முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

செப்டம்பர், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸான “மை3” வெப் சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது

  இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘மை3’ சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒரிஜினல் சீரிஸில் நடிகை ஹன்சிகா மோத்வானி,  நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் “மை3” வெப் சீரிஸ் இயக்குநர் ராஜேஷ் M இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹாட்ஸ்டார் இந்த ஒரிஜினல் வெப்சீரிஸின் டிரெய்லரை கடந்த செவ்வாயன்று வெளியிட்டது. டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் சீரிஸுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கலவையாக அமைந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.   முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவிரமாக பாதிப்புகுள்ளா

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில், சி.எஸ். அமுதன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'ரத்தம்' திரைப்படம் அக்டோபர் 6 அன்று வெளியாகிறது

தனது தனித்துவமான கதைத் தேர்வினால், பாக்ஸ் ஆஃபிசில் வசூல் நாயகனாக மாறியுள்ள நடிகர் விஜய் ஆண்டனியின் அடுத்தத் திரைப்படமாக 'ரத்தம்' வெளியாக உள்ளது. இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் சி.எஸ். அமுதன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு உள்ளாகி இருக்கும் இந்தத் திரைப்படம் செப்டம்பர் 28 ஆம் தேதியில் இருந்து வெளியீட்டை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு அறிவித்துள்ளது. 'தமிழ் படம்' படத்தின் பிரம்மாண்ட வெற்றி மூலம் ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்த இயக்குநர் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் வித்தியாசமான பொலிடிகல் திரில்லர் திரைப்படமாக 'ரத்தம்' உருவாகியுள்ளது. விஜய் ஆண்டனியுடன் இணைந்து மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த 'ரத்தம்' திரைப்படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்ய, TS.சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். கண்ணன் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்குநராகப் பணியாற்றி இருக்க, திலிப் சுப்ராயன் ஸ்டன்ட் இயக்குநராக பணியாற்றியுள்ளார். கடந்த சில தினங்கள