் G.முருகானந்தம் உண்மைச் சம்பவங்க

The first 10 All New Nissan Magnite cars in Chennai rolled out from Autorelli Nissan, Nandanam in a grand convoy on Anna Salai

*Nissan Technology coupled with Japanese engineering, assembled in India *Maximum power and maximum torque *Offered in Manual Transmission & CVT variants Chennai, 30th December, 2020, - The All New Nissan Magnite finally rolled out in the streets of Chennai from the Nandanam Dealership of Autorelli Nissan.  After months of waiting this Big, Bold and Beautiful car finally hit the Chennai roads.  Present to flag off the first customers to receive deliveries of the cars were Mr. Arun Prasad, Regional Manager South, Nissan Motor India Pvt. Ltd., Mr. Prabhu Bakthavachalam Area Sales Manager, Nissan Motor India Pvt Ltd, Ms. Neha Chopra, CEO Autorelli Nissan and Mr. Ashnut Chopra Dealer Principal Autorelli Nissan. The first10 cars rolled out from the dealership in a grand convoy on Anna Salai amid a lot of fanfare and celebrations. Since its launch on the 2nd December 2020, the All New Nissan Magnite has received an overwhelming response from the customers across the country.  The Car has

ஸ்லிம் நயன்தாரா தர்ஷாகுப்தாவின் "ருத்ரதாண்டவம்"

'பழைய வண்ணாரப்பேட்டை, 'திரௌபதி' படங்களின் இயக்குனர் அடுத்து 'ருத்ரதாண்டவம்' படத்தை இயக்குகிறார். இதில் நாயகனாக திரௌபதி படத்தில் நடித்த ரிச்சர்டு ரிஷி நடிக்கிறார், இப்போது நாயகியாக தர்ஷா குப்தா இணைந்துள்ளார். பிரபல மாடல் அழகியாகவும், பல்வேறு விளம்பர படங்களிலும், விஜய்டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளியில்  பிஸியாக நடித்து வந்த தர்ஷா குப்தாவிற்கு நாயகி வாய்ப்பு தேடி வந்துள்ளது. சமூகவலைதளங்களில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர், எப்போதும் கவர்ச்சியான போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. தர்ஷா குப்தா கூறியதாவது, ருத்ரதாண்டவம் படத்தில் ஒப்பந்தமானது முதல், தொடர்ந்து பல கதைகள் வந்த வண்ணம் உள்ளன. திரொபதி பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்த மோகன் ஜியின் அடுத்த ருத்ரதாண்டவம் படத்திற்கு, இப்போதே கோடம்பாக்கத்தில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மோகன்ஜி படத்தில் நடிப்பது எல்லையில்லா மகிழ்ச்சியை தருகிறது. இந்தப்படமும் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத படமாக இருக்கும், என் சினிமா கேரியரில் முதல் படமே தமிழ்சினிமாவின் கவனிக்கப்பட்ட  படைப்பை கொடுத்த, மோகன்

எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் இணைந்தார் நடிகை ப்ரியா பவானி சங்கர்

எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல” படத்தில் நாயகியாக இணைந்திருக்கிறார் நடிகை ப்ரியா பவானி சங்கர். சமீபத்தில் அறிவிக்கப்பட்ட படத்தின் தலைப்பு பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ப்ரியா பவானி சங்கர் படத்தில் இணைந்திருக்கும் அறிவிப்பு, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.  இது குறித்து இயக்குநர் ஓபிலி. N.கிருஷ்ணா கூறியதாவது... நடிகை ப்ரியா பவானி சங்கர் ஏற்கவுள்ள கதாப்பாத்திரம் சிறியளவிலான பாத்திரம் அல்ல, கதையில் மிகவும் முக்கியமான பாத்திரம். அவர் கௌதம் கார்த்திக் கதப்பாத்திரத்தின் ஜோடியாக நடிக்கிறார். அவர் ஒரு தாசில்தாராக வருகிறார். அவரது பாத்திரத்திற்கான தனித்தன்மை படத்தில் உள்ளது. கதையின் போக்கோடு ஓடிவிடாமல் ரசிகர்கள் ரசிக்கும்படி அவரது கதாப்பாத்திரம் இருக்கும். மார்ச் மாதம் 2021 ல் படத்தின் படப்பிடிப்பை துவக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவை தேர்ந்தெடுப்பதில் படக்குழு தீவிரமாக இயங்கி வருகிறது. பணியாற்றவுள்ள முழுமையான குழுவின் அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.  தயாரிப்பாளர் K.E.ஞான

கடவுளும் நானும்ராஜீவ் மேனன் மதன் கார்க்கி இணைந்து உருவாக்கிய புதிய தமிழிசைப் பாடல்

மார்கழி மாத இசை விழாக்களில் பெரும்பாலும் பழந்தமிழ்ப் பாடல்களே பாடப்படுகின்றன. இந்த ஆண்டு இயக்குநர் ராஜீவ் மேனனும் பாடலாசிரியர் மதன் கார்க்கியும் இணைந்து புதிய தமிழ்சைப் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளனர். ‘கடவுளும் நானும்’ எனும் தலைப்பில் அந்தப் பாடல் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது. இயக்குநர் ராஜீவ் மேனன் இசைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய இசையமைப்பில் சர்வம் தாளமயம் படத்தில் ‘வரலாமா உன்னருகில்’ எனும் பாடல் வெளியாகி இசை இரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலை எழுதிய பாடலாசிரியர் மதன் கார்க்கி திரைப்படப் பாடல்கள் அல்லாது நூற்றுக்கணக்கான தனியிசைப் பாடல்களையும் வெளியிட்டுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவாகி வெளியாகும் ‘கடவுளும் நானும்’ எனும் பாடல் கடவுளுக்கும் மனிதனுக்குமான நெருக்கத்தைப் பற்றி பாடுகிறது. இந்தப் பாடலுக்கு ராஜீவ் மேனன் காம்போஜி ராகத்தில் மெட்டமைத்துள்ளார். இந்தப் பாடல் மைலாப்பூரில் நடந்த ஒரு இசை விழாவில் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. இப்போது இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகிறது. இதே போல் இன்னும் பல தமிழிசைப் பாடல்களை ராஜீவ் மேனனும் மதன் கார்க்கியும் உ

தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி மனு

தமிழகத்தில் சாதி வாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தக்கோரி, வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலரிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத்தலைவர் முனைவர். சாம் பால் மனு அளித்தார் . தமிழகத்தில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டு முறையை மாற்றி, தமிழகத்தில் அதிக மக்கள்தொகையைக் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினத்தவர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, தமிழகம் முழுவதும் சாதி வாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தினால் மட்டுமே சமூக நீதியைக் காக்க முடியும் என வலியுறுத்தி, சென்னை வேளச்சேரி வட்டாட்சியர் அலுவலமத்தில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை மனு அளிக்கும் போராட்டம் நடைபெற்றது.  பாமக மாநில துணை பொதுச் செயலாளர் தி.இரா.சகாதேவன் தலைமையில் நடைபெற்ற இந்த மனு கொடுக்கும் போராட்டத்தில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பாமகவினர் பங்கேற்று சாதி வாரி கணக்கெடுப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில் கோஷங்களை எழுப்பினர். பின்னர் பாமக மாநில துணைத் தலைவர் முனைவர். சாம் பால், வ

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார்.. அன்றே சொன்ன ‘டிரெண்டிங் ஜோதிடர்’ பாலாஜி ஹாசன்

நடந்து முடிந்த அமெரிக்கா தேர்தலில் உலகமே டிரம்ப் அவர்கள் ஜெயிப்பார் என கருத்துகளை வெளியிட்ட நேரத்தில் 300 முதல் 310 இடங்களை பெற்று ‘ஜோ பைடன்’ தான் வெற்றி பெறுவார் என கணித்து அசத்தினார் ‘டிரண்டிங் ஜோதிடர்’ பாலாஜி ஹாசன். அதே போன்றே இலங்கை தேர்தலிலும் அவர் கணித்தது போலவே ராஜபக்சே வெற்றி பெற்றார். அதற்கு முன்னரும் 34 க்கும் அதிகமான தேர்தல் முடிவுகளை முன்கூட்டியே கணித்து தனது யூடியூப் தளத்தில் வெளியிட்டு பார்ப்பவர்களை அதிசயப்படுத்தி வருகிறார். இப்படி தொடர்ச்சியாக ஜோதிட உலகில் பல்வேறு அதிசயங்களை நிகழ்த்தி வரும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் அவர்கள், தமிழக அரசியலில் முக்கியமானதாகப் பார்க்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டார் என இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே News7 தொலைக்காட்சியிலும், வேந்தர் தொலைக்காட்சியிலும் மிகச் சரியாக கணித்துக் கூறினார் என்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

WABAG To Leverage On Advanced Technologies In Post-COVID World

VA TECH WABAG LIMITED (‘WABAG’), a leading Pure Play Water Technology Indian Multinational, with business spread across varied geographies, today shared their focus on pioneering and providing sustainable technology led innovations that are helping in treating and extending the life span of usage of the most important resource “Water”. Post COVID, water has become an extreme focus area not only in India but across the world. The heightened sense of hygiene due to the pandemic has resulted in an increase in water consumption in a first. Water joined gold, oil and other commodities traded on Wall Street, highlighting the fact that the life-sustaining natural resource may become more scarce acrossof the world. The focus on water crisis and conservation and the Governments spending through various schemes and policies to meet the ever growing demand for water presents a huge opportunity for VA Tech WABAG for future business. The company has state-of-the-art Research and Development centers

இயக்குநர் அவதாரம் எடுக்கும் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன்

ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம் ஒர்க்ஸ் நிறுவனத்தின், சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை தயாரிக்கும் 'மார்க்கண்டேயனும் மகளிர் கல்லூரியும்' படத்தை இயக்குகிறார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் ரவீந்தர் சந்திரசேகரன் இயக்குநராக அறிமுகமாகிறார். 'நளனும் நந்தினியும்', 'சுட்டக்கதை', 'நட்புனா என்னான்னு தெரியுமா', 'முருங்கக்காய் சிப்ஸ்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். இவற்றுடன் கார்த்திக் சுப்புராஜின் அசோசியேட் விஜயராஜ் இயக்கத்தில் பரத், மிர்சி செந்தில், கரு.பழனியப்பன், விஜய் டிவி அசார் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகும் 'முன்னறிவான்' படத்தை தயாரித்து வருகிறார். 'மிக மிக அவசரம்', 'கூர்கா', 'சங்கத் தமிழன்' உள்ளிட்ட படங்களை விநியோகம் செய்துள்ளார். அந்த வரிசையில் 'அதோ அந்தப் பறவை போல' படம் விநியோகத்துக்கு தயாராக உள்ளது. தற்போது, இவர் ஃபர்ஸ்ட் மேன் ஃபிலிம் ஒர்க்ஸ் சரவணப்பிரியன்.ஆர். மற்றும் சிவதுரை தயாரிப்பில் உருவாகும் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்திற்க

இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள ‘குதிரைவால்’ திரைப்படம், கேரள சர்வதேச திரைப்பட விழாவிற்கு இந்தியப் பிரிவில் திரையிட தேர்வு

2018-ஆம் ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' படத்தின் மூலம் தயாரிப்பாளராக மாறினார், இயக்குநர் பா. ரஞ்சித். அப்படம் அவ்வருடத்தின் சிறந்தப் படமாக கொண்டாடப்பட்டு விருதுகளைக் குவித்தது. அதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு, 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' படத்தையும் தயாரித்தார். அப்படமும் வெற்றி பெற்றது. இந்நிலையில், கடந்த ஆண்டு தனது நீலம் புரடொக்‌ஷன் மூலம், மேலும் 5 படங்களை தயாரிப்பதாக அறிவித்தார். அதில், ஒன்றுதான் ’குதிரைவால்’. இப்படத்தை யாழி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார். மனோஜ் லியோனல் ஜேசன் மற்றும் ஷாம் சுந்தர் ஆகியோர் இப்படத்தை இயக்க, கலையரசன் - அஞ்சலி பாட்டில் நடித்துள்ளனர். இப்படத்தின், டீசர் கடந்த அக்டோபர் 22 ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அறிவியல் புனைக்கதையில் அரசியல் வசனங்களும் இடம்பெற்று கவனம் ஈர்த்தது. இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12 ஆம் தேதியிலிருந்து 19 ஆம் தேதிவரை திருவனந்தபுரத்தில் கேரள அரசின் கலாசார விவகாரங்கள் துறையால் நடத்தப்படும் ’கேரள சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய பிரிவில் திரையிட தேர்வாகியிருக்கிறது.

எனிமி படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம்

  விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகும் எனிமி படத்தின் .படப்பிடிப்பு தற்போது EVP பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்புகளுடன் நடைபெற்றுவருகிறது . விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள் டூப் இல்லாமலால் எடுக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பின்போது ஆர்யாவிற்கு கையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பெற்று மீண்டும் இன்று படப்பிடிப்பில் ஆர்யா கலந்துகொண்டார் . அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .தமன் இசையமைக்க  RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் - ரவிவர்மா .

நடிகர் மன்சூரலிகான் அவரே பாடல்வரிகளை எழுதி, இசையமைத்து, பாடி,  நடித்துள்ள இசை ஆல்பம் “டிப் டாப் தமிழா“

தமிழ் சினிமாவில் கேப்டன் பிரபாகரன் படத்தின் மூலம் தன்னுடைய சினிமா பயணத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரங்களில் அசத்தி வந்த மன்சூர் அலிகான் தற்போது பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். நடிகர் மன்சூரலிகான் 1994 ஆம் ஆண்டே சில்க் சிமிதாவை வைத்து “ சிக்குச்சான் சிக்குச்சான்  சிக்குசிக்குச்சான்   “ என்ற இசை ஆல்பத்தை ஏழு தெம்மாங்கு பாடல்களை கொண்டு தயாரித்து வெளியிட்டிருந்தார் அந்த பாடல்கள் அப்போதே மக்கள் மத்தியில் பிரபலமானது. அதுமட்டுமல்லாது அவர் நடித்த “ ராஜாதிராஜ ராஜகுலோத்துங்க ராஜ மார்த்தாண்ட ராஜகம்பீர காத்தவராய கிருஷ்ண காமராஜன் என்ற படத்திற்கு ஐந்து பாடல்களோடு இசையமைத்து அசத்தியிருந்தார். அதை தொடர்ந்து தற்போது “ டிப் டாப் தமிழா “ என்ற இசை ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். இதில் அரசியல் விழிப்புணர்ச்சி பாடல், சமூகம், காதல், பாசம், உணர்வுகள் என்று பல பரிமாணங்களை கொண்ட ஆறு பாடல்களை கொண்டு இந்த  “ டிப் டாப் தமிழா “ இசை ஆல்பத்தை உருவாக்கியதோடு,அதற்கு பாடல் வரிகளை எழுதி, பாடி, இசையமைத்து, நடித்துள்ளார் என

BARRACKS Resto Bar launch at Venkatanarayana Road, T.Nagar

Party troopers of Chennai brace yourself for a new hangout in your neighbourhood. There’s a new aura coming to T.Nagar. Satisfy your senses and discover a new way to unlock your day at Barracks. A New restobar all set  in the heart of the town. Not often does one come across places which has amazing food, service and ambience, experience an atmosphere like nothing before. Barracks is a one-of-a-kind resto bar that fuses the lip-smacking delicacies and thrilling drinking experience. People of Chennai will be able to relish some authentic tasty menu by Chefs who apply splendid techniques and combinations that have stood the test of time.  If you are looking for a right spot to beat your stress then this is the place for you. Quirky interiors with swing with both Couple and Single Swing have been introduced inside the bar which is something you should never give amiss.  The resto bar is placed in a pristine location with classy atmosphere, private dining space, VIP lounge, cosy couch, mul

கிரண் அப்பாவரம் நடிக்கும் ‘செபாஸ்டியன் பி.சி. 524’ படத்தின் ஒரு காட்சியை லாவண்யா திரிபாதி வெளியிட்டார்

இளம் நடிகர் கிரண் அப்பாவரம் தனது முதல் படமான ‘ராஜா வாரு ராணி வாரு’ படத்தின் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து, திரைத்துறையின் கவனத்தை பெற்றவர். அப்படம் அசலான கிராமத்து கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டது. அவரது இரண்டாவது படமான ‘எஸ்ஆர் கல்யாணமண்டபம்’ ஹிட் பாடல்களால் பிரபலமானது. தற்போது அவரது மூன்றாவது படமான ‘செபாஸ்டியன் பி.சி. 524’ பார்வையாளர்களின் அன்பை பெற தயாராகிவிட்டது. ஒரு அசலான கதையுடன் அப்படம் வந்து கொண்டிருக்கிறது. இப்படத்தின் ஒரு காட்சியை நடிகை லாவண்யா திரிபாதி இன்று வெளியிட்டுள்ளார். பாலாஜி சய்யபுரெட்டி இயக்கும் இப்படத்தில் கிரண் நாயகனாக நடிக்கிறார். ப்ரமோத் மற்றும் ராஜு தயாரிக்கும் இப்படம் மாலை கண்நோயைப் பற்றியது. இன்று வெளியிடப்பட்ட அந்த காட்சியில் ஒரு தேவாலயம், இயேசுவின் புகைப்படம், மற்றும் படத்தின் ஹீரோ ஆகிய விஷயங்கள் தனித்துவமான முறையில் காட்டப்படுகின்றன. சுவாரஸ்யமான பின்னணி இசையுடன், ‘ஒரு தாயின் நீதிக்காக ஒரு தாயின் சத்தியம்’ மற்றும் ‘உண்மை என்றும் மறைவதில்லை’ உள்ளிட்ட வரிகள் காட்சியமைப்புடன் பொருந்திப் போகிறது. அந்த காட்சியின் மூலம், நாயகன் இரண்டு விதமான தோற்றங்களில் வருகிறார்

மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பா. இரஞ்சித்துக்கு வாழ்த்துகள்-பகுஜன் சமாஜ் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங்

”மார்கழியில் மக்களிசை 2020”  நிகழ்ச்சியின் 2-ஆம் நாளான நேற்று(25/12/2020), சிறப்பு விருந்தினாராக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கலந்து கொண்டு இசை கலைஞர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.  கடந்த 2018 ஆம் ஆண்டின் இறுதியில், புத்தாண்டை சமத்துவ புத்தாண்டாக கொண்டாட வானம் கலைவிழா எனும் நிகழ்ச்சியை இயக்குனர் பா. இரஞ்சித் ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்ச்சி பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அதன் நீட்சியாக தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதியில் 2021-ஆம் ஆண்டின் புத்தாண்டை கொண்டாடும் விதமாக நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நேற்று முன்தினம் தொடங்கியது தொடங்கியது. தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் 2-ஆம் நாளான நேற்று(25/12/2020) பாடகர்கள் தலித் சுப்பையா, ரோஜா ஆதித்யா, காஞ்சி பா.ராஜேஸ்வரி ஆகியோர் கலந்துகொண்டு பல்வேறு சமூக  சமூகப்பிரச்சனை பற்றிய பாடல்களை பாடினர். திண்டுக்கல் பறை இசை குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக

புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் ’மார்கழியில் மக்களிசை’- பா. இரஞ்சித்

மார்கழி மாதங்களில் நடத்தப்படும் பஜனை என்பதே பௌத்தப் பண்பாடு தான். புத்தர் உருவாக்கிய பண்பாட்டின் நீட்சி தான் இந்த ’மார்கழியில் மக்களிசை’ நிகழ்ச்சி என்று இயக்குனர் பா. இரஞ்சித் தெரிவித்துள்ளார். “தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்”, “ வானம்” போன்ற பண்பாட்டு மீட்பு இசை நிகழ்ச்சிகளை ஒவ்வொரு வருடமும் இயக்குநர் பா.ரஞ்சித் ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வரிசையில் இந்த வருடம் “நீலம் பண்பாட்டு மையம்” சார்பில் ”மார்கழியில் மக்களிசை 2020” எனும் மாபெரும் இசைத்திருவிழா நிகழ்ச்சி சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில தொடங்கியது.  இந்த நிகழ்ச்சியினை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், இயக்குனர் பா. இரஞ்சித் உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர். தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று நாட்டுபுறக் கலைஞர்களின் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் மதிப்புறு முனைவர் மதிச்சியம் பாலா, சுகந்தி, வி.எம். மஹாலிங்கம் ஆகியோர் பல்வேறு பாடல்களை பாடினர். சேலம் ஆதிமேலம் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியும், வேலு ஆசான் குழுவினரின் பறை இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக இந்த நிகழ்ச்சியை தொடங்கிவைத்து இயக்குனர் பா.

கொடிகாத்த குமரனாய் மாறிய அமைச்சர் ஜெயக்குமார்!

அதிமுக கொடியை ஏந்தியபடி பைக்கில் வலம் வந்து நான்கு மணி நேரத்தில் 40 நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அசத்தியிருக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்! எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் வடசென்னை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என அமைச்சர் ஜெயக்குமார் ஏற்பாட்டின் பேரில் நிகழ்ச்சிகள் களைகட்டி இருந்தன. ஒரே நாளில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அமைச்சர் பங்கேற்க முடியுமா என்ற சந்தேகம் கட்சி நிர்வாகிகள் பலருக்கும் ஏற்பட்டிருந்தது. இதையடுத்து காரில் வந்தால் சரிப்பட்டு வராது,நேரத்திற்கு செல்ல முடியாது, எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க முடியாது என்று எண்ணினார் அமைச்சர் ஜெயக்குமார். அதிரடியாக கட்சி நிர்வாகி ஒருவரது பைக்கில் அதிமுக கொடியை ஏந்தியபடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆரம்பித்தார். சென்னையின் பல்வேறு சாலைகளில் அமைச்சர் கொடியை ஏந்தியபடி செல்வதைப் பார்த்த கட்சி நிர்வாகிகள் பலரும் அவரோடு மற்ற பைக்குகளில் கொடி பிடித்தபடி இணைந்து கொண்டனர். காலையில் ஆரம்பித்த நிகழ்ச்சி நிரல் சூறாவளி சுற்றுப்பயணம் நான்கு மணி நேரம் தொடர்ந்தது. அடுத்தடுத்த இட

சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும்

பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் திரு.ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் ஹைதராபாத் தில் உள்ள   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. திரு.ரஜினிகாந்த் அவர்கள் நிறைந்த தைரியமுள்ளவர், அது மட்டுமல்லாது ஆன்மீகம் உள்ளவர். கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று விரைவில் குணமடைவார். அவர் வணங்கும் மாகாவதார் பாபாஜி யின் ஆசீர்வாதங்களை பெற்று அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் நம் முன் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

Pagaivanuku Arulvai Movie First Look Poster

 

ஆரி அர்ஜுனன் நடிப்பில் தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி திரைப்படம் 'பகவான்'..!

அம்மன்யா மூவிஸ் சார்பில் மஞ்சுநாதா தயாரிப்பில் ஆரி அர்ஜுனன் நடிக்கும் 'பகவான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று விஜய் டிவி பிக் பாஸ் இல் வெளியிடப்பட்டது. இப்படத்தில் கதாநாயகியாக பூஜிதா பொன்னாடா அறிமுகமாகிறார். இவர் தெலுங்கில் 11 க்கும் மேற்பட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் ஆடுகளம் நரேன், யோக் ஜேபி, ஜெகன், முருகதாஸ், டெல்லிகணேஷ் போன்ற முன்னணி நடிகர்களும் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் காளிங்கன். ஒளிப்பதிவு முருகன் சரவணன். எடிட்டிங் பணிகளை அதுல் விஜய் கவனிக்க பிரசன் பாலா இசையமைக்கிறார். இப்படத்தில்  சண்டை பயிற்சியாளராக ஹரி தினேஷ் பணியாற்றியுள்ளார். இப்படம் 80% முடிவடைந்த நிலையில் இறுதிகட்ட படப்பிடிப்பு வரும் ஜனவரி இறுதியில் நடக்க இருக்கிறது. இந்த பகவான் திரைப்படம்  தமிழில் உருவாகும் முதல் இலுமினாட்டி படமாகும். பகவான் Artistes ஆரி அர்ஜுனன் - Aari Arujunan பூஜிதா பொன்னாடா -Pujita ponnada யோக் ஜேப்பி.          - Yog Jappee ஆடுகளம் நரேன்.  - Adukalam Naren ஜெகன்.      

பத்திரிகையாளர் கோடங்கியின் குறும்பட டைட்டில், பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினத்தில் ரிலீசாகும்!

நீண்ட காலமாக உங்களில் ஒருவனாக பயணித்த நான் (கோடங்கி ஆபிரகாம்)  இப்போது அடுத்த நகர்வாக உருவாக்கியுள்ள குறும்படம் குறித்த அறிவிப்பை இன்று வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். ' ருச்சி சினிமாஸ்' & 'பாஸ்ட் மெஸெஞ்சர்'  இணைந்து வழங்கும் பெயரிடப்படாத "Short Film No. 1"  குறும்பட பர்ஸ்ட் லுக், டைட்டில் புத்தாண்டு அன்று  வெளியாகிறது. சமூகம் என்ற சுழலில் சிக்கி அவலமான தொழிலில் தள்ளப்படும் ஒரு இளம்பெண் அந்த சமூகத்தை எப்படி எதிர் கொள்கிறார் என்பதே குறும்பட கதை. நடிப்பு கலைஞர்கள்: கதை நாயகி - கயல்விழி, ஜோயல் பென்னட், 'திடீர் தளபதி' சதீஷ்முத்து, ஹிதயத்துல்லா, 'ஒற்றன்' துரை தயாரிப்பு நிறுவனம்:   ருச்சி சினிமாஸ் & பாஸ்ட் மெஸெஞ்சர்  தொழில் நுட்ப கலைஞர்கள்: ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: அனிஷ் ஆஞ்சோ  இசை: விசு விளம்பர வடிவமைப்பு: SMB கிரியேஷன் மணிபாரதி செல்வராஜ் செய்தி தொடர்பு: யுவராஜ்  தயாரிப்பாளர்: P. சுமித்ரா எழுத்து -  இயக்கம்:  கோடங்கி ஆபிரகாம்

Stars Bhanu and Suganya cook up a scrumptious treat in a special festive episode of Colors Kitchen

  ~ Tune into Colors Tamil on 26th and 27th December 2020 at 12 Noon for the special episodes   ~   Chennai, December 24, 2020:  As we get set for the holiday season with our families, Colors Tamil is geared up to jazz up the celebrations with a fun-filled episode of Colors Kitchen, this weekend. Watch our special guests Television Stars   Bhanu and Suganya  whip up some special dishes, along with renowned Chef Damu and Chef Shreeya. Here are three reasons not to miss the back to back episodes on COLORS Kitchen to be telecast on December 26 and 27 (Saturday and Sunday) at 12 pm noon:  Perfect treat:  Well-known for recreating flavoursome, authentic South Indian dishes, Chef Damu has lined up two mouth-watering delicacies this time, Kayalpattinam Nei Soru and Bhai Veetu chicken gravy. As always, Chef Damu will also share some special tips and flavour notes that will elevate the dish to another level. Starry affair:  Actors Bhanu and Suganya set the kitchen on fire with their culinary sk

இந்தியாவிற்கு மீண்டும் பெருமை சேர்த்தனர் வேலம்மாள் சதுரங்க வீரர்கள்

 உலகளவில் சிறந்த சதுரங்கப் பயிற்சி வீரர்களை இணையவழியில் தேர்ந்தெடுக்கும் 2020ஆம் ஆண்டிற்கான FIDE உலகளாவிய இணையவழிப் பயிற்சி வீரர்கள் மற்றும் இளையோருக்கான விரைவு சதுரங்கப் போட்டிகள் சமீபத்தில் நடைபெற்றன. இப்போட்டியில் பங்கேற்ற வேலம்மாள் வித்யாலயா, மேல் அயனம்பாக்கம் பள்ளியைச் சேர்ந்த சதுரங்க வீரர்களான டி. குகேஷ் (வகுப்பு IX) மற்றும் ரக்ஷிட்டா ரவி (வகுப்பு X) ஆகியோர் முறையே 14-வயதிற்குட்பட்டோருக்கான திறந்த வெளிப் போட்டி மற்றும் 16வயதிற்குட்பட்டோருக்கான பெண்கள் பிரிவு ஆகியவற்றில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றனர். இப்போட்டியில் ரக்ஷிட்டா ரவி தனது எதிராளியான சீனாவைச் சேர்ந்த சாங் யுக்சினுக்கு எதிராக முழுமையான புள்ளிகளைப் பெற்றும் டி. குகேஷ் தனது எதிராளியான ருஷ்யாவின் இளைய நட்சத்திர வீரர் வாளாடர் முர்ஷினை இறுதிச் சுற்றில் வீழ்த்தியும் உலகளவில் இந்தியக் கொடியினை உயரமாகப் பறக்க வைத்து நாட்டிற்கும் வீட்டிற்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்தனர். நினைவை விட்டு நீங்காத சாதனைகளைப் படைத்த சதுரங்க வீரர்களின் மகத்தான வெற்றியைப் பள்ளி நிர்வாகம் வாழ்த்திப்போற்றியது. மற்றும் அவர்களின் எதிர்கால முயற்சிகளு

ஸ்டூடியோ க்ரீன் K.E.ஞானவேல் ராஜா வழங்கும் “சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை” புகழ் ஓபிலி N. கிருஷ்ணா இயக்கத்தில் எஸ் டி ஆர், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “பத்து தல”

தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களின் ஸ்டூடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் வித்தியாசமான முயற்சிகள் மற்றும் தொடர் வெற்றி படங்களால் தென்னிந்திய சினிமாவின் மதிப்புமிகு அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. 15 வருட வெற்றிகரமான திரைப்பயணத்தில், அவரது தயாரிப்பில் வரிசையில் இருக்கும் அடுத்த கட்ட படங்கள், கண்டிப்பான வெற்றிப்படங்களுக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது.  எஸ் டி ஆர் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க ஓபிலி N. கிருஷ்ணா இயக்கத்தில் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படத்திற்கு “பத்து தல” எனப் பெயரிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஓபிலி N. கிருஷ்ணா அவர்களும் தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா அவர்களும் திரையுலகில் ஒன்றாக பயணத்தை தொடங்கியவர்கள். நீண்ட காலத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பது இருவருக்கும் பெரு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.  இது குறித்து தயாரிப்பாளர் K.E.ஞானவேல் ராஜா கூறியதாவது... ஸ்டுடியோ க்ரீன் (Studio Green) நிறுவனம் சார்பில் பிரமாண்ட இப்படத்தை அறிவிப்பது பெருமையாக உள்ளது. எஸ் டி ஆர்  அதீதமான சுறுசுற

தமிழ்நாடு திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் இருந்து டி.ராஜேந்திர் விலகல்

பாரம்பரியமிக்க சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன். எங்கள் சங்கத்தின் பொதுக்குழு வருகிற டிசம்பர் 27ம் தேதி காலை நடைபெற இருக்கிறது. எங்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களும், சங்கத்தின் நலம் விரும்பிகளும், ஏனைய சங்க உறுப்பினர்களும், திரையுலகத்திற்கு இருக்கும் இந்த சோதனையான காலத்தில் தலைவராக நான் இருக்கும் இந்த சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விருப்பமும் கோரிக்கையும் தெரிவித்தனர். எனவே அவர்களின் கோரிக்கையை ஏற்று சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் தலைவர் பதவியில் தொடர்ந்து பணியாற்றுவேன். எங்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு சமீபத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளகள் சங்கத்தின் (Tamilnadu Movie Makers Sangam) தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்து கொள்கிறேன் என்பதை தெரிவித்து கொள்கிறேன். இப்படிக்கு, டி. ராஜேந்தர் M.A

பாட்டுத் தமிழை மீட்டெடுப்போம் கலைப்படையோடு வருகிறேன் - கவிஞர் வைரமுத்து

90 ஆண்டுகளுக்கு முன்னால் பேசும் படம் தோன்றியபோது அது பாடும் படமாகவே பிறந்தது. வசனங்களைவிடப் பாடல்களே வரவேற்கப்பட்டன. பாடகனாகத் திகழ்ந்தவனே நடிகனாகக் கொண்டாடப்பட்டான். இதிகாசம் – புராணம் – இலக்கியம் - வரலாறு – சமூகம் – சீர்திருத்தம் – சமயம் – போராட்டம் எல்லாமே பாடல் வழியேதான் பரிமாறப்பட்டன. தமிழர்களுக்குப் பாட்டு என்பது கலைக்கருவி மட்டுமன்று; கற்பிக்கும் கருவி. தமிழர்களின் காதல், வீரம் – விழுமியம், பண்பாடு - பக்தி – பாரம்பரியம் – பொதுவுடைமை – பகுத்தறிவு – தேசியம் – திராவிடம் - குடும்பம் - தத்துவம், வெற்றி – தோல்வி, நம்பிக்கை – நிலையாமை, இறந்தகாலம் – எதிர்காலம் எல்லாவற்றையும் பள்ளி செல்லாமலே கற்றுக் கொடுக்கும் பாடப் புத்தகமாகப் பாட்டுப் புத்தகம் திகழ்ந்தது. பாடல்களுக்கு மத்தியில் கலைக்களைகளும் முளைத்திருக்கின்றன என்ற போதிலும் தமிழர்களின் ஒரு நூற்றாண்டு வாழ்வின் வழியே திரைப்பாடலும் தடம்பதித்தே வந்திருக்கிறது என்பதைப் பண்டித உலகம்கூட மறுதலிக்க முடியாது. தொல்லிசை அறிந்த பாவாணர்களும், பழந்தமிழ் அறிந்த பாவலர்களும், தங்கள் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கித் திரையிசையை உயர்த்தியிருக்கிறார்கள். வா

துணை முதல்வரிடம் ஆசி பெற்ற 'மிஸ் இந்தியா 2020' பாஷினி பாத்திமா..

டெல்லியில் நடைபெற்ற 'மிஸ் இந்தியா 2020' யில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக மாணவி பாஷினி பாத்திமா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் துணை முதல்வர் ஓ பி பன்னீர் செல்வம் அவர்களை சந்தித்து ஆசி பெற்றார். மாணவி பாஷினியுடன்  அவரது தங்கை பாவினி ஆயிஷாயும் இருந்தார்.. இருவரும் துணை முதல்வரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற போது துணை முதல்வர் அவர்களுக்கு  பரிசளித்தார்.

முதலில் சினிமா தொழிலாளர்கள் குடும்பத்தோடு படத்தை பாருங்க, அப்போ தான் சினிமாவை காப்பாற்ற முடியும் - தயாரிப்பாளர் கரிகாலன் வேண்டுகோள்

சினிமாவை காப்பாற்ற இப்போதைக்கு இதுதான் ஒரே வழி என சியான்கள் படத்தயாரிப்பாளர் கரிகாலன் கோரிக்கை ஒன்றை வைத்து வீடியோ வெளியிட்டுள்ளார். Actor Karikalan Request Video : தமிழ் சினிமாவில் வயதான 5 முதியோர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தான் சியான்கள். நாளை முதல் தமிழகம் முழுவதும் வெளியாக உள்ள இந்தத் திரைப்படத்தை கே எல் கரிகாலன் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ளார். வைகர பாலன் என்பவர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். நாளை படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் நடிகரும் தயாரிப்பாளருமான கரிகாலன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அரசாங்கம் நாம கொரானாவில் இருந்து மீண்டு வந்து விட்டோம் என சொல்லும் வகையில் தான் பஸ், ட்ரெயின், ஒயின் ஷாப் உள்ளிட்டவைகளை ஒவ்வொன்றாக திறந்து வருகிறார்கள். அரசாங்கத்தை நடத்த இதெல்லாம் தேவை என்பதால் தற்போது திறந்து உள்ளார்கள். அதைப்போல் ஒரு நகை கடைக்காரர் இருக்கிறார் என்றால் அவர் தன்னுடைய தொழிலை காப்பாற்றிக் கொள்ள பல்வேறு சலுகைகளை அறிவித்து வாடிக்கையாளர்களை கடைக்கு வர வைக்கிறார். இப்படியான நிலையில் தற்போது கரிகாலன் அவர

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகும் ‘வா பகண்டையா’

தமிழ் சினிமாவில் உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் பல படங்கள் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில்,  உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாகும் படம் ‘வா பகண்டையா’. படத்தின் தலைப்பே சற்று யோசிக்க வைக்கும் விதத்தில் இருப்பது போல, படத்தின் கதையும், படம் பார்ப்பவர்களை யோசிக்க வைக்கும் விதத்தில் உருவாகியுள்ளது. ‘வா பகண்டையா’ என்பது கிராமத்தின் பெயர். விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ‘வா பகண்டையா’ என்ற கிராமம் தான் கதைக்களம் என்பதால், படத்திற்கு அதையே தலைப்பாக வைத்திருக்கிறார்கள். ஹீரோவாக அறிமுக நடிகர் விஜய தினேஷ் நடிக்க, அறிமுக நடிகை ஆர்த்திகா ஹீரோயினாக நடிக்கிறார். வில்லனாக அறிமுக நடிகர் நிழன் நடிக்க, மற்றொரு வில்லனாக மும்பை நடிகர் யோகி ராம் நடிக்கிறார். இவர்களுடன் ஆர்.சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, மீரா கிருஷ்ணன், ‘வெண்ணிலா கபடி குழு’ புகழ் நித்திஷ் வீரா, பவர் ஸ்டார் சீனிவாசன், மனோபாலா, காதல் சுகுமார், பிளாக் பாண்டி, போண்டா மணி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளி ரெவல்யூசன் சார்பில் ப.ஜெயகுமார் இப்படத்தை தயாரிப்பதோடு, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். எஸ்.ஏ.ராஜ்கும

ஹாலிவுட் தரத்தில் "டிஸ்டண்ட்" பட டீசர்! பாராட்டு மழையில் “டிஸ்டண்ட்” குழுவினர்!

ஜி.கே இயக்கத்தில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாக நடித்துள்ள டிஸ்டண்ட் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முகவரி, தொட்டி ஜெயா, இருட்டு உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.இசட்.துரை டாய்னா பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து 'டிஸ்டண்ட்' எனும் புதிய படத்தை தயாரித்துள்ளார். இதில் சுரேஷ் நல்லுசாமி கதாநாயகனாகவும், சவுந்தர்யா நஞ்சுந்தன் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். திரில்லருடன் கலந்த சைன்ஸ் பிக்ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜிகே என்பவர் இயக்கியுள்ளார். இவர் பல விருதுகளை பெற்ற அசரீரி எனும் குறும்படத்தை இயக்கியவர். மேலும் இவரது 'காதலின் தீபம் ஒன்று' குறும்படம் யூடியூப்பில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலானது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது. விஜய் சித்தார்த் இதற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. Teaser Link : https://youtu.be/RfmebiZa-K4 நடிகர்கள் : சுரேஷ் நல்லுசாமி, சௌந்தர்யா நஞ்சுதன், பிக் பிரிண்ட் கார்த்திக்

சிம்புவின் ஒத்துழைப்பால் கொட்டும் மழையிலும் மாநாடு நடத்திய வெங்கட்பிரபு

  ஈஸ்வரன் படத்தை தொடர்ந்து சிலம்பரசன் நடித்து வரும் படம் மாநாடு.. சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் நிறுவனம் தயாரித்துவரும் இந்தப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி வருகிறார். அரசியல் பின்னணியில் உருவாகி வரும் இந்தப்படத்தில் அப்துல் காலிக் என்கிற இஸ்லாமிய இளைஞன் கதாபாத்திரத்தில் சிலம்பரசன் நடித்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு, இந்தப்படத்தில் வித்தியாச தோற்றங்களில் சிலம்பரசனின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் வியப்பை ஏற்படுத்தின. கடந்த சில நாட்களாக பாண்டிச்சேரியில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.. அங்கே திட்டமிட்டபடி வெளிப்புற காட்சிகளை படமாக்கும்போது புயல் மற்றும் மழை காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. அதேசமயம் அந்த சமயத்திலும் கூட, சிலம்பரசனின் ஒத்துழைப்பால் ஒருநாளை கூட வீணாக்காமல், உள்ளரங்கு காட்சிகள் அனைத்தையும் திட்டமிட்டதற்கு முன்னதாகவே படமாக்கியுள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு, அதன்பின்னும் மழை விடாமல் தொடர்ந்தததால் தான், மாநாடு படக்குழுவினர் வேறு வழியின்றி சென்னை திரும்பவேண்டிய சூழல் ஏற்பட்டது.. விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்

ஏ.பி.ஷியாம் லெனின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மலையாளத் திரைப்படம் "பேச்சிலர்ஸ்"

திடுக்கிடும் திருப்பங்களுடன் கூடிய கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் லெவின் சைமன் ஜோசப், சாதிகா வேணுகோபால், ஷியாம் சீத்தல் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். லெவின் சைமன் ஜோசப் இதற்கு முன்பு மலையாளத்தில் " பட்டிலாம்பரா" மற்றும் தமிழில் "அமுதா" ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். உறவுகள் மீது இளைஞர்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மையை, மதிப்பின்மையை பற்றி "பேச்சிலர்ஸ்" திரைப்படம் பேசுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை முழுக்க முழுக்க கொச்சின் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் லாக்டவுன் காலத்தின் அனைத்து கட்டுப்பாடுகளையும் பின்பற்றி வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர். ஜெசின் ஜார்ஜ் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். அகில் அலியாஸ் எடிட்டிங் செய்திருக்கிறார். மது மாதெஸரி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சுதீஷ் ஆண்டிகோட்டி, ஷாஜி சுரேஷ், விஷ்ணுமாயா, மாது M.P, ஷியாம் லெனின் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இத்திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் இறுதியில் தமிழ் மற்றும் மலையாளம் என இருமொழிகளிலும் வெளியாகிறது.

நடிகர் சந்தானத்தின் புதிய படம்... தந்தை - மகன் புரிந்துணர்வில் புதிய பரிமாணம்

ஆர்.கே.என்டெர்டெய்ன்மென்ட் சி.ரமேஷ்குமார் தயாரிப்பில், ஆர்.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் நடிகர் சந்தானம் புதிய படமொன்றில் நடிக்கிறார். இப்படத்தில் அவருக்குத் தந்தையாக எம்.எஸ்.பாஸ்கர் நடிக்கிறார். இவர்களுடன் ஷாயாஜி ஷிண்டே, வம்சி கிருஷ்ணன், லொல்லுசபா ஸ்வாமிநாதன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதன்முறையாக சந்தானம் படத்தில் சாம் சி.எஸ். இசையமைத்து கைகோத்துள்ளார். திரைப்படத்தை மாதவன் எடிட்டிட் செய்கிறார். நடிகர் சந்தானம் 'பேரிஸ் ஜெயராஜ்' என்ற படத்தில் நடித்து முடித்த கையோடு இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பில் கும்பகோணத்தில் இணைந்துள்ளார். கும்பகோணத்தைத் தொடர்ந்து திருச்சி, ஸ்ரீரங்கம், சென்னை உள்ளிட்டப் பகுதிகளிலும் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் அறிமுக இயக்குநராக இணைந்துள்ளார் ஸ்ரீனிவாசராவ். இவர், 'வல்லினம்' படத்தின் இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். நிறைய விளம்பரப் படங்களையும் இவர் இயக்கியிருக்கிறார் என்பது கூடுதல் தகவல். இப்படத்தைப் பற்றி ஸ்ரீனிவாச ராவ் கூறுகையில், "இந்தத் திரைக்களம் சந்தானத்துக்கு மிகவ

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று வெளியாகும் 'டைம் அப்'

குடும்பத்தோடு பார்த்து ரசிக்கும்படியான, குறிப்பாக குழந்தைகளுக்கு ஜாலியான அனுபவத்தை தரக்கூடிய படமாக உருவாகியிருக்கிறது 'டைம் அப்.' எழுதி, இயக்கி, கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் மனு பார்த்திபன். நடிகராகவும் இயக்குநராகவும் இவருக்கு இது முதல் படம்! கதாநாயகியாக மோனிகா சின்ன கொட்லா நடிக்க, மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மனோகர், சூப்பர் குட் சுப்ரமணி, 'ஆதித்யா' கதிர், 'பிஜிலி' ரமேஷ் என காமெடிக்கு கேரண்டி தரக்கூடிய பலரும் நடித்திருக்கிறார்கள். படம் குறித்து மனு பார்த்திபன் கூறுகையில், ''பேண்டஸி காமெடி ஜானர்ல ரசிகர்கள் ஜாலியா சிரிச்சு ரசிக்கிற மாதிரியான படமா  உருவாக்கியிருக்கோம். படத்தோட ஹீரோ தீவிர கமல் ரசிகன். அவன் ஒரு சாமியாரை பகைச்சுக்கிறான். அது தெய்வகுத்தமாகி 30 நாள்ல அவன் இறந்துடுவான்ங்கிற சூழ்நிலை. அந்த சூழ்நிலையிலேருந்து, அதாவது எமன்கிட்டேயிருந்து எப்படி தப்பிக்கிறான்கிறதுதான் கதை. முதன்முறையா 'மொட்டை' ராஜேந்திரன் டபுள் ஆக்ஷன்ல நடிச்சிருக்கார். ஹீரோ மாதிரியும், வில்லன் மாதிரியும் வருவார். அவரு மாடர்ன் எமனா வந்து பண்ற கலாட்டாவெல்லாம் ரகளையா இருக்க

புத்தாண்டில் வெளியாகும் "பேய் இருக்க பயமேன்"

திலகா ஆர்ட்ஸ் தயாரிப்பில் கார்த்தீஸ்வரன் இயக்கத்தில் ஜோஸ் பிராங்கிளின் இசையில் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜிபி கார்த்திக் ராஜா படத்தொகுப்பில் கார்த்தீஸ்வரன், அர்ஜுன், காயத்ரி ரமா, நியதி, கோதை சந்தானம், முத்துக்காளை, நெல்லை சிவா மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் பேய் இருக்க பயமேன்... இந்தத் திரைப்படம் கேரளா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எடுக்கப்பட்ட திரைப்படமாகும்..   மறையூரில் காட்டிற்கு இடையில் இருக்கும் ஒரு பெரிய வீட்டில் இந்த முழு படமும் படமாக்கப்பட்டது. ஜோஸ் பிராங்கிளின் இசையில் சைந்தவி அவர்கள் ஒரு பாடலை பாடியுள்ளார்.. காஞ்சனா திரைப்படத்திற்கு சவுண்ட் எபெக்ட்ஸ் செய்த சி.சேது அவர்கள் இத்திரைப்படத்திற்கு சவுண்ட் எபெக்ட்ஸ் செய்துள்ளார். வரும் ஜனவரி 1 அன்று இப்படம் திரைக்கு வருகிறது.

காதலை எதிர்க்கும் மற்றுமொரு படம் தான் " ஆதிக்க வர்க்கம் " பகவதி பாலாவின் பத்தாவது படம்

படத்தை பற்றி இயக்குனர் பகவதி பாலா, "வீரையா தன் குருவிடம் முறையாக கற்றுக் கொண்ட கலையை தவறாக பயன்படுத்துவதின் விளைவால் ஏற்படும் சம்பவங்களே கதை. கதையின் நாயகனான வீரய்யா  தனது மனைவி மற்றும் 4 பெண் குழந்தைகளுடன் சந்தோஷமாக வசித்து வருகிறான்.இந்த நிலையில் வில்லன் ஜான் பீட்டரோடு  ஏற்பட்ட நட்பில் தான் முறையாக கற்று வந்த கலையை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார். ஒரு கட்டத்தில் வில்லனின் மகன் வீரய்யாவின் மகளை காதலிக்கிறான். இதனால் வீரய்யாவுக்கும் ஜான் பீட்டருக்கும் மனக்கசப்பு ஏற்படுகிறது. வீரய்யாவின் குடும்பத்தை கொலை செய்யத் துடிக்கிறான் ஜான் பீட்டர். வீரய்யா தன் குடும்பத்தோடு தப்பித்து ஒரு அடர்ந்த காட்டுக்குள் தஞ்சம் அடைகிறான். இறுதியில் வீரய்யாவின் குடும்பத்தை வில்லன் ஜான்பீட்டர் தேடி கண்டு பிடித்தாரா? அந்த இளம் ஜோடிகளின் காதல் கை கூடியதா என்பதே மீதிக்கதை ... என்று கூறினார். ஆதிக்க வர்க்கத்தில் பகவதி பாலா பிருந்தா  (மிஸ் இந்தியா 2019 ) நக்மா ராஜிவ்ரெட்டி கே.டி.எம். முனிராஜ், கே.ஜி.ஆர்., மாஸ்டர் ராகுல் சக்திவேல் அருங்கால் ரவி தர்மபுரி ராதா பிரிமூஸ்தாஸ் கர்னல் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கி