நடிகர் வெற்றி நடிப்பில் இயக்குநர் ஷியாம் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகிவரும் "மெமரிஸ்" திரைப்படம் ஒரு சைக்கோ திரில்லர் படமாகும். ஒரு புதுமையான களத்தில், மனதை அதிரசெய்யும் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. கொரோனாவிற்கு முன்னதாகவே துவங்கப்பட்ட படப்பிடிப்பு ஏறக்குறைய முடிந்த நிலையில், எஞ்சிய பகுதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக கடைப்பிடிக்கப்பட்டு படமாக்கப்பட்டது. தற்போது முழுதாக படப்பிடிப்பு முடிந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் இன்று துவங்கப்பட்டுள்ளது. நடிகர் வெற்றி டப்பிங் பணிகளில் கலந்துகொண்டு தனது பகுதிகளுக்கான டப்பிங்கை செய்து வருகிறார். இறுதி கட்ட பணிகள் துவங்கப்பட்ட நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. விரைவில் இப்படத்தின் டீஸர் மற்றும் டிரெய்லர் வெளியாகுமென்று படக்குழு தெரிவித்துள்ளது.
ஷியாம் ப்ரவீன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் வெற்றி நாயகன் பாத்திரத்தில் நடிக்க, பார்வதி அருண் நாயகியாக நடிக்கிறார். ரமேஷ் திலக் ஒரு முக்கிய பாத்திரத்தில் இணைந்து நடித்திருக்கிறார். பிரசான் இப்படத்திற்கு இசையமைக்க, ஷான் லோகேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். அர்மோ மற்றும் கிரன் நுபிதால் ஒளிப்பதிவு செய்துள்ளனர். படத்தை பிரமாண்ட முறையில் திரையில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக