முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரஜினியை அடுத்து செய்தியாளர்களை சந்திக்கின்றார் கமல்ஹாசன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்த பின் 2 நிமிடங்கள் மட்டும் செய்தியாளர்களை சந்தித்த நிலையில் நாளை கமலஹாசன் செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளது இது குறித்து மக்கள் நீதி மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: நாளை அதாவது டிசம்பர் 1ஆம் தேதி மக்கள் நீதி மையம் கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் கமலஹாசன் அவர்கள் பத்திரிகையாளர்களை சந்திக்க இருக்கின்றார்

இந்தியாவுக்கு மீண்டும் பெருமை சேர்த்த ஏ.ஆர்.ரஹ்மான்

இந்திய சினிமாவின் பொக்கிஷமாகவும் ஹாலிவுட் திரையுலகம் கொண்டாடும் ஆஸ்கர் நாயகனாக வலம்வருபவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தற்போது அந்தராங்கே , கோப்ரா உள்ளிட்ட படங்களுக்கு தற்போது இசையமைத்து வருகிறார். இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் பிரிட்டிஷ் அகாடமி ஆஃப் பிலிம் அண்ட் டெலிவிஷன் ஆர்ட்ஸ் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, உலக அரங்கில் இந்தியக் கலைஞர்களின் திறமைகளைப் பார்க்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். உலக அளவில் இந்தியாவின் பெருமையை மேலும் உயர்த்தியுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்திய அளவில் ‘கே.ஜி.எஃப்’ தயாரிப்பு நிறுவனம் நிகழ்த்தவுள்ள சாதனை

இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்கள் எடுக்கும் நிறுவனங்கள் மிகவும் குறைவே. அதிலும் அனைத்து மொழிகளிலும் வெளியிடுவது போன்ற படங்களைத் தயாரிப்பது அரிதினும் அரிதே. ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter 1’) படத்தைத் தயாரித்து, அதை அனைத்து மொழிகளிலும் வெளியிட்டு பிரம்மாண்ட வெற்றி கண்ட நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films).   கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டார்களான புனித் ராஜ்குமார் (Puneeth Rajkumar) நடித்த ‘நின்னிந்தலே’ (Ninnindale), ‘ராஜ்குமாரா’ (Raajakumara)  மற்றும் யஷ் (Yash) நடித்த ‘மாஸ்டர் பீஸ்’ (Masterpiece)  உள்ளிட்ட படங்களைத் தயாரித்தது ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films). இதில் கன்னட திரையுலகில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையைப் புரிந்தது ‘ராஜ்குமாரா’ (Raajakumara) திரைப்படம். இதனைத் தொடர்ந்து இந்திய அளவில் தன்னுடைய நிறுவனத்தை வளர்க்க முடிவு செய்தார் ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) நிறுவனர் விஜய் கிரகண்தூர் ( Vijay Kiragandur ) இதற்காக ஹொம்பாளே பிலிம்ஸ் (Hombale films) தயாரித்த படம் தான் ‘கே.ஜி.எஃப் சேப்டர் 1′ (KGF : Chapter : 1’ ) பிரஷான்த் நீலின் (Prasha

தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில் சிறப்பாக பூஜையுடன் தொடங்கப்பட்ட இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4

"தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் PRODUCTION NO.4 இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில் சிறப்பாக பூஜையுடன் தொடங்கப்பட்டது... கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு மிக பிரம்மாண்டமான முறையில் ஏராளமான நட்சத்திரங்களுடன் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்.... மேலும் இப்படத்தினை தயாரிக்கும் PSS Production & I Creations தயாரிப்பாளர்களான திருமதி. Dr.பிரீத்தி ஷங்கர் மற்றும் உஷா அவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்... ஒளிப்பதிவு - வினோத் ராஜா இசை - AJ அலிமிர்ஸாக் எடிட்டிங் - C.கணேஷ் குமார் ஸ்டண்ட் - கோட்டி கலை இயக்குனர் - விஜய் தென்னரசு Designs - Blesson P.R.O- சுரேஷ் சந்த்ரா மேலும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய முறையான அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

ரஜினி கட்சி தொடங்குவார்’.. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் அரசியல் எதிர்பார்ப்பு.. நம்பிக்கையில் மக்கள் மன்ற உறுப்பினர்கள்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்களிடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு டிசம்பரில், ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி தொடங்கப் போவது உறுதி எனக் கூறி, தன் தேர்தல் அரசியல் பிரவேசத்தை முதல்முறையாக உறுதிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றத்தின் பெயர், ரஜினி மக்கள் மன்றம் என மாற்றப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர், ஏசிஎஸ்.மருத்துவக் கல்லூரி விழாவில், எம்.ஜி.ஆர்.சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினிகாந்த், தன்னால் எம்.ஜி.ஆர்.ஆட்சியை கொடுக்க முடியும் என குறிப்பிட்டு, மீண்டும் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார் இதனைதொடர்ந்து ஓரிருமுறை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினி, கடந்த மார்ச் மாதம் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் பேசிய போது, தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்படுவது தெரிந்தால்தான், அரசியலுக்கு வருவேன் என்றார். அதற்குள் கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது. இருப்பினும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்துகள்

பொது ஊரடங்கு உத்தரவு, தளர்வுகளுடன், 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது

ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளில் புதிய தளர்வுகளுடன் 31.12.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது. கலை அறிவியல், பொறியியல் உள்ளிட்ட கல்லூரி, பல்கலைக்கழகங்களில் வரும் 7ஆம் தேதி முதல் இறுதியாண்டு இளநிலை வகுப்புகள் தொடங்கும். மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரிகளில் இளநிலை வகுப்புகள் 7ஆம் தேதி முதல் தொடங்கும். மருத்துவப் படிப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். விளையாட்டுப் பயிற்சிக்காக மட்டும் நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி. 14.12.2020 முதல் மெரீனா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும். பொருட்காட்சி அரங்கங்களில் வர்த்தகர்களுக்கு இடையேயான செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி

’மாவட்ட செயலாளர்களின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை’.. ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்

ராகவேந்திர மண்டபத்தில் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களிடம் ஆலோசனை நடத்திவரும் ரஜினிகாந்த், கட்சி தொடங்கலாமா எனக் கேட்டதாகவும், கட்சி தொடங்கினால் வெற்றி வாய்ப்பு உள்ளது என செயலாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனையில் ஈடுபட இருக்கும் நிலையில் நேற்று மக்கள் மன்ற மாநில நிர்வாகி சுதாகர் ரஜினிகாந்துடன் போயஸ் கார்டன் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். அரசியல் கட்சியை தொடங்கி, அடுத்த ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்தார். இந்நிலையில், மக்கள் மன்ற மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்காக 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் இருந்து இன்று சென்னைக்கு வந்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை பலாத்காரம் செய்தவன் கைது

திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய சிறுமியை பலாத்காரம் செய்தவன் கைது திருவள்ளூர் மாவட்டத்தில் சமூக வலைதளம் மூலம் அறிமுகமாகிய மூன்றே நாளில் காதலனை தேடி சிறுமி சென்னை வந்துள்ளார்.  சென்னை வந்த 17 வயது சிறுமியை 17 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.  சிறுமியை பலாத்காரம் செய்த சிறுவனை போலீசார் கைது செய்துள்ள நிலையில் மற்றொரு சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.

ரஜினி ஆலோசனை கூட்டத்தின் முக்கிய தகவல்கள்

மக்கள் மன்றத்தின் செயல்பாடுகளை பொது மக்கள் எப்படி பார்க்கிறார்கள் ?? கட்சி தொடங்கினால் தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும் என ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்கள் இடம் கேள்வி. 2021 சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் களம் காண வேண்டும் மாவட்ட செயலாளர்கள் ரஜினியிடம் கோரிக்கை. தேர்தலில் களம் காணும் பட்சத்தில் தனித்து போட்டியிடலாமா ? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா?  என்பது குறித்தும்  ஆலோசிக்கப்பட்டு வருகிறது. நான் முடிவெடுக்கும் வரை பொறுத்திருங்கள். சில மாவட்ட செயலாளர்களின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை இன்னும் கடுமையாக உழைத்தால் மட்டுமே அடுத்த கட்ட செயல்பாடுகளுக்கு செல்ல முடியும்... உங்களுடைய செயல்பாடுகளில் திருப்தி இல்லை. அரசியல் கட்சி தொடங்குவது குறித்து நான் முடிவெடுக்கிறேன்.   ரஜினி

மக்களின் பேராதரவோடு வெள்ளித்திரையில் அசத்தும் அல்டி

தமிழ் சினிமாவின் இணையற்ற நகைச்சுவை நடிகர்களில் மயில் சாமி அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் அவருடைய மகன் அன்பு மயில்சாமி கடந்த நவம்பர் 27ம் தேதி திரைக்கு வந்த 'அல்டி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்துள்ளார்.  'அல்டி' என்ற இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஜெ.உசேன் இயக்கியுள்ளார்.  இந்நிலையில் கடந்த நவம்பர் 27ம் தேதி வெளியான இந்த திரைப்படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வாரம் வெளியான படங்களில் 'அல்டி' மிகவும் பேசப்படுகின்ற படமாக வெற்றிநடை போட்டு வருகின்றது.  முதல் திரைப்படம் என்ற பிம்பத்தில் இருந்து மாறுபட்டு இயக்குநர் எம்.ஜெ.உசேன் இந்த படத்தை திரில்லர் கலந்த காதல் திரைப்படமாக அளித்துள்ளார். மக்களுக்கு தேவையான கருத்துக்களுடன் ஜனரஞ்சகமான ஒரு படமாக 'அல்டி' கலக்கி வருகின்றது.  அறிமுக படம் என்றபோது, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்துள்ளார் அன்பு மயில்சாமி. நடன இயக்குநர் ராபர்ட் தான் நடித்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்றால் அது மிகையல்ல. மொத்தத்தில் மக்கள் ரசிக்கும் அ

அட்லியை பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்!!! அடுத்த படத்தில் கூட்டணியா?

இயக்குநர் அட்லி தயாரித்த அந்தகாரம் படம் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இயக்குநர் அட்லியை அழைத்துப் பாராட்டியுள்ளார். இயக்குநர் அட்லி தயாரிப்பில் புதிய இயக்குநர் விக்னராஜன் இயக்கியுள்ள படம் அந்தகாரம். கைதி படத்தில் நடித்திருந்த அர்ஜூன் தாஸ் நடித்துள்ளார். அந்தகாரம் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி பலதரப்பினரிடையே நல்லவிமர்சனத்தைப் பெற்றுள்ளது. இந்நிலையில் அந்தகாரம் படத்தைப் பார்த்த நடிகர் கமல்ஹாசன் இப்படக்குழுவினரை அழைத்துப் பாராட்டியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் இயக்குநர் அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலு, அதில், உங்கள் வார்த்தைகள் எங்களுக்கு உற்சாகமாகவும் உந்துததலாகவும் இருந்ததாகவும் தெரிந்து ஐலவ் யூ சார் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. மேலும் அடுத்து நடிகர் கமல்ஹாசன் அட்லியின் இயக்கத்தில் நடித்தாலும் நடிக்கவாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.

கள்ள காதலியாக மாறிய அர்ஜுமன்(ள்)

"தாதா 87" வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் 'விஜய் ஸ்ரீ ஜி', ஜிமீடியா தயாரிப்பில் "பொல்லாத உலகில் பயங்கர கேம்" (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார்.    இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் பெண் வேடத்திற்கான புதிய லுக் கார்த்திகை மாத தீபம் ஏற்ற வந்தாள் (ன்)   'பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அனித்ராநாயர், ஆராத்யா, சாண்ட்ரியா, நடோடிகள் சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி,பிக்பாஸ் ஜூலி, கதிர் ஆகியோரும் நடிக்கின்றனர்.   இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி லீ யாண்டர் லீமார்டி இசையில் 'கள்ள காதலா'    https://youtu.be/p1n80LuEczg   பாடல் வெளியாகி ரசிகர்களின்   மனதில் இடம் பிடித்துள்ளது பாலாஜிபாஸ்கரன் ஒளிப்பதிவில் ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' (பப்ஜி) படமானது 2021ம் ஆண்டு பொங்கலன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் ஆதரவோடு அசத்தும் 'அல்டி' - படக்குழுவிற்கு வாழ்த்துச்சொன்ன MLA விருகை வி.என். ரவி

தமிழ் சினிமாவின் இணையற்ற நகைச்சுவை நடிகர்களில் மயில் சாமி அவர்களுக்கும் முக்கிய பங்குண்டு. இந்நிலையில் அவருடைய மகன் அன்பு மயில்சாமி நேற்று திரைக்கு வந்த 'ஆல்டி' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனது தடத்தை பதித்துள்ளார். 'ஆல்டி' என்ற இந்த படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஜே.ஹுசைன் இயக்கியுள்ளார். மேலும் பிரபல இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். நகைச்சுவை, வில்லன் போன்ற பல கதாபாத்திரங்கள் ஏற்று நடித்து அசத்திய நடிகர் சென்ட்ராயன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். நேற்று வெளியான அல்டி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் அன்பு மயில் சாமி மற்றும் அல்டி படக்குழுவினருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அதிமுக எம்.எல்.ஏ திரு. விருகை வி.என். ரவி அவர்கள்.

300 கோடிக்கும் மேலான மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா”

ஆலியா பட், ரன்பீர் கபூர் நடிக்கும் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்தியாவில் இது வரை இல்லாத வகையில் 300 கோடிக்கும் மேலான மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகிறது. “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இந்திய மொழிகளான இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியாகிறது. உதய் சங்கர் ( ஸ்டார் & டிஸ்னி இந்தியா சேர்மன் ) சமீபத்திய பேட்டி ஒன்றில் “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இதுவரை இந்தியாவில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் முதன்மையான படமாக இருக்கும் என்று கூறினார். HT Leadership Summit 2020 ல் திரு சங்கர் அவர்கள் CNBC TV 18 உடைய அனுராதா செங்குப்தாவுடன் உரையாடியபோது... “பிரம்மாஸ்த்ரா” திரைப்படம் இதுவரை இந்தியாவில் உருவான மிகப்பெரிய பட்ஜெட் படமாக இருக்கும் என்று கூறினார். படத்தின் பட்ஜெட் 300 கோடி என்று பரவும் வதந்திகள் குறித்து கேட்டபோது, உங்களிடம் ஒன்றை சொல்கிறேன் இப்படம் அதனையும் தாண்டிய பெரிய பட்ஜெட் படம் என்றார். மேலும் அவர் கூறியபோது இந்த வகையில் உருவாகும் பிரமாண்ட படம் எதுவாயினும் அது அனைத்து வகையிலும் ரசிகனுக்கு அந்த பேரனுபவத்தை தரும் சாத்தியங்களை முழுமையாக அடையவேண்டும். அந்த

நெட்ஃபிளிக்ஸ் , தனது தயாரிப்பில் முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை வெளியிட்டது

இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள “பாவகதைகள்” ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகிறது. மும்பை, நவம்பர் 27, 2020 : நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது முதல் தமிழ் ஆந்தாலஜி திரைப்படமான “பாவகதைகள்” டீஸரை இன்று வெளியிட்டது. இந்த ஆந்தாலஜி திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் டிசம்பர் 18, 2020 அன்று வெளியாகவுள்ளது. இயக்குநர்கள் சுதா கொங்குரா, விக்னேஷ் சிவன், கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் இணைந்து இப்படத்தினை இயக்கியுள்ளனர். “பாவக்கதைகள்” காதல், அந்தஸ்து, கௌரவம் ஆகியவை நம் உறவுகளில் ஏற்படுத்தும் மாற்றங்களை கூறும் நான்கு அழகான கதைகளை ஆந்தாலஜி வகையில் சொல்லும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலா வின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள். நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. தமிழின் புகழ்மிகு பெரு நட்சத்திரங்களான அஞ்சலி, பவானி ஶ்ரீ, கௌதம் வாசு

குழந்தைகளுடன் கும்மாளமிடும் நான் கடவுள் ராஜேந்திரன் " தகவி" படத்தில் கலகலப்பு

ஒவ்வொரு பத்து வருடங்களுக்குப் பிறகு குழந்தைகள் நடிக்கும் படம் வெளிவருவது வாடிக்கை. அந்த வரிசையில் நான் கடவுள் ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் பங்கேற்று குழந்தைகளுடன் கும்மாளமிடும் புதிய படத்தின் பெயர் தான் " த க வி". "ஆளும் வளரனும் அறிவும் வளரனும் அது தான்டா வளர்ச்சி ..... உன்னை ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி.. என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் வைர வரிகளில் உள்ள இன்றையசமுதாயத்திற்கு ஏற்ற ஜீவனான கருத்தை கொண்டு ஒரு படத்தை உருவாக்கி வருகிறோம். இதில் பவாஸ். குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன் " நான் கடவுள் ராஜேந்திரன் கும்மாளமிட்டு கலகலப்பு ஊட்டும் காட்சிகளை சமீபத்தில் சேலத்தில் படமாக்கினோம். குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழியில் நடக்க செய்வது ஒரு சவாலான காரியம். இதை சவாலாக ஏற்று ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம்." என்று கூறுகிறார் இயக்குனர் சந்தோஷ்குமார் . சிவகுடும்பம் பிலிம்ஸ் சார்பில் எஸ்.நவீன்குமார் தயாரிக்கிறார். நான் கடவுள் ராஜேந்திரனுடன், சிங்கம் புலி , அஜய் ரத்தினம், வையாபுரி மற்றும் ராகவ் , ஜெய் போ

Entrepreneurs from Coimbatore Launch ‘MY’ - India’s First Safety Lifestyle Company Launches personal protection products to redefine personal lifestyle

Chennai, 24th November, 2020: As the need for quality personal protective gear is increasingly   becoming a critical part of everyday human lifestyle across age groups, the two young entrepreneurs   from Coimbatore, Mr. Kavin Kumar Kandasamy and Mr. Raja Palanisamy, have launched a personal   lifestyle brand ‘MY’, a new company dedicated to the design, manufacturing and production of Indianmade safety products and services with Innovation, Design and Sustainability at its core. The company   was launched on 29th of October 2020 in the presence of Erik Solheim, The Sixth UN Environment   Executive Director and Under-Secretary-General of the United Nations, UNEP and K. Abdul Ghani, Founder of YouThink International Foundation.   As a part of this launch, the company is proud to announce the unveiling of a first-of-its-kind IndianMade UV One Pocket Sanitizer and UV Safe Tabletop Sanitizer along with other unique indigenous   products such as Anti-Viral Protection Masks, Scarves and Overal

Marine Bio Donates High-End Protective Masks to Rajiv Gandhi Government General Hospital

Chennai, 27 Nov. 2020 Marine Bio Co. Ltd. , a South Korean firm with the support of the  Korean Trade-Investment Promotion Agency (KOTRA)  donates hundreds of high-end  Air Queen masks to Rajiv Gandhi Government General Hospital , as part of the corporate social responsibility initiative towards COVID-19 warriors.  Dr. E. Theranirajan , Dean, Rajiv Gandhi Government General Hospital, received the high-end protective Air Queen masks from Marine Bio Co Ltd - South Korea. Dr. E. Theranirajan, Dean, Rajiv Gandhi Government General Hospital, said “Living in pandemic times, the need for protective face masks for the medical professionals is always critical. I thank Marine Bio and KOTRA for their kind gesture and support in the fight against coronavirus”. The Air Queen antibacterial nanofiber mask consists of three layers, three panels, and a fold, which filters virus and bacteria efficiently. The nanofiber filter’s average space is smaller than 1(0.6) micrometre (µm), which prevents the pene

Celebrities Sridevi and Preetha master their culinary skills with Chef Damu & Chef Shreeya on Colors Kitchen

  ~ Tune in to Colors Tamil on November 28 th  and 29 th  at 12 pm to watch them cook up some delectable dishes~ Chennai 26 th  November 2020:   Simple, scrumptious and sinful…  This weekend’s episodes of Colors Kitchen promise to be all this and more with Chef Damu, Chef Shreeya Adka and celebrities Sridevi and Preetha whipping up flavourful dishes while entertaining you with their charm and wit. Here are 3 mouth-watering reasons to tune into Colors Kitchen on Colors Tamil on Saturday, November 28 and Sunday, November 29 at 12 pm.   Flavour Galore:  Well-known for reviving and recreating authentic dishes of Tamil Nadu with his rustic touch, Chef Damu will begin by creating a zesty meal. Preparing two simple yet delectable dishes as part of the segment  Damu Darbar   – Easy Coconut Rice & Katherikai Kadaichal -- Chef Damu will be seen sharing interesting anecdotes about the range of handpicked ingredients used in these recipes to bring out their flavours.   Celebrity Chefs : Reverb

முதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா?

நிவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் இடைவிடாது பெய்து வரும் மழை ஒருபக்கம்,பலத்த காற்று ஒரு பக்கம், முழு கொள்ளளவை எட்டியதால் திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் ஒருபக்கம் என சென்னைவாசிகளை பல முனைகளிலும் நின்று தாக்குகிறது இயற்கை. இந்த சூழலில் வீடுகளை இழந்தோர், உணவில்லாமல் தவிப்போர், தத்தளிக்கும் மீனவர்கள், ஆதரவில்லாத முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் களத்தில் நிற்கிறார் மூத்த அமைச்சர் ஒருவர். தன் சொந்தப் பணத்தைக் கொண்டு பல்வேறு உதவிகளை இரண்டு நாட்களாக செய்து வருகிறார் அவர். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ரெயின் கோட் அணிந்து தண்ணீர் சூழ்ந்த பல்வேறு பகுதிகளுக்கும் நேரடியாக சென்று குறைகளை கேட்பதும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பத்திரமாக முகாம்களுக்கு அனுப்பி வைப்பதும், உணவு சமைத்து தானே விநியோகம் செய்வதும் அத்தியாவசிய பொருட்களை அள்ளிக் கொடுப்பதும் இந்த அமைச்சரின் வாடிக்கையான விஷயமாக மாறியிருக்கிறது. காரில் வலம் வந்து வேடிக்கை பார்ப்பவர்களுக்கு மத்தியில் மக்கள் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக அழைத்து அதற்கு தீர்வு காண்பது என பல தளங்களில்,களங்

100 வது வந்தே பாரத் மிஷன் விமானத்தை மலேசியாவிலுருந்து வெற்றிகரமாக செலுத்திய இந்தியா

100 வது வந்தே பாரத் மிஷன் விமானத்தை இந்தியா மலேசியாவிலுருந்து வெற்றிகரமாக செலுத்தியது. 17,000 குடிமக்கள் மலேசியாவிலிருந்து இந்தியாவில் உள்ள 15 இடங்களுக்கு 6 மாதங்களில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். சென்னை நவம்பர் 24 . மலேசியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஸ்ரீ மிருதுல் குமார் கடந்த வாரம் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு 159 பயணிகளை ஏற்றிக்கொண்டு 100 வது வந்தே பாரத் மிஷன் (விபிஎம்) விமானத்தைக் கொடியசைத்தார். உலகெங்கிலும் உள்ள இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்காக இந்திய அரசு மேற்கொண்ட தேசிய முயற்சி, ஏர் இந்தியா விமானங்களும், இந்தியக் கடற்படைக் கப்பல்களும் உலகெங்கும் சிக்கியுள்ள கோவிட் 19 தொற்றுநோயால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை திரும்பக் கொண்டு வருவதற்காக தேசிய சேவையில் அழுத்தம் கொடுத்துள்ளன. வெளிநாட்டில் சிக்கி தவிக்கும் இந்தியக் குடிமக்களை திருப்பி அனுப்புவதற்காக அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான பயிற்சியாக வந்தே பாரத் மிஷன் உள்ளது மற்றும் சிவில் விமான போக்குவரத்து, உள்துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உட்பட ப

SAVE 50% ON INTERCONTINENTAL (IHG)® HOTELS & RESORTS IN INDIA THIS HOLIDAY SEASON

IHG has taken the biggest shopping event of the year to new heights with the launch of its Cyber Sale: a guaranteed 50% off participating hotels and resorts across India in key cities and popular leisure destinations such as Delhi, Mumbai, Chennai, Jaipur, Agra, Kochi, and Mahabalipuram and more; as well as in Middle East, Africa, Australasia, South Pacific and Asia, for IHG Rewards Club members when booking a two night minimum stay. Non-members will receive a guaranteed 45% off when booking a two-night minimum stay.  With Black Friday and Cyber Monday sales around the corner, savvy shoppers can treat themselves, friends and family to something that can’t be wrapped this holiday season.  IHG Rewards Club members will also receive a two-day pre-sale window to book:  • Sale dates: IHG Rewards Club members: 24 Nov to 2 Dec. Public sale begins 26 Nov to 2 Dec • Stay dates: IHG Rewards Club Members: 25 Nov to 30 June 2021. Public: 27 Nov 2020 to 30 June 2021 Plus, these offers a

Introducing West Chennai’s First Sports Themed Apartment Community: CASAGRAND Launches CASAGRAND Athens at Mogappair

→ First-of-its-kind property in Chennai featuring 100+ world-class amenities with 40+ exclusive sports features thoughtfully designed for a good life and an active lifestyle → 953 premium 2, 3 & 4 BHK apartments starting at Rs.45L  → 10 minutes from Anna Nagar, surrounded by prominent IT / ITES Companies, Schools, Colleges and Hospitals Chennai, 19th November 2020: Bringing in a neighbourhood exclusively for SPORTS and active living, CASAGRAND, one of the leading developers of South India, launched CASAGRAND Athens, West Chennai’s First Sports Themed Community at Mogappair. Sprawled across 8.09 acres of serenity, the project houses 953 superior apartments along with 100+ world-class amenities. Offering a balanced mix of 2, 3 & 4 BHK premium apartments ranging from 926 sft. to 2222 sft., CASAGRAND Athens aims to provide home buyers an unparalleled lifestyle at an affordable price point of Rs.3999/sft. CASAGRAND Athens offers 40 exclusive sports themed amenities such

பிபிசி தேர்ந்தெடுத்த சிறந்த பெண்கள் 2020 பட்டியலில் இயக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவைச்சார்ந்த பாடகி தேர்வு

பிபிசி 100 பெண்கள்’ என்ற பெயரில் சவால்களை தகர்த்தெறியும் 100 பெண்களின் பட்டியலை கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து பிபிசி வெளியிட்டு வருகிறது. இதில், உலகளவில் ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட்டு தன்னை மட்டுமல்லாது தன்னை சார்ந்த சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கும் உறுதுணையாக இருக்கும் பெண்களை கவுரவிக்கும் வகையில் பிபிசி செய்தி நிறுவனம், ஆண்டுதோறும் சிறந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2020-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண்கள் பட்டியலை பிபிசி வெளியிட்டுள்ளது. அதில் இயாக்குனர் பா.இரஞ்சித்தின் இசைக்குழுவான கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழுவின் பாடகி இசைவாணி இடம்பெற்றிருக்கிறார். சென்னையை சார்ந்த இசைவாணி கேஸ்ட்லெஸ் கலைக்குழுவின் முக்கியமான பாடகி, கானா பாடல்கள் மூலம் பலரின் பாராட்டுக்களைப்பெற்றவர். கானா பாடல்கள் என்றால் ஆண்கள் மட்டுமே பாடுகிறவர்கள் என்பதை உடைத்து அந்தத்துறையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக்கொண்டவர். கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் மூலமாக சமூகக்கருத்துக்களை மேடைகளில் பாடி பல்வேறு பாராட்டுக்களையும், விருதுகளையும் பெற்றுவரும் குழுவினருக்கு உலகின் பல்வேறு

“தௌலத்” நவம்பர் 27 முதல் திரையரங்குகளில்

ரைட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக எம்பி முகம்மது அலி தயாரிப்பில், சக்தி சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமான 'தௌலத்' வரும் நவம்பர் 27 ல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய தயாரிப்பாளர்... "தமிழ் திரையுலகில் இதுவரை 20'க்கும் மேற்பட்ட திரைப்படங்களை விநியோகித்து வெற்றி கண்ட 'ரைட் ஆர்ட்ஸ் நிறுவனம்' தற்போது "தௌலத்" திரைப்படத்தை தயாரித்துள்ளது. இண்டெர்நேஷனல் தரத்தில் முழுநீள ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தபடத்திற்கு  U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் பார்வையாளர்களால் கணிக்க முடியாத அளவிற்கு பல்வேறு திருப்பங்களுடன் மிரட்டலாக அமைந்துள்ளது. அடுத்தது என்ன நடக்கும் என்று தெரியாத அளவில் கதை நகரும்படி இப்படத்தின் படத்தொகுப்பு வேகத்தை கூட்டியுள்ளது. திரைக்கதையின் விறுவிறுபிற்கேற்ப அமைந்துள்ள பின்னணி இசை படத்திற்கு கூடுதல் சிறப்பு. எந்த ஒரு பிரம்மாண்டத்திற்கும் துவக்கம் சிறியதே. அப்படி சிறியதாக ஆரம்பிக்கப்பட்டு, சிறப்பாக வளர்ந்து ஒரு

காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவன தயாரிப்பில் பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் “புரடக்‌ஷன் நம்பர் 2” கோலாகல துவக்கம்

பொழுதுபோக்கு அம்சங்களுக்கு பஞ்சம் வைக்காத, வெற்றியை சொல்லி அடிக்கும் கில்லியான இயக்குநர் S. எழில் இயக்கத்தில் இரு தலைமுறைகளை சேர்ந்த மிக முக்கிய நடிகர்களான பார்த்திபன் ராதாகிருஷ்ணன், கௌதம் கார்த்திக் இணைந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கவுள்ளார்கள். தற்போதைய நிலையில் “புரடக்‌ஷன் நம்பர் 2” என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் D. விஜய்குமரன் தயாரிக்கிறார். ராதாகிருஷ்ணன் பார்த்திபன், கௌதம் கார்த்திக், சாய் ப்ரியா தேவா, இயக்குநர் S.எழில், வசனகர்த்தா C.முருகேஷ் பாபு மற்றும் ஒளிப்பதிவாளர் குருதேவ் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் நவம்பர் 19, 2020 அன்று இப்படம் துவங்கப்பட்டது. படம் குறித்து காவ்யா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் D. விஜய்குமரன் கூறியதாவது.... படத்தின் நட்சத்திர நடிகர்கள் குழுவே படம் ஒரு மிக அழுத்தமான காமெடி கலக்கலாக, தியேட்டரில் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக இருக்கும் என்பதை அடித்து கூறுவதாக இருக்கிறது. இயக்குநர் S.எழில் பொழுதுபோக்குடன் கூடிய கமர்ஷியல் சினிமாக்களை ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில

போன் வீடியோவால் வரும் விபரீதங்களை விறுவிறுப்பாகச் சொல்லும் 'அல்டி'

பரபரப்பைக் கிளப்பும் வீடியோ உள்ள ஐபோன் ஒன்று குட்டி, குணா மற்றும் ஜானி ஆகியோருக்குக் கிடைக்கிறது. அந்த. வீடியோவால் நடக்கும் களேபரங்களை பரபர, கமர்ஷியல் படமாக  சொல்லும் திரைப்படம்தான் 'அல்டி'. நடிகர் மயில்சாமியின் புதல்வர் அன்பு மயில்சாமி நாயகனாக நடிக்க, கதாநாயகி வேடத்தில் மனிஷா ஜித் அறிமுகமாகிறார். . சென்றாயன் பிராதன பாத்திரம் ஒன்றில் நடிக்க யாசி, ராபர்ட், மாரிமுத்து, ஏ.வெங்கடேஷ் பசங்க சிவகுமார் ,சிந்து குமாரி, மிப்பு சாமி, சேதுபதி ஜெயசந்திரன் நெல்லை சிவா டி.எஸ்.ஆர்.ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். நடனக் காட்சிகளை ராபர்ட் அமைக்க படத்தொகுப்பை வில்ஸி கவனிக்கிறார். கலை இயக்குநராக சிவகுமார் பணியாற்ற, சண்டைக் காட்சிகளை அமைக்கிறார் ஜாக்கி ஜான்சன். பத்திரிகை தொடர்பு பணிகளை ப்ரியாவும், டிசைனர் பொறுப்பை ரஜினி கிருஷ்ணனும் ஏற்றிருக்கின்றனர்.  தயாரிப்பு நிர்வாகத்தை ஜெகன் கவனிக்க ஷேக் முகமது மற்றும் ரஹ்மதுல்லா இருவரும் இணைந்து தயாரிக்க “அல்டி” படத்தை எழுதி இயக்குகிறார் எம்.ஜே.உசேன். பரபரப்பைக்

தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆசிஷ் வித்யார்த்தி

விக்ரம் நடித்த 'தில்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி அந்தப்படத்தில், தனது வித்தியாசமான வில்லத்தனத்தால் விக்ரமுக்கு இணையாக ரசிகர்களிடம் பேசப்பட்டவர் நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி. அதை தொடர்ந்து பிசியான வில்லன் நடிகராக மாறிய அவர் ரஜினி, விஜய், அஜீத் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் தவறாமல் இடம் பிடித்தார். ரஜினிகாந்தின் சொந்தப்படமான பாபாவிலேயே வில்லனாக நடிக்கும் வாய்ப்பு இவரை தேடிச்சென்றது. கடந்த 2015ல் தனுஷ் நடித்த 'அநேகன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஆசிஷ் வித்யார்த்தி, அதையடுத்து கடந்த ஐந்த வருடங்களாக தமிழில் எந்த படத்திலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். வாய்ப்புகள் தேடிவந்தாலும் கூட, ஒரே மாதிரியான கதாபாத்திரத்தில் நடிப்பதில் தனக்கு உடன்பாடு இல்லையென்பதால் பல படங்களை தவிர்த்துவிட்டார். இந்தநிலையில் ஐந்து வருடங்கள் கழித்து தற்போது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘எக்கோ’ என்கிற படத்தில் நடிக்கிறார் ஆசிஷ் வித்யார்த்தி. சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக உருவாகும் இந்த 'எக்கோ’வில் இதுவரை நாம் காணாத ஆசிஷ் வித்யார்த்தியை பார்க்கலாம் என

பத்து வருடங்களாக காதலித்தபெண்ணை கரம்பிடிக்கும் சினிமா படத்தொகுப்பாளர்

தமிழ்சினிமாவின் தற்போதைய முன்னணி படத்தொகுப்பாளராக பணியாற்றுபவர் எடிட்டர் செல்வா RK. பரியேறும் பெருமாள் , இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, மூக்குத்தி அம்மன், பிஸ்கோத், கர்ணன், சல்பேட்டா உள்பட பல முன்னணி படங்களுக்கு எடிட்டராக பணியாற்றுகிறார். இவரும் சென்னையை சார்ந்த அனிதா என்பவரும்  பத்து வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்துள்ளனர். சினிமாவில் எதையாவாது சாதித்துவிட்டுத்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று உறுதியாக பத்துவருடங்களாக காத்திருந்திருக்கிறார்கள். பல்வேறு முயற்சிகளுக்குப்பிறகு இன்று தமிழ் சினிமாவில் முன்னணி படத்தொகுப்பாளராக செல்வா ஒரு இடத்தை எட்டிய பிறகு திருமணம் செய்வது குறித்து இரு வீட்டாரிடமும் சம்மதம் பெற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் பல்வேறு சினிமா பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். லட்சியத்திற்காக பத்து வருடங்களுக்கு மேலாக காத்திருந்து கரம்பிடித்துக்கொண்ட தம்பதிகளை வாழ்த்தினார்கள்.

நடிகர் ஜெய் நடிப்பில் “பிரேக்கிங் நியூஸ்” விரைவில் திரையில்

நடிகர் ஜெய் நடிப்பில் வெளிவரவிருக்கும் அடுத்தடுத்த படங்கள், ஒவ்வொன்றும் பெரும் நம்பிக்கையளிப்பதாக, வணிக வட்டாரத்தில் அவருக்கு ஒரு நிலையான இடத்தை பெற்றுத்தருவதாக உள்ளது. அந்த வகையில் திருகடல் உதயம் தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் “பிரேக்கிங் நியூஸ்” திரைப்படம் ஜெய் நடிப்பில் மிக முக்கியமானதொரு திருப்புமுனை படமாக வளர்ந்து வருகிறது. விஷுவல் புரொமோக்கள் மற்றும் பாடல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி ரசிகர்களை கவர உள்ள  நிலையில், விரைவில் உலகளவில் திரையரங்கில் இப்படம் வெளியாகவுள்ளது.  இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் படம் குறித்து கூறியதாவது...  படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டோம். போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்தேற,   தற்போது அதுவும் முடியும் தருவாயில் உள்ளது. நடிகர் ஜெய்யுடன் இப்படத்தில் பணிபுரிந்த அனுபவம் மிக அற்புதமாக இருந்தது. அவரது ஒத்துழைப்பும் படத்தின் மீதான அவரது ஈடுபாடும் அபாரமானதாக இருந்தது. படத்தின் துவக்க நாள் முதலாக, படத்தின் மீது பெரும் ஈடுபாட்டுடன், மிக கடினமான கதாப்பாத்திரத்தை முழுதாக உள்வாங்கி,  தனது மிகச்சிறந்த நடிப

ரசிகர்களை வசீகரப்படுத்திய பப்ஜியின் "கள்ளக்காதல் (லா)"

"தாதா 87" வெற்றிப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் 'விஜய் ஸ்ரீ ஜி', ஜிமீடியா தயாரிப்பில் "பொல்லாத உலகில் பயங்கர கேம்" (பப்ஜி) என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் மூலம் நடிகர் விக்ரமின் தங்கை அனிதாவின் மகன் அர்ஜூமன் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். 'பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அனித்ராநாயர், ஆராத்யா, சாண்ட்ரியா, நடோடிகள் சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, பிக்பாஸ் ஜூலி, ஆகியோரும் நடிக்கின்றனர். தாதா87 படத்திற்கு பிறகு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கும் இப்படத்தில் தமிழில் முதன் முதலாக ஐரோப்பாவின் லாடுவியா நாட்டைச் சார்ந்த 'ஃபைவ் ஓ' இரண்டு பாடல்களை பாடி அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இப்படத்தின் கள்ள காதலா எந்தன் காதலா அந்தி விலாகுதா உந்தன் காதலும் எந்தன் ஊடலும் மனம் விரும்புதா என்ற பாடலை இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி பிரபல இசையமைப்பாளர் தமன் இணையதளத்தில் வெளியிட்டடார். தற்சமயம் ரசிகர்களிடம் இப்பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 

யோகிபாபுவை தொடர்ந்து காமெடி ஏரியாவில் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுக்கும் டிஎஸ்கே

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கான பற்றாக்குறை முன்பைவிட தற்போது அதிகமாகவே இருக்கிறது. குறிப்பாக சந்தானம் கதாநாயகனாக நடிக்க தொடங்கியபின், சூரியின் படங்களும் குறைந்துள்ள நிலையில் இந்த வெற்றிடத்தை ஓரளவு தன்னால் முடிந்தவரை நிரப்பி வருகிறார் யோகிபாபு. இருந்தாலும் பற்றாக்குறை தீர்ந்த பாடில்லை.. இந்தநிலையில் தான் காமெடி ஏரியாவில் நம்பிக்கை தரும் நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார் திருச்சி சரவணக்குமார் என்கிற டிஎஸ்கே.. கொரோனா காலகட்டத்திற்கு முன்பே சில படங்களில் நடித்து முடித்துவிட்ட இவர், தற்போது இன்னும் அதிக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.. சின்னத்திரையில் வளர்ந்து வந்த நேரத்தில், தமன்னா நடித்த காமெடி ஹாரர் படமான பெட்ரோமாக்ஸ் படம் மூலம் லைம்லைட்டுக்குள் வந்தவர்தான் இந்த டிஎஸ்கே. “பெட்ரோமாக்ஸ் படத்திற்கு முன்பே கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்திருந்தாலும் பெட்ரோமாக்ஸ் படம் தான் எனக்கு நல்ல வரவேற்பு தந்தது.. அதிலும் அந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் எல்லாம், தமன்னா என்னுடைய பெயரை தவறாமல் குறிப்பிட்டு பேசியது ரசிகர்கள் மத்தியில் என்னை இன்னும் கொஞ்சம் பிரபலமாக்கியது” என ஓபனாகவே ப

'அரண்மனை 3 'படத்தில் 2 கோடி செலவில் பிரமாண்ட செட்டில் நடைபெற்ற சண்டைக்காட்சி

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த 'அரண்மனை' சீரீஸ் படங்கள், முதல் இரண்டு பாகங்கள்  பெரிய வெற்றி பெற்றன.அதன் தொடர்ச்சியாக இப்போது 'அரண்மனை3' உருவாகி வருகிறது. இப்படத்திற்காக சென்னை EVP ஃபிலிம் சிட்டியில் 2 கோடி செலவில் கலை இயக்குநர் குருராஜ்-ன் கைவண்ணத்தில்  பிரம்மாண்ட அரண்மனை செட் போடப்பட்டு அதில் சண்டைக் காட்சி படமாகியுள்ளது. முதன்முதலில் சுந்தர்C யுடன் ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ள இப்படத்தின்  உச்சக்கட்ட சண்டைக் காட்சி பிரமாண்டமாக பதினொரு நாட்கள் படமாக்கப்பட்டது.  இதுவரை சுந்தர்சியின் படங்களில் “ஆக்ஷன்” action படத்தில் அதிக ஸ்டண்ட் காட்சிகள் இருந்தது. அதன் பிறகு இந்தப் படத்தில் தான்  மிக பிரமாண்டமாக ஸ்டண்ட் அமைத்துள்ளார்கள். இந்த பேய்ப்படத்துக்கு 2 கோடி செலவில் பிரமாண்டமான அரண்மனை செட் அமைக்கப்பட்டு  அதில் 11 நாட்கள் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டுப்   படமாகியுள்ளது திரையுலகில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இக்காட்சியில், ஆர்யா, ராக்ஷி கன்னா, சுந்தர்C, சம்பத், மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்தனர் . தொடர்ந்து படபிடிப்பு நடைபெற்று வருகிறது. குஜராத் ராஜ்கோட்,

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் ஜோடியாக அஞ்சலி. இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் படம் இன்று பூஜை

'கோலி சோடா' மூலம் தமிழ் சினிமாவில் டைரக்டராக, தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பெற்றவர் ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன். அந்த அடையாளத்தோடு கன்னட திரையுலகில் நுழைகிறார். கன்னடத்தில் வெற்றி இணையான சிவராஜ் குமார் மற்றும் டாலி தனஞ்செயாவை இயக்குகிறார். இப்படத்தில் சிவராஜ் குமார்  ஜோடியாக  அஞ்சலி நடிக்கிறார். கன்னடத்தில் இப்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் நடிகர் டாலி தனஞ்செயா இன்னொரு வேடத்தில் நடிக்கிறார். மேலும் ப்ரதீவ், உமாஸ்ரீ மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தைத் தமிழில் 'கோலிசோடா', 'கடுகு' போன்ற படங்களைத்  தயாரித்த ரஃப்நோட் நிறுவனம் ,  கன்னடத்தில் கிருஷ்ண சர்த்தக்-ன் கிருஷ்ணா கிரியேஷன்ஸ் பட நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. கதை, திரைக்கதை, எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார் எஸ்.டி.விஜய்மில்டன். ஜெ.அனூப் சீலின் இசையமைக்கிறார். பிரகாஷா புட்டசாமி கலை இயக்குநராக பணிபுரிகிறார். சுப்ரீம் சுந்தர் சண்டை பயிற்சி செய்கிறார். Pro ஜான்சன். இப்படத்தின் பூஜை பெங்களூரில் இன்று நடந்தது. வரும் 23ஆம் தேதி முதல்  படப்பிடிப்பு பெங்களூரில் சான்ஸ்க்ரிட் ( Sanskrit collage ) கல்லூரியில்

உங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொண்டு முதுகுத் தண்டை சில்லிட வைக்கும் மானே நம்பர் 13 கன்னட திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் காண தயாராகுங்கள்

மானே நம்பர் 13 திரைப்படம் வரும் நவம்பர் 26 அன்று பிரத்யேகமான அமேசான் ப்ரைம் வீடியோ தளத்தில் முதல் நாள் முதல் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.  விவி கதிரேசன் இயக்கத்தில், கிருஷ்ண சைதன்யாவின் ஸ்ரீ ஸ்வர்ணலதா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சஞ்சீவ், சேத்தன் கந்தர்வா, ஐஸ்வர்யா கவுடா, ப்ரவீன் ப்ரேம் மற்றும் வர்ஷா பொள்ளம்மா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மும்பை, நவம்பர் 20, 2020: மானே நம்பர் 13 திகிலுக்கு தயாராகுங்கள். திகில் நிறைந்த வீட்டில் ஒரு ரோலர் - கோஸ்டர் பயணத்துக்கு உங்களை வரவேற்கிறோம். டேனிஷ் சேட் நடித்த கன்னட நகைச்சுவை திரைப்படமான ஃப்ரெஞ்ச் பிரியாணி மற்றும் அரவிந்த் ஐயர், ஆரோஹி நாராயண் நடித்த குடும்ப திரைப்படமான பீமசேனா நளமஹாராஜா ஆகிய திரைப்படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மர்மம் நிறைந்த கன்னட திகில் திரைப்படமான மானே நம்பர் 13-க்கு பார்வையாளர்களை கவர்ந்திழுக்க அமேசாம் ப்ரைம் வீடியோ தயாராகிவிட்டது. இந்த பயமுறுத்தும் திரைப்படத்தின் ஒரு நிமிட டீஸர் வீடியோவை தயாரிப்பாளர்கள் இன்று வெளியிட்டுள்ளனர். நம் அனைவரையும் சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் திகில், மர்மம் மற்றும் ப