முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஜீவி-2 உருவாவதற்கு விஷ்ணு விஷாலும் ஒரு காரணம் ; இயக்குநர் VJ கோபிநாத்

  வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது. அதேசமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது. கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி.. இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது.. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்துகொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார். அவரால் அது முடிந்ததா என்பது தான் முதல் பாகத்தின் கதை.. இந்த த

சினிமாத் துறைக்கு வர ஆசைப்பட்டால் அதற்குண்டான படிப்பை படித்து விட்டு வாருங்கள் - நடிகர் நாசர்

  நடிகர் ஜீவாவுடன் இந்த மேடையை பகிர்ந்து கொள்வது அப்பா, மகன் போல உள்ளது! - லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சி விழாவில் நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் பேச்சு!! இந்த விழாவிற்கு காரணமாக இருக்கின்ற அனைவருக்கும் நன்றி. ஏனென்றால், 2 வருடங்களாக வீட்டிற்குள்ளேயே இருந்தோம். இன்று இவ்வளவு பெரிய விழா குதூகலத்துடனும், உற்சாகத்துடனும் நடக்கிறது. லயோலா கல்லூரிக்கும் எனக்கும் ஆழமான தொடர்பு இருக்கிறது. பள்ளி படிப்பு முடிஞ்சதும் எல்லோருக்கும் லயோலா கல்லூரியில் சேர வேண்டும் என்று தான் தோன்றும். ஆனால், அதற்கு அதிக மதிப்பெண் எடுக்க வேண்டுமே!  ஆகையால், அந்த கொடுப்பினை எனக்கில்லை. மேலும், விஸ்காம் என்கிற பட்டபடிப்பு தமிழ் நாட்டில் மூளை முடுக்கிலும் இன்று இருக்கிறது. ஆனால், அது முதன் முதலில் ஆரம்பிக்கப்பட்டது லயோலா கல்லூரியில் தான். நடிகர் சங்கத்தின் பொதுக்குழு இங்கு தான் நடைபெற்றது. எனக்கு பேச வராது. ஆனால், பேச ஆரம்பித்தால் பேசிக்கொண்டே இருப்பேன். ஆகையால், ஒரு பத்து கேள்விகள் கேளுங்கள். அதற்கு பதில் சொல்லிவிட்டு போய் விடுகிறேன். நான் பேசுவதைக் கேட்பது உங்களுக்கு பிடிக்கும். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இந்த விழாவ

நாசர் சார் தான் என்னுடைய முதல் குரு - நடிகர் ஜீவா

  விஜய், சூர்யா போன்றோரை வளர்த்த இந்த லயோலாவில் இருப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணமே! - லயோலா கல்லூரி கலை நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா! லயோலா கல்லூரியில் நடந்த கலை விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஜீவா கலந்து கொண்டு பேசும்போது, நீண்ட நாட்களுக்குப் பிறகு இவ்வளவு கூட்டத்தை பார்த்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த சில வருடங்களாக திரையரங்குகளில் கூட இவ்வளவு கூட்டம் இல்லை. மேடையில் இருந்த அனைத்து பிரமுகர்களுக்கும் நன்றி. லயோலா கல்லூரியில் இருப்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான தருணமே. பல ஆண்டுகளுக்கு முன் நான் இங்கு வந்துள்ளேன். எனது முதல் பட நேரத்தில் இங்கு வந்தேன். அப்போது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. காக்க காக்க படம் வெளியான சமயம் அது. கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் ஆகிவிட்டன. உங்களிடம் இவ்வளவு அழகான கட்டமைப்பு உள்ளது. நான் இங்கு உள்ள கிரவுண்டில் கிரிக்கெட் விளையாடியுள்ளேன். பல ஜாம்பவான்களையும் சாதனையாளர்களையும் உருவாக்கிய கல்லூரி இது. சூர்யா சார், விஜய் சார், விஷால், உதயநிதி போன்று பலரை உருவாக்கிய இந்த கல்லூரியில் என்னை ஒரு விருந்தினராக அழைத்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாசர் ச

ஹாலிவுட் தரத்தில் வரவிருக்கும் அரவிந்த் சாமியின் " கள்ளபார்ட் " மே மாதம் வெளியாகிறது

விக்ரம் தமன்னா நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற ஸ்கெட்ச் படத்தை தயாரித்த மூவிங் பிரேம்ஸ் படநிறுவனம் தற்போது அரவிந்த்சாமி ரெஜினா நடித்துள்ள " கள்ளபார்ட் " படத்தை மிகுந்த பொருட்செலவில் தயாரித்துள்ளது. என்னமோ நடக்குது, அச்சமின்றி போன்ற படங்களை இயக்கிய ராஜபாண்டி இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக அரவிந்த்சாமி நடித்துள்ளார் கதாநாயகியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். பார்த்தி, ஆதேஷ் பாலா, பேபி மோனிகா, ஹரிஷ் பெறாடி ஆகியோர் முக்கிய பத்திரத்தில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவு - அரவிந்த் கிருஷ்ணா இசை - நிவாஸ் K பிரசன்னா பாடல்கள் - கங்கை அமரன், சரஸ்வதி மேனன். எடிட்டிங் - S. இளையராஜா கலை - மாயா பாண்டி ஸ்டண்ட் - மிராக்கில் மைக்கேல் மக்கள் தொடர்பு - மணவை புவன். தயாரிப்பு - S.பார்த்தி, S.சீனா கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - P.ராஜபாண்டி. DF.Tech படம் பற்றி இயக்குனர் P.ராஜபாண்டி கூறியதாவது.... படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் கள்ளபார்ட் என்பது பொருந்தும் அதனாலேயே படத்திற்கு கள்ளபார்ட் என்று பெயர் வைத்துள்ளோம். ஹைஸ்ட் திரில்லரில் நடக்கும் உணர்வு பூர்வமான ஒரு போராட்டம் தான் இ

சுந்தர் சி , ஜெய் இணைந்து நடிக்கும் சைக்கோ திரில்லர் படம்  'பட்டாம்பூச்சி'

பட்டாம்பூச்சி 1980களில் நடக்கும் சைக்கோ திரில்லர் கதை. அவனி டெலி மீடியா சார்பாக திருமதி. குஷ்பூ சுந்தர் தயாரிக்க சுந்தர்சி கதாநாயகனாகவும், முதன்முறையாக ஜெய் வில்லனாகவும் நடித்துள்ள படம் இது . ஹனி ரோஸ், இமான் அண்ணாச்சி, பேபி மானஸ்வி மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் பத்ரி.  கிருஷ்ணசுவாமி ஒளிப்பதிவு செய்ய நவநீத் சுந்தர் இசைஅமைகிறார் . எடிட்டிங் பணிகளை பென்னிஆலிவர் மேற்கொள்கிறார் . ,சண்டைப்பயிற்சி ராஜசேகர்,திரைக்கதை நரு. நாராயணன், மகா கீர்த்தி. கொடூரமான சைக்கோ கொலைகாரன் கதாபாத்திரத்தில் ஜெய்யும் அவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வாங்கி கொடுக்க துடிக்கும் காவல் அதிகாரி கதாபாத்திரத்தில் சுந்தர் சி யும் நடித்துள்ளனர். முதல் காட்சியிலேயே விறுவிறுப்பாக துவங்கும் கதை இறுதிக்காட்சி வரை சீட் நுனியில் அமர வைக்கும்  திரில்லராக உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ,ஜெய், சுந்தர்சி இருவரின் கதாபாத்திரத்தை விளக்கும் போஸ்டர் .இவை அனைத்துமே மிகவும் வித்தியாசமாக இருப்பதுடன் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. போஸ்டரைப் ப

நடிகர் நாசருக்கு அமீரகம் அளித்த கவுரவம்

தமிழ் சினிமா உலகில் மிகப் பெரிய ஆளுமை நடிகராக கருத்தக்கூடியவர்களில் ஒருவர் நடிகர் நாசர், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் அமீரகம் சென்றுள்ள நடிகர் நாசருக்கு அந்நாட்டு அரசால் வழங்கப்படும் கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது, இவ்விசா சினிமா துறை பிரபலங்கள் பலருக்கு வழங்கப்பட்டு வந்தாலும் தமிழ் திரையுலகில் வெகு சிலரே இதனை பெற்றுள்ளனர். நடிகர் நாசர் அவர்களுக்கு இவ்விசா கிடைக்க ஏற்பாடு செய்த துபை வாழ் இந்திய தொழில் அதிபர் திரு.வசிம் அதானுடன் நடிகர் நாசர் கோல்டன் விசா பெறும் புகைப்படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கோல்டன் விசா அளித்ததற்காக அமீரக அரசிற்கும் இதற்கு ஏற்பாடுகள் செய்த தொழில் அதிபர் வசிம் அதான் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”

Trident Arts சார்பில் தயாரிப்பாளர் R.ரவீந்திரன் தயாரிப்பில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில், அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர் நடிப்பில், மனதை மயக்கும் ரொமான்ஸ் காமெடி ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “ஹாஸ்டல்”.  அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு இப்படம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. பட முன்னோட்ட விழாவாக, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்தனர்.   இவ்விழாவினில், இயக்குனர் சுமந்த் ராதாகிருஷ்ணன் கூறியதாவது... எனது முந்தைய படத்திற்கு நல்ல ஆதரவை தந்தீர்கள். இப்போது ஒரு பெரிய டீமுடன் வந்துள்ளேன். தயாரிப்பாளர் ரவி சாருக்கு நன்றி. அசோக் செல்வன், பிரியா பவானி சங்கர், சதீஷ் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் படம் எங்களுக்கு பிடித்துள்ளது, இது ஒரு சிம்பிளான படம் உங்களுக்கும் பிடிக்கும். ஆதரவு தாருங்கள் நன்றி. நடிகர் கிரிஷ் குமார் கூறியதாவது... வாய்ப்பு தந்த சுமந்த் அவர்களுக்கு நன்றி. 2021 ல் இந்தப் படம் எடுத்தோம். கொரோனாவுக்கு பிறகு பல படங்கள் ஓடிடி செல்லும் நேரத்தில், இப்படத்தை தியேட்டருக்கு கொண்டு 

’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி:ஒரு மிகப்பெரிய வலியின் எழுச்சி- இயக்குனர் மிஷ்கின்

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, தலித் வரலாற்று மாத நிகழ்வாக ஏப்ரல் மாதம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திவருகிறார். இதில் பி.கே ரோசி திரைப்படவிழா, கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசை நிகழ்ச்சி, சமுக நீதியைப்பேசும் மேடை நாடகங்கள் ஆகியவை நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து சென்னை அடையாரில் உள்ள டாக்டர். அம்பேத்கர் மணிமண்டபத்தில் கடந்த 17-ஆம் தேதி ’நித்தம்’ புகைப்படக்கண்காட்சி தொடங்கியது. இந்த புகைப்படக் கண்காட்சியில் எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கையை எடுத்துரைக்கும் பல்வேறு புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் நித்தம் புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட இயக்குனர் மிஷ்கின் பேசியதாவது, “இது எனக்கு இதுவரையிலும் கிடைக்காத ஒரு பெரும் வாய்ப்பு. இங்கே வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புகைப்படமும் வலியினால், சோகத்தினால் உருவான கலைப்படைப்புகளாக தான் நான் பார்க்கிறேன். அனைத்து புகைப்படங்களும் ஆழ்ந்த உள்அர்த்தத்தோடு, மிக அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு புகைப்படமும் ஒரு மனித அவலத்தின் சுமையை சொல்கிறது. அனைத்து புகைப்படங்களும் ஒரு மிகப்பெரிய இனத்தின் வலியை சொல்கிறது.

'ஓ மை டாக்' படப்பிடிப்பின்போது நடைபெற்ற வேடிக்கையான அனுபவத்தை பகிரும் அருண்விஜய்

கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் கொண்டாடுவதற்காக ப்ரைம் வீடியோவில் அருண் விஜய் மற்றும் அவரது வாரிசான ஆர்ணவ் விஜய் நடிப்பில் வெளியாகும் 'ஓ மை டாக்' படப்பிடிப்பின்போது நடைபெற்ற வேடிக்கையான அனுபவத்தை அருண்விஜய் பகிர்கிறார். 'ஓ மை டாக்' படத்தின் முன்னோட்டத்தை அண்மையில் பிரைம் வீடியோவில் வெளியானது. இந்த திரைப்படம் அர்ஜுன் என்ற குழந்தைக்கும், சிம்பா என்ற நாய்க்குட்டிக்கு இடையேயான உணர்வுபூர்வமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படத்தில் இடம்பிடித்த ஆர்ணவ் விஜய் மற்றும் சிம்பா என்ற நாய்க்குட்டி என இரண்டும் திரையிலும், திரைக்குப் பின்னாலும் இவர்களுக்கு இடையேயான அன்பையும், பிணைப்பையும் பகிர்ந்து கொள்கின்றனர். படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை ஆர்ணவ் விஜய்யின் தந்தையான அருண் விஜய் இப்படி விவரிக்கிறார்,'' செல்ல பிராணியான சிம்பா முதல் நாளே ஆர்ணவ்வை கீறி விட்டது. ஆனால் அவர் அதை விளையாட்டாக எடுத்துக் கொண்டு படப்பிடிப்பை தொடர்ந்தார்'' . அருண் விஜய் இது தொடர்பாக மேலும் பேசுகையில், '' அது ஆர்ணவ்வின் உலகம். சிம்பா நன்கு வளர்ந்தவர்.

நடிகர் நிகில், இயக்குநர் கேரி BH மற்றும் ED Entertainment இணையும், பான் இந்திய பிரமாண்ட திரைப்படம் “ஸ்பை”

  திரைத்துறையில் வளர்ந்து வரும் இளம் நடிகர் நிகில் சித்தார்த்தா வின் 19வது திரைப்படத்தை “கோதாச்சரி, எவரு மற்றும் ஹிட் போன்ற பிரபலமான படங்களின் படத்தின் தொகுப்பாளர் கேரி BH இயக்குகிறார். பிரமாண்ட படைப்பாக உருவாகவுள்ள இப்படத்தினை சரண் தேஜ் உப்பலாபதி மற்றும் ED entertainment சார்பில் K ராஜசேகர் ரெட்டி இணைந்து தயாரிக்கின்றனர். நிகிலின் கதாபாத்திரத்தின் அடிப்படையில், இந்தப் படத்திற்கு ‘ஸ்பை’ என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்தப் படத்தின் தலைப்பே ஒரு எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இந்தப் படத்தின் டைட்டிலில் துப்பாக்கி, தோட்டா மற்றும் ஸ்னைப்பர் துப்பாக்கி ஆகியவை இடம் பெற்றுள்ளது, போஸ்டரில் கருப்பு நிற டீசர்ட் மற்றும் கருப்பு கார்கோ பேண்ட் அணிந்து, படு ஸ்மார்ட்டாக நிக்கில் கையில் ஷாட்-கன்னுடன் நடந்து வருவது ஸ்டைலாக உள்ளது, இந்த போஸ்டரில் நிகிலை பார்க்கும்போது ஒரு உண்மையான ஸ்பை போலவே தோற்றமளிக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் போஸ்டர் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பை எகிறச் செய்கிறது. நிக்கிலின் முதல் பான் இந்திய படமாக ஸ்பை படம் உருவாகவுள்ளது. முன்னெப்போதும் இல்லாத வகையில் இப்படத்தில் நிகி

சென்னையில் 14 புதிய நியூபெர்க் அட்வான்ஸ்டு & கட்டுபடியாகும் கட்டணத்தில் திறந்துள்ள நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ்

நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், இந்தியாவில் செயல்படும் 4 சங்கிலித்தொடர் முன்னணி ஆய்வகங்களில் ஒன்றாகும். இந்நிறுவனம் இன்று 14 நியூபெர்க் மேம்பட்ட டயக்னாஸ்டிக்ஸ் & உடல் பரிசோதனை மையங்களை சென்னையில் தொடங்கியுள்ளது. அத்துடன் இந்த நிதி ஆண்டிற்குள் 100 மையங்களைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது.அனைவருக்கும் மிகக் குறைந்த கட்டணத்தில் பரிசோதனை மேற்கொள்ள வசதியாக இந்த நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டுள்ளது. ரத்தப் பரிசோதனை, எக்ஸ்-ரே, ஈசிஜி, அல்ட்ராசவுண்ட் ஸ்கேன், உடல் பரிசோதனை மற்றும் வீட்டிற்கு வந்து பரிசோதனைக்கான மாதிரிகளை சேகரிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும். இப்புதிய மையங்கள் ஆய்வக வசதி மற்றும் உடல் பரிசோதனை மையங்களாக செயல்படும். இது தவிர தமிழகத்தில் விரிவாக்க நடவடிக்கையாக நடப்பு நிதி ஆண்டில் (2022-23) ரூ. 200 கோடியை முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது. https://youtu.be/ecW_r6-DFxA ஆய்வக பரிசோதனை மற்றும் உடல் பரிசோதனை உள்ளிட்ட வசதிகள் இந்த 14 மையங்களிலும் மேற்கொள்ளப்படும். இவை அண்ணா நகர், அசோக் நகர், அயனாவரம், ஹஸ்தினாபுரம், ஐயப்பன்தாங்கல், கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், நங்கநல்லூர், பூந்தமல்லி, பெரவ

Dr. MGR Janaki College Hosts First Ever Joint Celebration of Tamil and Malayalam New Year 

Chennai, 13 April 2022  Upholding the spirit of the traditionally close cultural and social relationship between the people of Tamil Nadu and Kerala, Dr. MGR Janaki College of Arts and Science for Women, organised today a first-ever joint celebration of Puthandu, the Tamil New Year, and Vishu, the Malayalam New Year, featuring enthralling music and dance performances of the students.  Puthandu is celebrated on the first day of the Tamil month of Chithirai  (Thursday, 14 th  April 2022), and Vishu, on the first day of  Medam  month, as per the Malayalam calendar (15 th April 2022). https://youtu.be/MS4yvM_Agwk The celebrations were marked by traditional dances, arts, and cultural events of Tamil and Malayali people. They included Tamil folk dances:  thappattam, karakattam , and  oyilattam  and the traditional dance form of Kerala,  thiruvathirakali . A highlight of the event was Pookalam, an intricate and colourful arrangement of flowers laid on the floor, extremely popular in Kerala.

விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்களுக்கே தற்போது நெருக்கடி ஏற்படுகிறது – நடிகர் ஆர்யன் ஷ்யாம்

ஆர்யன் ஷ்யாம் நடித்து தயாரித்துள்ள ‘அந்த நாள்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. தமிழ் சினிமாவில் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்து இருந்தது, ஏவிஎம் நிறுவனம். அந்த நிறுவனத்தின் ஏவிஎம் சரவணனின் பேத்தியான அபர்ணாவை திருமணம் செய்துகொண்டவர், ஆர்யன் ஷியாம். ஆர்யன் ஷ்யாம் தற்போது ’அந்த நாள்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இதுகுறித்தும் மிஷ்கின் உடனான சர்ச்சைகள் குறித்தும் இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசினார்.’ இது சைக்கோவை விட சிறந்த படம்’. இதுகுறித்து பேசிய அவர், “நானே கதை வசனம் எழுதி தயாரித்து நடித்துள்ள படம் ’அந்த நாள்’. இப்படம் நரபலி மற்றும் பில்லி சூனியத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரியில் சென்சார் போர்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. ஆனால் நரபலி, பில்லி சூனியம் தொடர்பான காட்சிகள் இருப்பதால் சான்றிதழ் தர மறுப்பு அளிப்பதாக கூறினர். நரபலி இந்திய அரசியலமைப்பால் தடை செய்யப்பட்டதால் இப்படத்திற்கு சென்சார் தர மறுத்துவிட்டனர். பின்னர் மேல்முறையீடு செய்யப்பட்டு நடிகை கௌதமி பார்த்துவிட்டு படத்தைப் பாராட்டியுள்ளார். பல்வேறு கட்டுகளுடன் படத்தை ஏ

ஆர் பார்த்திபனின் இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன

நடிகர்-இயக்குநர் ஆர் பார்த்திபனின் வெற்றிப்பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, அவரது இரவின் நிழல் படத்தை முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படமாக ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்துள்ளன தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கவுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு முன்னதாக இந்த கவுரவம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரவின் நிழல் படத்திற்கு ஆஸ்கார்-கிராமி விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அங்கீகாரம் கிடைத்தது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பார்த்திபன், தனது தனித்துவமான முயற்சியை அங்கீகரித்த இரு அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ள பாடகர் வேல்முருகனின் மகள் ரக்க்‌ஷனா, தமிழக முதல்வரிடம் நேரில் வாழ்த்து

புலிக்கு பிறந்தது பூனையாகுமா என்ற பழமொழிக்கேற்ப, பிரபல பாடகர் வேல்முருகனின் மூத்த மகள் ரக்க்‌ஷனா தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். பத்தே வயதான ரக்க்‌ஷனா ஐந்தாம் வகுப்பு மாணவி ஆவார். ஒரே நிமிடத்தில் 51 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டு புதிய சர்வதேச கின்னஸ் சாதனையை இவர் படைத்துள்ளளார். பாகிஸ்தானை சேர்ந்த அஜ்மல் என்பவர் 40 பல்கலைக்கழகங்களின் சின்னங்களை அடையாளம் கண்டது இதற்கு முந்தைய சாதனையாக இருந்த நிலையில், ரக்க்‌ஷனா இதை முறியடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, தனது தந்தை, தாய் மற்றும் சகோதரியுடன் தமிழக முதல்வர் திரு மு.க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் ரக்க்‌ஷனா இன்று சந்தித்து கின்னஸ் சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். சிறு வயதிலேயே ரக்க்‌ஷனா படைத்துள்ள சாதனை குறித்து அறிந்து மகிழ்ச்சி தெரிவித்த முதலமைச்சர், அவரை வெகுவாகப் பாராட்டினார். திமுக இளைஞர் அணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான திரு உதயநிதி ஸ்டாலின், சிறு, ஊரக மற்றும் குடிசைத் தொழில்கள் அமைச்சர் திரு தா.மோ. அன்பரசன், சுகாதாரத் துறை அமைச்சர் திரு மா சுப்பிரமணியன் மற்றும் பள்ளிக் கல்வி அமைச்சர் திரு அன்பில் மகேஸ் பொ

கடுமையான கோவிட் தொற்று மற்றும் நிமோனியாவால் நீண்ட நாட்கள் பாதிக்கப்பட்ட பெண்மணிக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் வெற்றிகர சிகிச்சை

கிலியன் பார் சின்ட்ரோம் என்ற சிக்கலும் இப்பெண்மணிக்கு ஏற்கனவே இருந்தது இரண்டு முறை செயற்கை சுவாச சாதன ஆதரவிலும் மற்றும் 2 மாதங்களுக்கும் அதிகமாக தீவிர சிகிச்சைப்பிரிவிலும் இவர் இருந்திருக்கிறார் சென்னை, ஏப்ரல் 12, 2022: தமிழ்நாட்டில் பன்முக சிறப்புப் பிரிவுகளில் உயர்தர சிகிச்சை வழங்குவதில் முன்னணியில் உள்ள காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஒரு அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த ஒரு பெண்ணுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்து குணமாக்கியிருப்பதை இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது. இப்பெண்மணிக்கு ஒரு அரிய நரம்பியல் பாதிப்பான கிலியன் பார் சின்ட்ரோம் (Guillain-Barré Syndrome) என்பதை இன்னும் அதிக சிக்கலானதாக ஆக்குகின்ற கடுமையான கோவிட் தொற்றும் இருந்தது. https://youtu.be/61i2S_eI6OA 65 ஆண்டுகள் வயது பிரிவைச் சேர்ந்த இப்பெண்மணிக்கு தீவிர கோவிட் தொற்று பாதிப்பும், நிமோனியாவும் இருந்தன. அத்துடன், நோயின் தீவிரத்தை இன்னும் அதிகமாக்குகிற கிலியன் பார் சின்ட்ரோம் என்ற ஒரு மூளை நரம்பியல் கோளாறு காரணமாக தசை பலவீனமும் நீண்டகாலமாக இவருக்கு இருந்திருக்கிறது. சென்னை, காவேரி

நடிகர் பிரசாந்த் வெளியிட்ட டைட்டில் "டூ ஓவர்"

இயக்குனர் ஷார்வி இயக்கத்தில், மானவ், மரியா பின்டோ நடித்த திரைப்படம், ஐந்து மொழிகளில் தயாராகிறது. நடிகர் பிரசாந்த் 'டூ ஓவர்' படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் போஸ்டரை வெளியிட்டார். ரியல் இமேஜ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில், எஸ் சரவணன் "டூ ஓவர்" திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஷார்வி எழுதி இயக்கிய சமூகப் பிரச்சினைகள் தொடர்பான திரைப்படம் டூ ஓவர். படித்தவர் ஆனால் வேலையில்லாதவர் என்பதை அடிப்படையாகக் கொண்ட கதை. ஒரு மனிதனின் வேலையுடனான உறவை அடிப்படையாகக் கொண்டது. மரியா பின்டோ, நெஃபி அமெலியா மற்றும் பலர் நடிகர்களின் ஒரு பகுதியாக உள்ளனர். குமாரசாமி பிரபாகரன் இசையமைக்க, பிஜி வெற்றிவேல் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு கே.வி.செந்தில் இணை இயக்கம் ஏ.பி.சிவா. மக்கள் தொடர்பு கோவிந்தராஜ். சோர்ந்து போனவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் படமாக உருவாகிறது 'டூ ஓவர்'! PRO_கோவிந்தராஜ்

Kumaran Hospitals & Rela Institute performed the First Multi Vessel Coronary Angioplasty in India using ROTA-PRO

~ The high-end heart procedure was performed to save the life of a 60-year-old woman who had an acute heart attack and was in critical condition on arrival ~ Chennai, April 12 th , 2022:  The cardiac team in Kumaran Hospitals & Rela Institute, Kilpauk performed the first multi vessel coronary angioplasty using ROTA – PRO which was recently launched in the country. It is the first procedure in the country performed on an elderly woman who happens to be the oldest in the Tamil Nadu to receive the treatment. The expert team spearheaded by  Prof Ajith Ananthakrishna Pillai & Dr Sidharthan  performed the high-risk procedure in the acute heart attack situation to save the life of the patient. The procedure took just over 120 minutes. Post the procedure, the patient recovered well and was discharged from the hospital today. Mrs Sarala, a 60-year-old women resident of Chennai who suffered an acute heart attack brought to Kumaran hospital in a very critical state. Due to the age factor,

HR&CE Minister Shri. Sekar Babu Releases Book on the Timeless Wisdom of Traditional Hindu Temple Architecture

The book is authored by Kalaichemmal Dr. K. Dakshinamoorthy, Ph.D, a renowned Sthapati, Sculptor, and a member of the Heritage Committee of HR&CE Department, Tamil Nadu Chennai, April 2022 Thiru. P. K. Sekar Babu, Honourable Minister of Hindu Religious and Charitable Endowments Department (HR&CE), Government of Tamil Nadu , released  'The Introspection in Indian Architecture' (Sthapatya Yoga) , a book in English on the timeless wisdom of traditional hindu temple architecture, written by  Kalaichemmal Dr. K. Dakshinamoorthy, Ph.D , a renowned Sthapati, Sculptor, and a scholar in traditional Hindu temple architecture, in the City, recently (11 April 2022). The first copies of the book were received by  Thiru J. Kumaragurubaran, IAS, Commissioner, HR&CE Department , and  Thiru. T. Loganathan, Chairman, Indian Institute of Architects - Tamil Nadu Chapter .  Thiru. S. Napoleon , a retired senior government official, provided the Welcome address while  Thiru. D. Pranav Bh

ஏ.எல்.ராஜாவின் "சூரியனும் சூரியகாந்தியும்" படத்தின் இறுதிகட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது

பார்த்திபன், தேவயானி நடிப்பில், 'நினைக்காத நாளில்லை', 'தீக்குச்சி' மற்றும் தெலுங்கில் 'அக்கிரவ்வா' ஆகிய படங்களை தொடர்ந்து, இயக்குனர் ஏ.எல்.ராஜா இயக்கியுள்ள புதிய படம் "சூரியனும் சூரியகாந்தியும்"! டி.டி.சினிமா ஸ்டுடியோ சார்பில் உருவாகும் இந்தப் படத்தில் தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி, ஶ்ரீ ஹரி, விக்ரம் சுந்தர் மூவரும் கதையின் நாயகர்களாக நடிக்கிறார்கள். ரிதி உமையாள் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் சந்தான பாரதி, இயக்குனர் செந்தில் நாதன், குட்டிப்புலி வில்லன் ராஜசிம்மன், இயக்குனர் ஏ.எல்.ராஜா, மங்களநாத குருக்கள், அழகு, சேஷு, மிப்புசாமி, உடுமலை ரவி, சச்சின், ரேவதி, ரிந்து ரவி, திமிரு புடிச்சவன் கமலேஷ், குமார் ஏ.ஆர்.கே.ஆனந்த், செஞ்சி கே.அசோகன், சக்தி சொரூபன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, ஏ.எல்.ராஜா இயக்குகிறார். ஒளிப்பதிவு திருவாரூர் ராஜா, இசை ஆர்.எஸ்.ரவி பிரியன், எடிட்டிங் வீரசெந்தில்ராஜ், டான்ஸ் மாஸ்டர் மஸ்தான், பாடல்கள் ஏ.எல்.ராஜா, கவிஞர் செங்கதிர் வாணன், சண்டைப் பயிற்சி ஸ்பீடு மோகன், கலை ஜெயசீலன், ஸ்டில்ஸ் சாய் சக்தி

விரைவில் வெளியாகும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்த பட அறிவிப்பு

மனித குலத்தில் கொடூரமான முறையில் நடைபெற்று வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன. 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தினை அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஐ அம் புத்தா புரொடக்ஷன்ஸ் எனும் இரண்டு நிறுவனங்களும் இணைந்து வழங்கின. இந்தப்படத்தின் வெற்றிக்குப் பிறகு மேலும் இரண்டு நேர்மையான கதைகளை சொல்ல இவ்விரண்டு பட தயாரிப்பு நிறுவனங்களும் மீண்டும் ஒன்றிணைந்திருக்கிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் கூட்டணியில் தொடங்கப்பட்ட 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் வெளியான பிறகு இந்தியா முழுவதும் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது. 1990களில் காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்டதை இதயத்தை அதிரச் செய்யும் வகையில் இதன் கதை அமைந்திருந்தது. மேலும் இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள், நேர்த்தியான பாணியில் விவரிக்கப்பட்ட திரைக்கதை, ஆகியவை குறித்து இன்றும் போதுமான அளவில் வ

இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் “பேப்பர் ராக்கெட்”

ஜீ5 நிறுவனம் தமிழ் மொழியில், தனது வெற்றியை கொண்டாடும் வகையில், ‘ஜீ5 தளத்தில் இந்த அடுத்தடுத்து வெளிவரவுள்ள பிரமாண்ட படைப்புகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடும் நிகழ்வாக “ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வை நடத்தியது. இந்த நிகழ்வின் போது பிரபல இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில்,  'பேப்பர்  ராக்கெட்' எனும் வெப் சீரிஸ் பிரபலங்கள் முன்னிலையில் அறிவிக்கப்பட்டது. இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கும் முதல் வெப் சீரிஸ் இதுவென்பது குறிப்பிடதக்கது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் இத்தொடரை தயாரிக்கிறார். காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன் முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் இந்த தொடரில் K.ரேணுகா, கருணாகரன், நிர்மல் பாலாழி, கௌரி G.கிஷன், தீரஜ், நாகிநீடு, V. சின்னி ஜெயந்த், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்டோருடன் G.M.குமார், அபிஷேக், பிரியதர்ஷினி மற்றும் பல பெரிய நட்சத்திரப் பட்டாளம் இணைந்து  நடிக்கின்றனர். இந்தத் தொடரின் தலைப்பை வெளியிட்ட நிகழ்வோடு  முத்தாய்ப்பாக   முதல் சிங்கிள் ட்ராக் ‘காலை மாலை’ பாடல் வெளியிடப்பட்டது. விவேக் வரிகளில் சித் ஸ்ரீராமின் குரலில்,

மாறுபட்ட தோற்றத்தில் நடிகர் சதீஷ் நடிக்கும் “சட்டம் என் கையில்” ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் வெளியிட்ட சிலம்பரசன் TR

க்ரிஷ் இன்டர்நேஷனல் பிலிம் கிரியேசன், சீட்ஸ் என்டர்டைன்மென்ட் மற்றும் சண்முகம் கிரியேசன் இணைந்து தயாரிக்க, நடிகர் சதீஷ் நடிக்கும் திரில்லர் திரைப்படம் “சட்டம் என் கையில்”. இப்படத்தை ‘சிக்சர்’ படப்புகழ் இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிலம்பரசன் TR வெளியிட்டார். படம் குறித்து இயக்குநர் சாச்சி கூறியதாவது… பிரபல காமெடி நடிகர் சதீஷை மாறுபட்ட தோற்றத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். நடிகர் சதீஷ் காமெடி மட்டுமே செய்யக் கூடியவர் அல்ல, அவரின் திறமையை, அவரது வேறொரு பரிமாணத்தை “சட்டம் என் கையில்” படத்தில் பார்க்கலாம். அவரது தனித்துவமான நடிப்பு நிச்சயம் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும். என் முதல் படம் முழுக்க காமெடியை சுற்றியதாக இருக்கும், ஆனால் இந்த படம் அதிலிருந்து மாறுபட்டு பரபர திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ஒரு இரவில் நடக்கும் கதை, நாயகன் டிரங்க் & டிரைவ் கேஸில் போலீசிடம் மாட்டுகிறார், அந்த இரவில் அவருக்கு நடக்கும் சம்பவங்கள் தான் இந்தப் படம். மென்மையாக ஆரம்பிக்கும் படம், ரசிகர்களை இருக்கை நுனியில் அமர்த்தி வைக்கும் பர

Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து வழங்கும், விஜய் ஆண்டனி நடிக்கும், “கொலை” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

   நடிகர் விஜய் ஆண்டனி, தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் அற்புதமான திரைக்கதைகள் மூலம் மக்களை மகிழ்விக்க ஒருபோதும் தவறியதில்லை. அடுத்ததாக அவர் நடிப்பில்   வரவிருக்கும் ‘கொலை’ திரைப்படத்தில் துப்பறியும் நபராக ஒரு புதிய வித்தியாசமான பாத்திரத்தில் ரசிகர்களை  மகிழ்விக்கவுள்ளார். தற்போது வெளியாகியுள்ள பர்ஸ்ட் லுக் பெரும் வரவேற்பையும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தில் ரித்திகா சிங், சந்தியா என்ற இளம் காவலராக விஜய் ஆண்டனியுடன் இணைந்து  பணிபுரிய நியமிக்கப்பட்டுள்ள பாத்திரத்தில் தோன்றுகிறார். பாலாஜி குமார் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை கமல் போரா, லலிதா தனஞ்சயன், பிரதீப் B, பங்கஜ் போரா மற்றும் S விக்ரம் குமார் ஆகியோர் Infiniti Film Ventures சார்பில் டான்ஸ்ரீ துரைசிங்கம் பிள்ளை உடன் இணைந்து, Lotus Pictures சார்பில் சித்தார்த்தா சங்கர் மற்றும் அசோக் குமார்  உடன் இப்படத்தை தயாரித்துள்ளனர். இயக்குனர் பாலாஜி குமார் கூறுகையில்.., கொலை திரைப்படம்  1923 இல் நடந்த டோரதி கிங்கின் கொலை சம்பவத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும், அந்த கொலை சம்பவம் உலகம் முழுவதையும் அதிர்ச

'நிலை மறந்தவன்’ ஆக மாறிய பஹத் பாசில்

தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் விரைவில் தமிழில் வெளியாக இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.. மலையாளத்தில் இளம் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மிரட்டல் வில்லனாகவும் நடித்துவரும் நடிகர் பஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ளார். ராஜாராணி, நையாண்டி படங்களில் கதாநாயகியாக நடித்தவரும் பஹத் பாசிலின் மனைவியுமான நடிகை நஸ்ரியா நசீம் ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் அவருடன் கோலிசோடா-2 படத்தில் வில்லனாக நடித்த செம்பான் வினோத்தும் நடிக்க, திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியவரும் பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவருமான பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். மலையாளத்தில் 'ட்ரான்ஸ்' என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் 'நிலை மறந்தவன்' என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது. மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி ம

பா.இரஞ்சித் ஒருங்கிணைக்கும் திரைப்படவிழா சென்னையில் துவக்கம்

இயக்குனர் பா.இரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வானம் கலைத்திருவிழா, பி.கே ரோசி திரைப்படவிழா சென்னையில் இன்று துவங்கப்பட்டது. மூன்று நாட்கள் நடக்கும் இந்த திரைப்படவிழா 9, 10,11ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதன் துவக்கவிழா சென்னை வடபழனி பிரசாத் லேப் தியேட்டரில் துவங்கப்பட்டது , துவக்கவிழாவில் பேசிய பா.இரஞ்சித் இந்திய சினிமாவில் பல்லாயிரங்கணக்கான திரைப்படங்கள் தயாரிக்கப்பட்டு பல ஆண்டுகளாக மக்களிடையே காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சினிமா படங்கள் மக்களில் கலாச்சாரத்தை பிரதிபலிக்கின்றன. சினிமாவில் பயன்படுத்தப்படும் மொழியும், வாழ்வியலும், ஆவணமாகின்றன. கலாச்சாரத்தையும், வாழ்வியலையும் அடுத்த தலைமுறைக்கு எளிதாக கொண்டுசெல்லும் வலிமை சினிமாவுக்கு உண்டு. அப்படிப்பட்ட சினிமா இங்கு என்னவாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பார்வையாளராக, படைப்பாளிகளாக நாம் அதை எவ்வாறு அணுகுகிறோம். சமூகத்தில் பிரதிபலிப்பதுதான் சினிமாவிலும் பிரதிபலிக்கிறது. நாம் சினிமாவை எப்படி அணுகவேண்டியதாயிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் சமூக அக்கறையோடு, சமூக நீதி பேசுகிற படங்கள் இந்திய சினிமாவில் சமீபகாலங்களாக வெளிவந்துகொண்டிருக்கின

பாராட்டுக்களை தலையில் வைத்துக்கொள்ள கூடாது - ‘கம்பெனி’ பட விழாவில் பாரதிராஜா

ஸ்ரீ மகானந்தா சினிமஸ் நிறுவனம் சார்பில் ஆர்.முருகேசன் தயாரித்திருக்கும் படம் ‘கம்பெனி’. எஸ்.தங்கராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் பாண்டி, முருகேசன், திரேஷ் குமார், பிரித்வி, வலினா, காயத்ரி, வெங்கடேஷ், ரமா, சஞ்ஜீவ் பாஸ்கரன், சேலம் ஆர்.ஆர். தமிழ்செல்வன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜுபின் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் எழுதியுள்ளார். இப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜா, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, தயாரிப்பாளர் கே.ராஜன், நாக் ஸ்டுடியோ கல்யாணம், கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், சேலம் ஆர்.ஆர் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள். பாரதிராஜா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் ஆர்.முருகேசன், “ஸ்ரீ மகானந்தா சினிமாஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் ‘கம்பெனி’ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா சார், தயாரிப்பாளர்களின் ப

Infiniti Film Ventures வழங்கும், இயக்குநர் CS அமுதன் இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிக்கும் “ரத்தம்” படத்தின் இந்திய படப்பிடிப்பு நிறைவு

விஜய் ஆண்டனி தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரது நடிப்பில் பல படங்கள், தயாரிப்பின் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. அதில், கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோரால் Infiniti Film Ventures சார்பில் தயாரிக்கப்படும், CS.அமுதன் இயக்கும் 'ரத்தம்' படமும் ஒன்று. வேகவேகமாக நடந்து வரும் இந்த படத்தின் படபிடிப்பு பணிகளில், தற்போது படக்குழு இந்திய படபிடிப்பை நிறைவு செய்துள்ளது. இந்திய படப்பிடிப்பு நிறைந்த நிலையில் படக்குழு உற்சாகத்தில் உள்ளது. மேலும் வெளிநாட்டு படபிடிப்பை படக்குழு வெகு விரைவில் துவங்கவுள்ளது. முற்றிலும் புதிய களத்தில் பரபர திருப்பங்களுடன் கூடிய ஒரு மாஸ் பொழுதுபோக்கு படமாக உருவாகும் "ரத்தம்" படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். மேலும் நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ் (Family man புகழ்), OAK சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன், ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணன் (இசை), கோபி அமர்நாத் (ஒளிப்பதிவு), சுரேஷ்

“ஒரு ஆசம் தொடக்கம்” நிகழ்வுடன், தமிழ் புத்தாண்டை வரவேற்கிறது ஜீ5

ஜீ5 தளத்தில் தமிழின் முன்னணி படைப்பாளி இயக்குநர் வெற்றிமாறனின் ஒரிஜினல் தொடர், பிரகாஷ் ராஜ் மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரின் அடுத்த தொடர் மற்றும் தமிழ் பார்வையாளர்களுக்காக பிரத்யேகமாக தொகுக்கப்பட்ட சிறப்பான கதைகளுடன்  பல ஒரிஜினல்  தொடர்கள்  வரவுள்ளது ஜீ5 தளத்தில் வரவிருக்கும், புதிய அதிரடி ஒரிஜினல் தொடர்கள்  பற்றிய அறிவிப்பு,  தமிழ் படைப்பாளிகளான இயக்குநர் வெற்றிமாறன், விஜய், வசந்த பாலன் ,  கிருத்திகா உதயநிதி ஆகியோர் முன்னிலையில் வெளியிடப்பட்டது. நடிகர்-இயக்குனர்- பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர், இத்தளத்தில் வரவிருக்கும் தங்களது நிகழ்ச்சிகளை,  வைரல் ஹிட் “விலங்கு” தொடரின்  நடிகர்கள் மற்றும் குழுவினர் முன்னிலையில் அறிவித்தனர். ஜீ5 , சென்னையில் மிளிரும் நட்சத்திரங்கள் நிரம்பிய பிரமாண்டமாக நடந்த  “ஒரு ஆசம் தொடக்கம்”  நிகழ்ச்சியில் –  தமிழில் அடுத்தடுத்து வரவிருக்கும் அழுத்தமான கதைகளின் வரிசையை அறிவித்தது. தமிழின் முக்கிய படைப்பாளிகள் பங்குகொள்ளும் இந்த படைப்புகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. தமிழின்  பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில்

அசல் ஓய்வுபெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்துள்ள யதார்த்த படமாக உருவாகியுள்ளது 'போலாமா ஊர் கோலம் '

  அசல் ஓய்வுபெற்ற மூத்த கால்பந்தாட்ட வீரர்கள் 20 பேர் நடித்துள்ள யதார்த்த படமாக உருவாகியுள்ளது 'போலாமா ஊர் கோலம் '. இப்படத்தை நாகராஜ் பாய் துரைலிங்கம் இயக்கியுள்ளார். கஜசிம்ஹா மேக்கர்ஸ் சார்பில்  தயாரித்துள்ளார். பிரபுஜித் படத்தை இயக்கியிருக்கும் நாகராஜ் பாய்  துரைலிங்கம் கலாபிரபு தொடங்கி  விக்னேஷ் சிவன், ஹெச். வினோத் வரை பல இயக்குநர்களிடம் பல்வேறுபட்ட படங்களில் துணை, உதவி, இணை இயக்குநராகப் பணிபுரிந்த அனுபவம் பெற்றவர். இதில்  கதாநாயகனாக பிரதான கதாபாத்திரம் ஏற்றிருக்கும் பிரபுஜித், ஒரு நடிகராக ஏற்கெனவே சுட்டுப் பிடிக்க உத்தரவு ,ஜகமே தந்திரம், பேட்ட,போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவர்தன் பள்ளி, கல்லூரி நண்பர்கள் உதவியில் கிரவுட் பண்டிங் எனப்படும் கூட்டு நிதிப் பங்களிப்பு முறையில் தயாரித்துள்ளார். இன்னொரு முக்கிய பாத்திரமேற்றுள்ள மதுசூதன் பெரிசு உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர். இதில் நாயகியாக நடித்துள்ள சக்தி மகேந்திரா பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்றவர். முதன் முதலாக இதில் நாயகியாக நடித்துள்ளார். கதாநாயகன் கதாநாயகியை இயக்குனர் அறிமுகம் செய்துள்ளார். இவர்கள் தவி