முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடைகளைக் கடந்து 'நீ சுடத்தான் வந்தியா ' படம் இம்மாதம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது



டிக் டாக் புகழ் நடிகை இலக்கியா நடிக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் படம் 'நீ சுடத்தான் வந்தியா'.இப்படத்தை கே.துரைராஜ் இயக்கி இருக்கிறார் .ஆல்பின் மீடியா தயாரித்துள்ளது.இப்படத்தில் கவர்ச்சிநடிகை இலக்கியாவுக்கு ஜோடியாக புதுமுக நடிகர் அருண்குமார் நடித்துள்ளார்.

கவர்ச்சி நடிகையுடன் நடித்த அனுபவம் எப்படி என்பதைப் பற்றி புதுமுக நடிகர் அருண்குமார் பேசும்போது,

" சினிமாவைப் பார்க்கும் போது சுலபமாக தெரியும். நடிகர்கள் நடிப்பதெல்லாம் இலகுவாகத் தோன்றும் .ஆனால் நடித்துப் பார்த்தால்தான் நடிப்பு எவ்வளவு சிரமமானது என்று புரியும். நான் 'நீ  சுடத்தான் வந்தியா' படத்தில் நடித்த போது அதை உணர்ந்தேன்.

எனக்கு சினிமா மீது  காதல் உண்டு. நடிப்பின் மீதும் ஆர்வம் உண்டு. இருந்தாலும் ஒரு தயக்கம் இருந்தது. அதற்கு ஒரு பயிற்சி தேவை என்று நினைத்தேன்.அதனால் நான் கூத்துப்பட்டறையில் மாஸ்டர் பொன்முடி அவர்களிடம் நடிப்பு பயிற்சி எடுத்துக் கொண்டு என்னைத் தயார் செய்து கொண்டு பிறகுதான் நடிக்க வந்தேன்.

 இயக்குநர் எனக்குத் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார் .அப்போதுதான் மாஸ்டரிடம் பெற்ற நடிப்புப் பயிற்சி  எனக்கு பெரிய உதவியாக இருந்ததை உணர்ந்தேன்.

இந்த படத்தில் 5 பாடல்கள். அதில் நானும் இலக்கியாவும் தோன்றும் 3 பாடல்கள் இருக்கின்றன.  இலக்கியா டிக் டாக் வீடியோக்களில் புகழ்பெற்றவர்.அவருக்கும் இது முதல் படம்; எனக்கும் இது முதல் படம் '.

இது ஒரு காதல் ,சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்புத்துறைப் பற்றி தெரிந்து கொண்டேன். எவ்வளவு சிரமங்களுக்கிடையில் ஒரு படம் உருவாகிறது என்பதை அறிந்து கொண்டேன். இந்தப் படத்தை மிகப்பெரிய  பட்ஜெட் படம் என்று சொல்லலாம் .முழுநீள வணிகப் படத்துக்கு என்னென்ன தேவையோ அதற்கேற்ப படப்பிடிப்பு உபகரணங்களைக் கொண்டுதான் படப்பிடிப்பு நடத்தினார்கள்.  இதில் ரெட் ட்ராகன், ஆரி  கேமராக்கள் பயன்படுத்தப்பட்டன. பெரிய படங்களுக்கான படப்பிடிப்பு யூனிட் பயன்படுத்தப்பட்டது. இந்தப் படம் நடிப்பில் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அது போலவே ரசிகர்களுக்கும் திருப்தி தரும் என்று நம்புகிறேன்"

இம்மாதம் டிசம்பர் 31 இறுதியில் இப்படம் திரைக்கு கொண்டுவர முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன ரசிகர்களுக்கு விருந்தாக நிச்சயம் இத்திரைப்படம் இருக்கும் நம்பிக்கையுடன் கூறினார் படத்தின் நாயகன் அருண்குமார்.பல்வேறு தடைகளைக் கடந்து இப்படம் டிசம்பர் 31 முதல் உலகமெங்கும் திரைக்கு வருகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

இனி, சட்டப்படி பேசுங்கள்

நீதிமன்றம், சட்டம், தண்டனை போன்ற வார்த்தைகள் இன்றும் பலருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. அதோடு இன்றைய ஏஐ உலகில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்களும், பணம் பறிக்கும் மோசடிகளும் அதிரிகரித்து வருகின்றன.  இந்த நிலையில் மக்களுக்கு சட்டம் பற்றிய எளிமையாகச் சொல்லித் தரும் வகையில் புதுயுகத்தில் சட்டம் ஒரு வகுப்பறை புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.  சட்டப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது எப்படி என்பது போன்ற சட்டம் சார்ந்த கேள்விகளுக்கு பிரபல வழக்கறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.

Annual Eye Screening Must for Diabetics to Save Eyesight: Dr Agarwals Eye Hospital

Chennai, November 2024: “There are 101 million people diagnosed with diabetes and 136 million people diagnosed with prediabetes in India. Around 10% of individuals (approx. 1 in 10) with diabetes will develop some form of diabetic eye disease post 10 years of their diagnosis or even earlier. This can lead to severe vision loss or even blindness. However, a vast portion of diabetics population do not go for eye checkups because there is not enough awareness that diabetes could affect eyes as much as it does heart or kidney. Also, diabetic retinopathy can remain free of symptoms initially” said Dr. Manoj Khatri, Clinical Lead and Head, Department of Vitreo-Retina, Dr Agarwals Eye Hospital, Chennai.   “Regular screening and early detection of the risks of this disorder can help crores of Indians either to prevent or manage diabetes. Type 2 diabetes can even be prevented, or its onset can be delayed with a few lifestyle changes and healthy eating. Keeping blood sugar, blood pressure, a...