நடிகர் 'காதல்' சுகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பிரீத்தி நடிக்கிறார். படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகனுக்கு இணையாக ஜெயக்குமார் நடித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி, அலெக்ஸ் இயக்குகிறார். ஒளிப்பதிவு ராஜேஷ், இசை ராஜா, பாடல்கள் பூமாதேவி, பாலமுருகன், ஜெயக்குமார், இணை இயக்கம் நாகேந்திரன், உதவி இயக்கம் பார்த்திபன், வள்ளி, சண்டைப் பயிற்சி சிவ பிரகாஷ், எடிட்டிங் நாகர் ஜி, நடனம் பாரதி, பிஆர்ஓ கோவிந்தராஜ், இணைத் தயாரிப்பு எஸ்.அலெக்ஸ், தயாரிப்பு எஸ்.ஜெயக்குமார்.
கொடைக்கானல் ,மதுரை மற்றும் சுற்று வட்டாரங்களில் இயல்பான கதை மாந்தர்களுடன் மண்ணின் மணம் மாறாமல் "தொடாதே" படமாகி இருக்கிறது. குடியைத் தொடாதே, பெண்ணின் விருப்பமில்லாமல் தொடாதே, போதைப் பொருட்களை தொடாதே எனும் கருத்தை மையமாக வைத்து திரைக்கததை அமைத்திருக்கிறார் இயக்குனர் அலெக்ஸ்.
தொடாதே படம் மக்கள் மனதை தொடும் அளவிற்கு சிறப்பாக தயாரித்து வருகிறார் எஸ்.ஜெயக்குமார்.
படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெளியீடும், அதை தொடர்ந்து திரையரங்குகளில் படம் வெளியாகிறது.
PRO_கோவிந்தராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக