முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Get set for the battle of the best in Dance Vs. Dance 2 semi-finale round

~ Renowned choreographer Sandy Master adds a magical touch to the show as this weekend’s special guest ~ Chennai 31st December 2021:  After months of diligent perseverance, the contestants of Dance vs Dance Season 2, presented by Vim and powered by Nippon Paint, are set for one last battle to enter the grand finale this weekend. Judged by Actor  Kushboo  and renowned Choreographer  Brinda , the semifinal episodes will bring to your television screens an intense round of dance battles. Adding an extra dash of entertainment, popular choreographer Sandy Master will also participate in the show as a special guest. He will be giving a glimpse of his signatures step on the song “ Semma Bodha ” alongside the two judges.   Hosted by popular anchor  Bhavana Balakrishnan , the weekend's episodes will witness three high octane battles between six teams for a shot at the coveted title and trophy. With a line-up of spell-binding semi-finalists dancers, Royson -  Mercina battling ver

சயின்ஸ் ஃபிக்‌ஷன் கலந்த அம்மா - மகன் பாசம்: 'கணம்' டீஸர் வெளியீடு

வித்தியாசமான கதைகளங்கள் எப்போதுமே ரசிகர்களை வசீகரிக்கத் தவறியதில்லை. அப்படி வித்தியாசமான கதைகளங்களை எப்போதுமே ரசிகர்களுக்கு விருந்தாக்கி வரும் நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். அந்நிறுவனத்தின் அடுத்த வெளியீடாக திரைக்கு வரவுள்ளது 'கணம்'. இந்தப் படத்தின் டீஸரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளத்தில் வெகுவாக கவனம் ஈர்த்துள்ளது. பல்வேறு திரையுலகினரும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இயக்குநராக அறிமுகமாகியுள்ள ஸ்ரீகார்த்திக் இப் படத்தை குறித்து சொன்னதாவது. "அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் ஃபிக்‌ஷன் படம் தான் 'கணம்'. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் இயக்கியுள்ளேன். சின்ன பட்ஜெட் படமாக தொடங்கப்பட்டு, தற்போது சயின்ஸ் ஃபிக்‌ஷன் மற்றும் இரண்டு மொழிகளின் படபிடிப்பு செலவு உள்ளிட்டவைகளால் பெரும் பொருட்செலவு கொண்ட படமாக மாறியிருக்கிறது. இதில் அம்மா வேடத்தில் தென்னிந்திய சினிமாவில் கனவுக்கன்னியாக விளங்கிய அமலா மேடம் நடித்துள்ளார். இந்தக் கதையை அவரை மனதில் வைத்தே எழுதினேன். 25 வருடங்களாக நடிக்காமல் இருந்த

இசைமேதை' எம். எஸ். சுப்புலட்சுமியின் வாரிசுகளின் குரலில் நவீன தொழில்நுட்பத்தில் ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்

கர்நாடக இசையை ஆன்மாவோடு கலந்து கொடுத்த மாபெரும் இசைக் கலைஞர், மறைந்த பாரத ரத்னா எம். எஸ். சுப்புலட்சுமி. பக்தி பாடல்களை பாடி நம் கண் முன்னே இறைவனை கொண்டு வந்து நிறுத்திய தெய்வீக குரலுக்கு சொந்தக்காரர். இவர், திருமலை கோவிந்தனுக்கு வெங்கடேச சுப்ரபாதத்தை பாடிய இசைத்தட்டு 1963 ஆம் ஆண்டு வெளியானது. திருமாலின் புகழைப் பாடும் வெங்கடேச சுப்ரபாதம்; திருப்பதி தேவஸ்தானத்தில் ஒலிபரப்பு செய்தது மட்டுமின்றி : 1975 ஆம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்வானாக எம்.எஸ். சுப்புலட்சுமி நியமிக்கப்பட்டார். இத்தகைய சிறப்புமிக்க வெங்கடேச சுப்ரபாதத்தை இன்றைய தலைமுறையினர் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் டாப் தமிழ் நியூஸ் யூட்யூப் சேனல் புதிய அத்தியாயத்தை தொட்டுள்ளது. ஏற்கனவே கந்த சஷ்டி கவசத்தை சூப்பர் சிங்கர் புகழ் பிரியங்கா குரலில் வெளியிட்டு 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த  டாப் தமிழ் நியூஸ் நிர்வாகம், தற்போது ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதத்தை எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்களின்  கொள்ளு பேத்திகள் எஸ்.ஐஸ்வர்யா மற்றும் எஸ். சௌந்தர்யா ஆகியோர் பாட, மாண்டலின் கலைஞர்

துபாய் அரசு நடிகை அமலா பாலுக்கு கோல்டன் விசா வழங்கியது

  2021 ஆம் ஆண்டு நடிகை அமலா பாலுக்கு மிகச்சிறப்பான ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் தனது நடிப்பு திறமையை ஆந்தாலஜி அடிப்படையிலான திரைப்படமான 'குட்டி ஸ்டோரி' போன்ற புதிய களங்களில் நடித்து, ஆராய முடிந்தது மற்றும் Netflix original ஆக வெளியான 'பிட்ட கதலு' படத்தில் அவரது நடிப்பு அபாரமான பாராட்டுகளைப் பெற்றது.  தற்போது ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் பல  சுவாரஸ்யமான திரைப்படங்களில் பணிபுரிந்து வருகிறார், அவற்றில் ஒன்றான  'கடாவர்' என்ற தலைப்புடன் வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில்,  மனம் மயக்கும் அவரது தோற்றம்  ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டது. இந்த புத்தாண்டு  அவருக்கு ஏற்கனவே நிறைய நல்ல தருணங்களை தந்துள்ளது, மேலும் ஒரு பெரும் புத்தாண்டு பரிசாக துபாய் அரசாங்கம் அவருக்கு கோல்டன் விசா வழங்கியுள்ளது இந்த நற்செய்தியைப் பகிர்ந்து கொண்ட அமலா பால், “இப்படிப்பட்ட கௌரவத்தைப் பெற்றதற்காக நான் மிகவும் மகிழ்ச்சியாகவும், பாக்கியமாகவும் உணர்கிறேன். நான் இப்போது துபாய் மக்களில் ஒருவராக உணர்கிறேன். இந்த புண்ணிய பூமி உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடங்களில் ஒன்றாகும், நான் அடிக்கடி அங்க

தடைகளைக் கடந்து 'நீ சுடத்தான் வந்தியா ' படம் 2022 ஜனவரியில் உலகமெங்கும் திரைக்கு வருகிறது

டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் 'நீ சுடத்தான் வந்தியா'.இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது. 2022 ஜனவரியில் வருகிறோம் இப்படம் டிசம்பரில் 31 தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த டிசம்பரில் ஏராளமான படங்கள் வருவதால் இதன் வெளியீட்டுத் தேதி தள்ளிப்போயிருக்கிறது .பொதுவாக விழாக் காலங்களில் பெரிய படங்களும் நட்சத்திர நடிகர்கள் நடித்த படங்களும் வெளியாகும் .அப்போது சின்ன படங்களை வெளியிட்டால் அந்தப் பரபரப்பு ஓசையில் இவை காணாமல் போய்விடும் .இந்த நிலையில் டிசம்பரில் வெளியாக வேண்டியது ஜனவரிக்குத் தள்ளிப் போயிருக்கிறது. இதுகுறித்து தயாரிப்பாளர் படத்தின் கதாநாயகன் பேசும்போது, "நாங்கள் 150 ஸ்கிரீன் எதிர்பார்த்ததற்கு, மிகவும் குறைவாகத்தான் கிடைத்தது. எனவே கமர்சியல் பலமுள்ள வணிக மயமாக்கப்பட்ட இந்த படத்தை 2022 ஜனவரியில் வெளியிடத் தீர்மானித்து விட்டோம் நிறைய எண்ணிக்கையிலான திரையில் வெளியாகும்" என்கிறார். " சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார

தாளுக்கு தாழ்ப் போட்ட ‘மாயோன்’ படக்குழுவினர்

தமிழ் திரையிசை ஆர்வலர்களிடத்தில் ‘மாயோன்’ படத்தின் சிங்கிள் ட்ராக்கின் லிரிக்கல் வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டபுள் மீனிங் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி தயாரித்திருக்கும் திரைப்படம் 'மாயோன்'. இந்த திரைப்படத்தில் சிபி சத்யராஜ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குநர் என் கிஷோர் இயக்கத்தில் தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். இசைஞானி இளையராஜாவின் இசையில், கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி & காயத்திரி குரலில் வெளியான 'மாயோன்' பட பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. 'மாயோனே மணிவண்ணா..' என்ற இந்த பாடலின் லிரிகல் வீடியோவும் பாடலுடன் வெளியானது. தற்போது இந்த லிரிகல் வீடியோ இசை ஆர்வலர்களிடத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதொடர்பாக இசை விமர்சகர்கள் பேசுகையில், ''மாயோனே மணிவண்ணா..' என தொடங்கும் பாடலில் 'தஞ்சம் என்று நம்பி உந்தன் தாழ் பணிந்த

எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சாந்தனு, மஹிமா நடிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குண்டுமல்லி' வீடியோ பாடலை சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது

எம்.கே.ஆர்.பி புரொடக்‌ஷன்ஸ் பேனரில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரிப்பில் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில் சாந்தனு பாக்யராஜ் மற்றும் மஹிமா நம்பியார் நடித்துள்ள 'குண்டுமல்லி' என்கிற உற்சாகமான காதல் பாடலை இன்று தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் சரிகமா ஒரிஜினல்ஸ் வெளியிட்டது இந்த வீடியோ பாடலின் டீசர் டிசம்பர் 25-ஆம் தேதி இரண்டு மொழிகளிலும் வெளியானது. திருமண நிச்சயதார்த்தத்தின் பின்னணியில் அமைக்கப்பட்ட காதல் மற்றும் குடும்ப உணர்வுகள் நிறைந்த பாடலாக இது உருவாகியுள்ளது. பாடல் வரிகள் வசீகரமாகவும், காட்சிகள் வண்ணமயமாகவும், இசை இனிமையாகவும் உள்ளன. சாந்தனு தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். மஹிமா நம்பியார் தனது முகபாவங்களால் மனங்களை கொள்ளை கொள்கிறார். இந்தப் பாடலுக்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்து, நித்யஸ்ரீயுடன் இணைந்து தமிழ் பதிப்பை பாடியுள்ளார். திமுகவின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார கீதமான 'ஸ்டாலின் தான் வாராரு' பாடலுக்கு இசையமைத்தது ஜெரார்ட் ஃபெலிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. கே எஸ் ஹரிஷங்கர் மற்றும் நித்யஸ்ரீ குண்டுமல்லி பாடலின

ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் 'கலியுகம்' அப்டேட்

பிரைம் சினிமாஸ் நிறுவனத்தின் உரிமையாளரான கே. எஸ். ராமகிருஷ்ணா, ஆர்.கே. இன்டர்நேஷனல் இன்கார்பரேட் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வரும் திரைப்படம் 'கலியுகம்'. இதனை இயக்குநர் ப்ரமோத் சுந்தர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் 'விக்ரம் வேதா', 'நேர்கொண்டபார்வை' ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கிறார். இவருடன் நடிகர் கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு, பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது. போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் தயாராகி வரும் 'கலியுகம்', திறமையான இளைய தலைமுறை கலைஞர்களால் உருவாக்கப்பட்டு வருவதாலும், ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகளுடன் தயாராகி வருவதாலும், தயாரிப்பில் இருக்கும் போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Alpha Clean products Launched by Puducherry Honourable Speaker R.Selvam, TOSH Associates Santosh Umapathy & Alpha International President Scott Sproull at Puducherry

ALPHACLEAN™ INTERNATIONAL LAUNCHES ANTIMICROBIAL PRODUCTS IN INDIA TO FIGHT HARMFUL BACTERIA AND VIRUSES Union of Puducherry Adopts Product Line Proven To Protect Against SARs-CoV-2 And Other Bacterial and Viral Threats.  AlphaClean International, with its partners Tosh Associates and  Thirumalaa   Enterprises are excited to announce the selection of their antimicrobial products by the Union of Puducherry to assist in the fight against harmful bacteria and viruses, including SARs-CoV-2. Patented, registered and extensively tested,  ALPHACLEAN™   antimicrobial technology kills and prevents the growth and spread of harmful bacteria, fungi and viruses (including SARS-CoV-2) between cleanings for up to 90 days. ALPHACLEAN RTU™ is a water-based antimicrobial surface protectant that is ready to use, right out of the bottle, with no mixing or dilution needed for porous and non-porous surfaces, and on food and non-food contact surfaces. Tested and proven in the United States, Greec

ஏ பிராண்ட் இந்தியா மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் "மகாவீரன்"

காதல் கதைகளுக்கென்று எப்போதும் ஒரு தனி கிரேஷ் இருக்கும். அந்த வரிசையில் வித்யாசப்பட்ட காதல் கதைகள் கொண்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. "மகாவீரன்" தனிப்பட்ட காதல் கதையை கொண்ட படம். காதலர்கள் மத்தியில் நடக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதத்தையும், அவர்கள் நடந்து கொள்ளும் விதத்தையும் சுட்டிக்காட்டி கதைக்களம் பின்னப்பட்டுள்ளது. இந்த படத்தை பார்க்கும் காதலர்கள் காதலருடனும், காதலியுடனும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை பாடமாக காட்டியிருக்கிறார் இயக்குனர் ஹரிச்சந்திரன்.  நாகவர்மாபைராஜீ, திவ்யாசுரேஷ் காதல் நடித்துள்ளனர்.  ஒளிப்பதிவு: வேணுமுரளிதரன் இசை: சுரேஷ்பிரசாத் தயாரிப்பு: நாகவர்மாபைராஜீ  மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட "மகாவீரன்" திரைப்படம் தமிழ், தெலுங்கு   மொழிகளில் வெளியாகிறது.

சென்னையில் மார்கழியில் மக்களிசையை பறையிசைத்து துவங்கிவைத்த கனிமொழி எம் ,பி, மற்றும் ஜீவி பிரகாஷ்.

கலை மக்களுக்கானது, அக்கலையை ஜனநாயகப்படுத்தும் முழு நோக்கத்தோடு நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் கலை நிகழ்ச்சியை  சென்ற ஆண்டு நடத்தி வந்தது. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு டிசம்பர் 18 -ஆம் தேதியன்று மதுரையிலும்,19 ஆம் தேதி கோவையிலும் மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சியை நீலம் பண்பாட்டு மையம் தொடங்கியது. மதுரை மற்றும் கோவை மக்களின் பெறும் வரவேற்பை பெற்றது. அதன் மாபெரும் தொடர்ச்சியாக சென்னையில் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடக்கவிருக்கிறது. தற்போது  சென்னையில் முதல் நாள் நிகழ்ச்சியாக வாணி மஹாலில் தொடங்கப்பட்டது. நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக இயக்குனர் பா.ரஞ்சித் ,இசையமைப்பாளர் ஜி.வி .பிரகாஷ்,நாடாளுமன்ற உறுப்பினர் மு.கனிமொழி மற்றும்  எழுத்தாளர் ஆதவன் தீட்சனியா ஆகியோர் பறை அடித்து விழாவை மகிழ்ச்சியாக தொடங்கி வைத்தனர்.பின் நிகழ்ச்சியின் நிரலாக தொகுப்பாளர் தமிழ்பிரபா முன்னிலையில் சேலம் ஆதிமேளம் பறையிசை குழுவினர் ,தஞ்சை கரிசல் காட்டு மண்ணின் மைந்தன் கருங்குயில் கணேசன்  மற்றும் குழு,ஆகியோர்களும் நிகழ்ச்சியின் நிறைவாக மக்களிசை பாடகர் செந்த

ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த "அயர்ன் மாஸ்க்" ஆங்கிலப் படம் தமிழில் இம்மாதம் வெளியாகிறது

எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜீத் இணைந்து நடித்தால் எப்படி பரபரப்பாக இருக்குமோ, அப்படி பரபரப்பாக இருக்கும் ஜாக்கி சான் - அர்னால்ட் நடித்த "அயர்ன் மாஸ்க்" படம். இருவரும் வித்யாசமான தோற்றத்தில் நடிக்கிறார்கள்! சைனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த இப்படம் தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக் குவிக்க வருகிறது! வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் அரங்கத்தை அதிர வைக்கப் போகிறது. 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவான பிரமாண்டமான படம்.! டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சைனா செல்கிறார். ஜாக்கி சானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார். பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் படுபயங்கரமாக மோதுகிறார்கள். இறுதியில் டிராகனை அழித்தார்களா, மகாராணியை காப்பாற்றினார்களா என்பதே கதை! இரண்டு மணி நேர படமாக, இருவரும் ரசிகர்களை மகிழ்விக்க தமிழ் பேசி வருகிறார்கள்! ஜூராசிக் பார்க், கிங்காங் போன்ற படங்களை தமிழில் வெளியிடப்பட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் "அயர்ன் மாஸ்க்" படத்தை தமிழில் வெளியிடுகிறது!

இரண்டாவது முறை சிறந்த நடிகர் விருதுபெற்ற தேன் பட நாயகன் தருண் குமார்

  இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த கடினமான சூழலில் தான்  கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டுக்களை பெற்றது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் கிட்டத்தட்ட 5௦ விருதுகளை அள்ளி வந்துள்ளது. இந்தப்படத்தில் வேலு என்கிற கதாபாத்திரமாகவே மாறியிருந்த படத்தின் நாயகன் தருண்குமார், தமிழ் சினிமாவுக்கு இன்னொரு நம்பிக்கையான நட்சத்திரம் கிடைத்துவிட்டார் என நினைக்க வைத்தார். அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன் 11வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் இந்தப்படம் திரையிடப்பட்டதில், தருண்குமார் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.  இந்தநிலையில் தேன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பீகாரில் நடைபெற்ற தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவில் மீண்டும் ஒரு முறை சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார் தருண் குமார். தேன் படத்திற்கு மட்டுமல்ல, நடிகர் தருண் குமாருக்கும் மகுடத்தில் சூடப்பட்ட இன்னொரு மயிலிறகாக இந்த விருது அமைந்துள்ளது.. இதுபற்றி நம்மிடம் தருண் குமார் பேசும

தடைகளைக் கடந்து 'நீ சுடத்தான் வந்தியா ' படம் இம்மாதம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது

டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் 'நீ சுடத்தான் வந்தியா'.இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது.இப்படத்தில் கவர்ச்சிநடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார். கவர்ச்சி நடிகையுடன் நடித்த அனுபவம் எப்படி என்பதைப் பற்றி புதுமுக நடிகர் அருண்குமார் பேசும்போது, " சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் 'நீ  சுடத்தான் வந்தியா' படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன். எனக்கு சினிமா மீது  காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன்.அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டு பிறகுதான் நடிக்க வந்தேன்.  இயக்குநர் எனக்குத் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார் .அப்போதுதான் மாஸ்டரிடம் பெற்ற நடிப்புப் பயிற்சி  எனக்கு பெரிய

ஆனந்தம் விளையாடும் வீடு, ரசிகர்களின் இதயத்திற்கு நெருக்கமான படைப்பாக இருக்கும் - இயக்குநர் நந்தா பெரியசாமி

இயக்குனர் நந்தா பெரியசாமியின் “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம் டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்  வெளியாகிறது. படம் மிக நன்றாக வந்திருப்பதிலும்,  படம் உறுதியாக ரசிகர்களை கவர்ந்து வெற்றிபெறும் என்பதில் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார் இயக்குநர் நந்தா பெரியசாமி. இயக்குநர் நந்தா பெரியசாமி கூறியதாவது.., “தயாரிப்பாளர் ரங்கநாதன் சார் ஆதரவு இல்லையென்றால் இந்தப் படம் வெறும் திரைக்கதை வடிவமாகவே பேப்பர்களில் இருந்திருக்கும். நான் முதன்முதலில் அவரை அணுகி, படம் பற்றிய ஒரு சிறிய கதை சுருக்கத்தை அவரிடம் சொன்னவுடனேயே, அவர் உடனடியாக அதைத் தயாரிக்க ஒப்புக்கொண்டார். கூட்டுக் குடும்பத்தின்    மதிப்பையும் உணர்வுகளையும் நன்கு அறிந்த ஒருவரால் மட்டுமே, இது சாத்தியமாகும். குடும்பக் கதைகள் உலகளாவிய அளவில்,  ரசிகர்களுக்கு எப்போதும் மிகப்பிடித்திருந்தாலும், பல தயாரிப்பாளர்கள் இம்மாதிரியான படங்களில் முதலீடு செய்வதே இல்லை. மேலும், பல தயாரிப்பாளர்கள் எப்போதுமே  பாதுகாப்பாகா வெற்றிபெறும் படங்களையே தயாரிக்க விரும்புகிறார்கள். இதன் மூலம் சர்ச்சைக்குரிய  மற்றும்  மிகவும் அழுத்தமான கருப்பொருள

“ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற தலைப்பை போலவே, படப்பிடிப்பில் என்னுள்ளும் சந்தோஷம் நிலவியதை என்னால் உணர முடிந்தது’’ - தயாரிப்பாளர் P ரங்கநாதன்

 கௌதம் கார்த்திக்-சேரன் இணைந்து நடித்துள்ள “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படம் டிசம்பர் 24, 2021 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கியுள்ளார். நடிகை ஷிவாத்மிகா ராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் 250 திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் நிலையில், ஆனந்தம் விளையாடும் வீடு திரைப்படத்தை தயாரித்த அனுபவம் குறித்து, ஸ்ரீவாரி படத்தின் தயாரிப்பாளர் P ரங்கநாதன் தனது மகிழ்ச்சியான அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.ஸ்ரீவாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P ரங்கநாதன் கூறியதாவது.., குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் பொழுதுபோக்கு சினிமாக்கள், எப்போதுமே திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பை பெறும். எந்தவொரு திரைப்படத் துறையிலும், ஏன் ஹாலிவுட்டில் கூட, குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும் படங்கள்  உலகளாவிய ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றே வருகிறது, என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு தீவிர திரைப்பட ரசிகனாக, குடும்ப உணர்வுகளை வெளிப்படுத்தும்,  பொழுதுபோக்கு சினிமாக்கள், திரையரங்குகளில் பார்வையாளர்களிடையே ஏற்படுத்தும் உணர்ச்சிகளின் ச

கிறிஸ்துமஸ் நாளில் நடிகர் விஷாலின் “வீரமே வாகை சூடும்” திரைப்பட டீசர்

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.பா. சரவணன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும்  திரைப்படம் “வீரமே வாகை சூடும் “.   அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசர் 25.12.2021 அன்று வெளியாகிறது. மிக சமீபத்தில் தான் அறிவிக்கபட்ட இப்படத்தின் படக்குழுவின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பில் படத்தின்  அனைத்து கட்ட பணிகளும் முடிந்து  தற்போது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. வரும் 2022 ஜனவரி 26 அன்று படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு. பாண்டியநாடு படத்திற்கு பிறகு, விஷால் நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகிவரும் படம் “வீரமே வாகை சூடும் “. அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும்   சாமானியன் ஒருவனின் கதையில்  விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ள இப்படம் ஹைதராபாத்தின் பல பகுதிகளிலும்,  சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது படத்தின் இறுதி பதிப்பு தயாரான நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டு பணிகளில், படக்குழு தீவிரம் காட்டி வருகிறது

இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா பேரரசு நடித்த 'பழைய பாட்டில்' குறும்படத்தை கே.பாக்யராஜ் வெளியிட்டார்

இயக்குனர் பேரரசு கதை, வசனம் எழுத, சாய் ராம்கி திரைக்கதை எழுதி, இயக்கிய 'பழைய பாட்டில்' குறும்படத்தை ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் முன்னிலையில் கே.பாக்யராஜ் வெளியிட்டார்! இயக்குனர்கள் சங்கத்தில் நடைப்பெற்ற இவ்விழாவில் இயக்குனர்கள் ரவி மரியா, சி.ரங்கநாதன், பிரபாகர், முத்து வடுகு, இசையமைப்பாளர் தினா, சேலம் ஆர்.ஆர்.ஹோட்டல் அதிபர் தமிழ் செல்வன், மற்றும் இயக்குனர் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்துக்கொண்டு வாழ்த்தினார்கள்! "குடிச்சவன் மது மயக்கத்தில் இருக்க, அவன் குடும்பம் பசி மயக்கத்தில் இருக்கும்" என்பதை, 'பழையபாட்டில்' என்ற குறும்படம் மூலம் அழகாக அவலத்தை படம்பிடித்துக் காட்டியுள்ளார் இயக்குனர் சாய் ராம்கி! சில ஆண்டுகளுக்கு முன்பு, பாக்யா வார இதழில் தான் எழுதிய கதையை, தனது உதவியாளர் சாய் ராம்கி இயக்குனராக ஆவதற்கு, பேரரசு கொடுத்துள்ளார்! குறும்படத்தை பார்த்த பாக்யராஜ், கதை முடியும் இடத்தில் இருந்து தொடங்கி, ஒரு தொடர்கதை சொல்லி, அனைவரையும் வியக்க வைத்தார். சுகிஷா பேரரசு குழந்தை நட்சத்திரமாக எதார்த்தமாக நடித்துள்ளதால், நல்ல எதிர்காலம்

கின்னஸ் சாதனை புரிந்த டான்ஸ் மாஸ்டர் I.ராதிகா

சமூக செயல்பாட்டாளர் திரு Dr.R.J.ராமநாரயணன் AMN Fine Arts சார்பில் கலைகளை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகிறார். நாட்டிய கலை மீதான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, டான்ஸ் மாஸ்டர் I.ராதிகா மேற்பார்வையில், நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புரிந்துள்ளது. தமிழக நாட்டிய கலைகளின் கலாச்சார மதிப்பை காக்கவும், இளைய தலைமுறையினரிடம் இக்கலைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டும், திறமை இருந்தும் மேடை அணையாத கலைஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் பொருட்டு AMN Fine Arts சார்பில் Dr.RJ.ராமநாரயணன் நாட்டிய நிகழ்ச்சிகளை தினமும் தொடர்ந்து நடத்தும் நிகழ்வினை டான்ஸ் மாஸ்டர் I.ராதிகாவின் மேற்பார்வையில் முன்னெடுத்தார். தமிழ் சினிமாவில் முன்னணி டான்ஸ் மாஸ்டராக வலம் வரும் I. ராதிகா மற்றும் அவரது குழுவின் ஒருங்கிணைப்பில், சென்னையில் பல மேடைகளிலும் ஆன்லைனிலும் 365 நாட்கள் தினமும் ஒரு மணி நேரம் நாட்டிய திருவிழா நடந்தேறியது. நாளின் எண்ணிகைக்கேற்ப நடனமாடும் நபர்கள் பங்கேற்று நடனமாடினர். பல முகமறியாத திறமை மிகு கலைஞர்கள் இதில் கலந்துகொண்டனர். 365 நாட்கள் தொடர்ந்து நடந்த இந்நிகழ்

ரைட்டர் படம் பார்த்தேன் நெகிழ்ந்தேன், தரமான படங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் ரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்கள் - இயக்குனர் பாரதிராஜா பாராட்டு

இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரைட்டர். நேற்று இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படம் பார்த்தபிறகு இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினார். தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக இருக்கிறது, எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப்பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். நான் ரசித்தேன். இயக்குனர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குனர்களை இந்த தமிழ்சினிமாவுக்கு தந்துகொண்டிருக்கிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்றார்

மாநாடு படத்திற்கான டைம் லூப்பை முடிவு செய்தது விஜய்-சூர்யா படங்கள் தான் ; வெங்கட்பிரபு

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த நவ-25ல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25வது நாளில் கூட பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.    இந்த வெற்றிக்குக் காரணமான அனைவருக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா இன்று சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது.   இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.   இந்த நிகழ்வில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசும்போது, “சமீபகாலமாக ஓடிடி வந்துவிட்டது, கொரோனா வந்துவிட்டது, மழை வந்தால் கூட்டம் வராது என்றெல்லாம் பலவிதமான எதிர்மறை வார்த்தைகளாகவ

வாழ்த்து தெரிவித்த இமான் - பட்டையை கிளப்பும் Minnal Music இன் Go Go Govinda

தமிழ் இசை ஆல்பங்களுக்கு தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால், பல இசை ஆல்பங்கள் வெளியாக தொடங்கியிருப்பதோடு, பெரிய பெரிய இசை நிறுவனங்களும் தமிழில் இசை ஆல்பங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த நிலையில், கனடா நாட்டில் வாழும் தமிழரான செந்தில் குமரன் ஒரு நல்ல பாடகர். தனது இசை ஆல்பங்கள் மூலம் உலக தமிழகர்களிடம் பிரபலமாகியுள்ளார். கனடா நாட்டில் மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆலோசககார பணியாற்றி வருகிறார். இசை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக அவர் அங்குள்ள தமிழ் மற்றும் கனடா நாட்டு இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து திரைப்பட பாடல்களுக்கு கவர் பாடல்களை பாடி, சொந்தமாக பல இசை ஆல்பங்களையும் தயாரித்து வீடியோ பதிவு செய்து அப்பாடல்களை தனது Minnal Music YouTube சேனலில் வெளியிட்டு வருகிறார். செந்தில் குமரனின் குரலுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் உருவாகி வருவதோடு, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல பாடகர்களும் அவரது பாடல்களை கேட்டு பாராட்டி வருகிறார்கள். பிரபல இசையமைப்பாளர் பிரவின் மணியுடன் சேர்ந்து பல்வேறு பாடல்களை பாடி வெளியிட்டு வரும் செந்தில் குமரன், தற்போது நவீன் வரிகளில் “கோ...கோ...கோவிந்தா...” என்

எம்.குரூப் பிலிம்ஸ் வழங்கும்"இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்"(It’s Just a Beginning)

எம்.குரூப்  பிலிம்ஸ் தயாரிப்பில்  ஜெரோம் சேவியர்  இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜீவா சுந்தர் நடிக்கும் புதிய திரைப்படம்  "இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்" கதைச்சுருக்கம்:  ஒரு ஆண் என்ன காரணத்துக்காக பயப்படுவான், எப்படி இருந்தால் பயப்படுவான், கார்ப்பரேட் வசம் மாட்டிக்கொள்ளும் ஒரு குடும்பம் எடுக்கும் விபரீத முடிவு தான் இப்படத்தின் கதை . கதாநாயகனாக  ஜீவா சுந்தர்  மற்றும் கதாநாயகியாக  நிரஞ்சனா  அறிமுகமாகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரித்திகா ,லிசி ஆன்டனி , ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். பிரியதர்ஷினி ,பேபி ஷைனி , அம்பேத்கார், ராஜேஸ்வரன் ,நிவேஷ், அட்சயா ஆகியோர் அறிமுகமாகின்றனர் . இத்திரைப்படம் திருச்சி, பெரம்பலூர், கீரனூர், அரியலூர் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.இசையமைப்பாளர்  வசந்த்  கைவண்ணத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெறுகிறது. மேலும் பல திருப்பங்கள் கொண்டு உருவாகும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறது . தொழிற்நுட்ப கலைஞர்கள்: கதை, திரைக்கதை, இயக்கம்  – எம்.ஜெரோம் சேவியர் இசை - வசந்த் ஒளிப்பதிவு - பிரவீன் பாடல்கள்-  சுதாகர் வசனம் - சுதாகர்

மனதை உலுக்கும் பாடல்! மீண்டும் கிராமிய பாடகர் அறிமுகம். “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி.. “ “ஐஸ்வர்யா முருகன்”

'ரேணிகுண்டா' படம் மூலம், திரையுலகை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் ஆர்.பன்னீர்செல்வம். இவரது இயக்கத்தில், மாஸ்டர் பீஸ் திரைப்பட நிறுவனத்தின் சார்பில் ஜி.ஆர்.வெங்கடேஷ் மற்றும் கே.வினோத் தயாரித்துள்ள திரைப்படம் 'ஐஸ்வர்யா முருகன்'. காதலின் பெருமைகளை சொல்லும் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதன் வேறு பக்கத்தை காட்டும் படமாக இப்படத்தின் கதை அமைந்துள்ளது.  ஒரு காதலால், காதலர்களின் குடும்பங்களில் என்னென்ன துன்பத்தை தருமென அதன் வலிகளை அழுத்தி பேசும் படமாக இப்படம்  உருவாகியுள்ளது. இப்படத்தின் மூன்றாவது  பாடலான “எங்கிருந்தோ கத்துதம்மா செங்குருவி..” எனும் - மனதை உலுக்கும் காட்சியாக உருவான இப்பாடல் தற்போது வெளியாகியுள்ளது. காதலர்களின் பார்வையிலிருந்து விலகி, காதலால் இரு குடும்பத்தினர் படும் துயரங்களை வலி மிகுந்த வார்த்தைகளிலும் மனதை உருக்கும் இசையிலும் தந்திருக்கிறது இந்தப்பாடல். “காதலும் சாவோடும் முடிவதில்லை..” எனும் அழுத்தம் மிகுந்த வரிகள் தமிழ் சினிமாவின் சொல்லப்படாத பக்கத்தை பேசும் விதமாக அமைந்துள்ளது. பாடலின் காட்சி அமைப்பில், புதுமுக ஹீரோ அருண் பன்னீர்செல்வம் நடிக்க அவரது பெற்றோ

72வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் கங்குபாய் கத்தியவாடி

அலியா பட் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான 'கங்குபாய் கதியாவாடி' பிப்ரவரி மாதம் 72 வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. கங்குபாய் கதியவாடி பெர்லினேல் ஸ்பெஷலின் ஒரு பகுதியாகத் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவின் முக்கிய அம்சம் மற்றும்  அர்ப்பணிப்பு என்னவென்றால் சிறந்த சினிமாவை  திரைப்பட விழாவின் மூலம் காண்பிப்பதாகும் . இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்ட படங்கள்  கொரோனா தொற்றுநோய் காலத்தில் எடுக்கப்பட்டவை . சினிமா உலகில் 25 ஆண்டுகால திரைப்பயணத்தை  நிறைவு செய்துள்ள சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள  10வது படமான 'கங்குபாய் கத்தியவாடி' அவருக்கு மிகவும் ஸ்பெஷலான படமாகும் . சஞ்சய் லீலா பன்சாலி கூறும்போது, "கங்குபாய் கத்தியவாடியின் கதை என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது, நானும் எனது குழுவினரும் இந்த கனவை சாத்தியமாக்குவதற்கு எல்லாவற்றையும் கொடுத்துள்ளோம். மதிப்புமிக்க பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் எங்கள் படத்தைக் காண்பிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். " பெ

இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா கதையின் மையக் கதாபாத்தில் நடித்த 'மின்மினி'

செல்வம் பொன்னனையன் தயாரிப்பில் , ராஜ்விக்ரம் இயக்கத்தில் இயக்குனர் பேரரசு மகள் சுகிஷா கதையின் மையக் கதாபாத்தில் நடித்த 'மின்மினி' திரைப்படம் மக்களின் மனதுக்கு பிடித்தமான படமாக அமைந்து விட்ட மகிழ்ச்சியில் மின்மினி படக்குழுவினர் உள்ளனர்! சுகிஷாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துவிட்டதில் பேரரசு தன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். படத்தை பலர் பாராட்டியதை தயாரிப்பாளர் செல்வம் பொன்னையன் பெருமையாக கருதினார். இயக்குனர் ராஜ்விக்ரம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார். இப்படத்தின் அனைத்து பாடல்களையும் பேரரசு எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. பேரரசு மகள் சுகிஷா நடிப்பை பாராட்டும் பல இயக்குனர்கள், அவர்களின் அடுத்த படத்தில் சுகிஷாவை நடிக்க வைக்க உள்ளனர்!

மலையாள சினிமாவில் பாட்டெழுதும் அண்ணாத்த படத்தின் பாடலாசிரியர் அருண் பாரதி

இளம் தலைமுறை பாடலாசிரியர்களில் தனக்கென தனி அடையாளத்துடன் முன்னனி திரைப்படங்களில் பாடல்கள் எழுதி வருபவர் பாடலாசிரியர் கவிஞர் அருண்பாரதி ரஜினி, அஜித், விஷால், விஜய்ஆண்டனி என முன்னனி நடிகர்களுக்கு பாடல்கள் எழுதி வரும் இவரது சமீபத்திய ஹிட் அண்ணாத்த திரைப்படத்தில் இடம்பெற்ற வா சாமி பாடல். இதனைத் தொடர்ந்து நேரடி மலையாள திரைப்படமாக உருவாகி வரும் ப்ரீசர் நம்பர் 18 திரைப்படத்தில் தமிழ் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இது குறித்து அருண்பாரதி பேசுகையில் ... ரஜினிசாரின் அண்ணாத்த படத்தில் நான் எழுதியிருந்த " வா சாமி " பாடலை இவ்வளவு பெரிய வெற்றிப்பாடலாக்கிய ரசிகர்களுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது மாநிலம் கடந்து நம் தமிழ் மொழியின் பெருமையை கொண்டு செல்வதில் நானும் ஒரு கருவியாக இருக்கிறேன் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாடலை ஒரு மணி நேரத்தில் எழுதி முடித்துவிட்டேன் , எழுதும் போது இயக்குநர் மனோஜ் கே வர்க்கீஸ், இசையமைப்பாளர் சுனில்குமார் ஆகியோர் வரிகளில் உள்ள சப்தத்தையும் அர்த்தத்தையும் உணர்ந்து வியந்து பாராட்டினார்கள், அதற்கு நான் நீங்கள் பாராட்ட வேண்டியது என்னையல்ல தமிழ் மொ

சீனியர் கலைஞன் ஜனகராஜிற்கு விஜய் சேதுபதி செய்த மரியாதை

  J.B.J பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் ஜெயசீலன் தயாரித்துள்ள படம் " ஒபாமா " இந்த படத்தில் பிரித்வி பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக பூர்நிஷா நடித்துள்ளார். மற்றும் ஜனகராஜ், கே.எஸ்.ரவிக்குமார், இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தயாரிப்பாளர் T.சிவா,தளபதி தினேஷ், கோதண்டம்,கயல் தேவராஜ், செம்புலி ஜெகன் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் சிறப்பு தோற்றத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்துள்ளார். ஒளிப்பதிவு - தினேஷ் ஸ்ரீனிவாஸ் இசை - ஸ்ரீகாந்த் தேவா பாடல்கள் - கவிப்பேரரசு வைரமுத்து எடிட்டிங் - B.லெனின் நடனம் - சேகர் ஸ்டண்ட் - தபதி தினேஷ் மக்கள் தொடர்பு - மௌனம் ரவி, மணவை புவன் தயாரிப்பு - ஜெயசீலன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் - நானி பாலா. படம் பற்றி இயக்குனர் நானி பாலா கூறியதாவது.. இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சமூகம் சார்ந்த கருத்துக்களை காதல், காமெடி கலந்து ஜனரஞ்சகமாக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடிக்க உறுதி அளித்து இருந்தார், ஆனால் அவர் ஷூட்டிங் நேரத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அதனால் நா