முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Koo introduces celebrates World Translation Day by enabling the translation feature on the microblogging platform

Leaders, celebs and prominent personalities are now able to connect  with a wider audience pan-India through a first-of-its-kind translation feature Chennai, Oct 1: Microblogging platform Koo - which empowers Indians to connect and express in their native languages, celebrates International Translation Day by now enabling real-time translation of content across eight distinct Indian languages. A first-of-its-kind feature enables the automatic translation of a Koo into Hindi, Marathi, Kannada, Tamil, Assamese, Bengali, Telugu and English  -  thereby enhancing the digital reach and encouraging conversations and expressions of thought through languages that reflect India’s rich linguistic diversity. Koo is the first social media platform in the world to enable this tech-driven translation feature. As a multi-lingual microblogging platform, Koo has attracted users and public personalities from all walks of life - Chief Ministers, political leaders, sports stars, celebrities, sp

முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி நடிக்கும் ‘விநோதய சித்தம்’- ஜீ5 ஒரிஜினல் படம் அக்டோபர் 13 முதல்

‘லாக்கப்’‘கபெ.ரணசிங்கம்’”மதில்’  ‘ஒருபக்க கதை’‘மலேஷியா டு அம்னீஷியா’ “டிக்கிலோனா”உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்ததை தொடர்ந்து மேலும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க ஜீ5 திட்டமிட்டுள்ளது.  இந்த வரிசையில் ஜீ5தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “விநோதய சித்தம்” என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில்முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி இயக்கி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல நடிகர் தம்பி இராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபிராமி ராமநாதன் இப்படத்தை தயாரித்துள்ளார்.  மேலும் “விநோதய சித்தம்”படத்தில் முனிஸ்காந்த், சஞ்சிதா ஷெட்டி, ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மூத்த ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் ஒளிப்பதிவை மேற்கொள்ள ரமேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.  சமுத்திரகனி கூறுகையில், ‘மனித மனம் வேடிக்கையானமுறையில் நடந்து கொள்கிறது. நம்மால் அவற்றை கட்டுப்படுத்த முடியாது. இதுதான் இப்படத்தின் அடிப்படை கரு. அனைவராலும் இப்படத்தின்கதையை  உணர்ந்துகொள்ளமுடியும். இந்த கதை பார்வையாளர்களுடன்உரையாடும். இந்த படத்தை பார்வையாளர்களுக்குகாண்பிப

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற கண் மருத்துவ முகாம்

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கத்தின் கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.  இதில் நடிகர் வினய்,  சிகரம் குழுமத்தின் சேர்மன் சந்திரசேகர்,  ஜெயா மருத்துவமனை டாக்டர் கீதா, கண் பரிசோதகர் சையது மற்றும் பிஆர்ஓ யூனியன் சங்க தலைவர் டைமண்ட் பாபு கலந்து கொண்டனர்.  சிறப்பு விருந்தினர்களை ஆபிரகாம் (கோடங்கி) வரவேற்றார்.  நிகழ்ச்சியில் சங்கத்தின் தலைவி கவிதா பேசும் போது, "நிறைய நடிகர்களை நாம் தினம் சந்திக்கிறோம். ஆனால் சிலர் பத்திரிகையாளர்களுக்கும் நிருபர்களுக்கும் ஒரு நல்ல புரிதலோடு உறவுகளோடு பழகுவார்கள்.  அவர்களில் ஒருவர் தான்  வினய் ''உன்னாலே உன்னாலே'' படத்திலிருந்து   எப்படி அவரை சந்தித்தேனோ  அன்று முதல் இப்போது வெளியாக உள்ள  டாக்டர் படம் வரைக்கும் அவருடைய இயல்பும் குணமும் மாறவில்லை.  இரண்டு தடவை வெவ்வேறு படங்களின் ஷூட்டிங் ஸ்பாட்டில் போய் வினயை சந்தித்த போதும்,  அதிகமுறை சண்டை போட்டிருக்கிறேன்.  அதற்கு காரணம், அப்போது நிறைய புகைப் பிடித்து அவருடைய  பற்கள் எல்லாம் கெட்டுப் போயிருந்தது .  அதை நேரடியாக ஒரு பேட்டி எடுக்கும் போது தெரிவித்தேன் . அடுத்த படம் சூட்டிங் ஸ்ப

பெஃப்ஸி தொழிலாளர்களின் குடியிருப்பு திட்டத்திற்காக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடை

திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் சார்பில் சென்னையில் எழுப்பப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்திற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி ஒரு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கினார். இதற்காக நடைபெற்ற விழாவில் பெஃப்ஸி தலைவர் ஆர் கே செல்வமணி, செயலாளர் சபரீகீரிசன் மற்றும் 23 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும், செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தயாரிப்பாளர் எஸ் தாணு, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோரும் கலந்து கொண்டனர். விழாவில் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி உள்ளிட்ட பெஃப்ஸி நிர்வாகிகளிடம் வழங்கினார். முன்னதாக மேன் கைண்ட் ( Man Kind)  என்ற நிறுவனம் சார்பில் முப்பத்தியோரு லட்ச ரூபாய் நிதி உதவியாக பெஃப்ஸி சம்மேளனத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. பெஃப்ஸியின் தலைவர் ஆர்கே செல்வமணி பேசுகையில்,''இது ஒரு கனவு. ஒரு உதவி இயக்குனருக்கு திரைப்படம் இயக்க வேண்டும் என்பது எப்படி கனவாக இருக்கிறதோ.. அதேபோல் திரைப்படத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு கனவு. ந

நடிகர் மயில்சாமி பிறந்த நாளை முன்னிட்டு படக்குழுவினருக்கு பிரியாணி வழங்கிய உதயநிதி ஸ்டாலின்

"Article 15" தமிழ் பதிப்பாக உருவாகும் படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடிக்கின்றார். கதாநாயகியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடிக்கின்றார் தற்போது பொள்ளாச்சியில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமி தனது பிறந்தநாளை இயக்குனர் அருண்ராஜா காமராஜ், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், தான்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருடன் இணைந்து  மகிழ்ச்சியுடன் கேக் வெட்டி  கொண்டாடினார்.  அனைவரும் தங்களது வாழ்த்துக்களை நடிகர் மயில்சாமிக்கு தெரிவித்தனர். நடிகர் மயில்சாமி தனது பிறந்த நாளை முன்னிட்டு 300 குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வழங்கினார். மேலும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மயில்சாமியின் பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி வழங்கினார். மயில்சாமி கேக் வெட்டி கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்பது குறிப்பிடத்தக்கது. Zee Studios மற்றும் போனி கபூர் அவர்களின் Bayview Projects வழங்க ROMEOPICTURES வெளியிடும் இப்படத்தை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்குகிறார்.