முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'

காமெடி கிங் கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படம் 'ஒத்த ஓட்டு முத்தையா', ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில், கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில், சாய் ராஜகோபால் எழுதி இயக்குகிறார். யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, சிங்கம் புலி, வையாபுரி, முத்துக்காளை உள்ளிட்ட நகைச்சுவை நட்சத்திர பட்டாளம் களம் இறங்குகிறது. சிங்கமுத்து மகன், நாகேஷ் பேரன் மற்றும் மயில்சாமி மகன் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஷஷி பிலிம்ஸ் தயாரிப்பில் கோவை லட்சுமி ராஜன் மேற்பார்வையில் சாய் ராஜகோபாலின் எழுத்து மற்றும் இயக்கத்தில் 'காமெடி கிங்' கவுண்டமணி கதையின் நாயகனாக நடிக்கும் முழு நீள நகைச்சுவை திரைப்படத்திற்கு 'ஒத்த ஓட்டு முத்தையா' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த குடும்பத்துடன் கண்டு ரசிக்கக் கூடிய வகையில் உருவாகவுள்ள இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, முத்துக்காளை, 'எதிர்நீச்சல்' ஜான்சி ராணி, தாரணி, கூல் சுரேஷ், சென்றாயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன், சதீஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர ப

ஜவானின் புதிய போஸ்டரில் 'மரணத்தின் வியாபாரி' என்ற குறிப்புடன் விஜய் சேதுபதி

'ஜவான்' பட வில்லனின் தோற்றத்தை ஷாருக்கான் வெளியிட்டார். ஜவானின் புதிய போஸ்டரில் 'மரணத்தின் வியாபாரி' என்ற குறிப்புடன் விஜய் சேதுபதி... எப்போதும் மிரட்டும் வில்லனுக்காக உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்..! ஷாருக்கானின் ஆக்சன் திரில்லர் திரைப்படமான 'ஜவான்' மீதான எதிர்பார்ப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், படத்தின் வலிமைமிக்க எதிரியின் தோற்றத்தை வெளிப்படுத்துவதன் மூலம் ரசிகர்களின் உற்சாகம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் வெளியிட்ட ஒரு புதிய போஸ்டரில் விஜய் சேதுபதியை, 'மரணத்தின் வியாபாரி' என அறிமுகப்படுத்துகிறார். இரண்டு வலிமைமிக்க நட்சத்திர கலைஞர்களுக்கு இடையே மறக்க முடியாத மோதல் இருக்கிறது என உறுதி அளிக்கிறார். 'ஜவான்' பெரிய திரையில் இந்த இரண்டு நட்சத்திரங்களின் முதல் சந்திப்பை குறிக்கிறது. அண்மையில் வெளியான அதிரடி மிக்க பிரிவியூவில் ஏற்கனவே உயர்தரமான டைனமிக் விஜய் சேதுபதியின் காந்த பார்வை ரசிகர்களை கவர்ந்தது. இப்போது வெளியாகி இருக்கும் புதிய போஸ்டர் பயமுறுத்தலுடன் கூடிய கட்டளையிடும் வில்லனாக அவரது கதாபாத்திர

விறுவிறுப்பான ராபரி திரில்லர் 'லாக்கர்'!

இரட்டை இயக்குநர்களில் கிருஷ்ணன்- பஞ்சு தமிழ்த் திரை உலகில் பிரபலமானவர்கள்.அதன் பிறகு பாரதி -வாசு, ராபர்ட்- ராஜசேகர், மலையாள சித்திக்- லால் போன்ற இரட்டையர்கள் பிரபலமானவர்கள். நீண்ட இடைவெளிக்குப் பின் தமிழில் இரட்டையர்கள் ஒரு புதிய படத்தை இயக்கி உள்ளார்கள்.அவர்கள் தான் ராஜசேகர் என் மற்றும் யுவராஜ் கண்ணன்.சினிமாவின் மீது காதல் கொண்ட இந்த இருவரும் இணைந்து 'லாக்கர்' என்கிற படத்தை இயக்கி உள்ளார்கள். இப்படத்தை நாராயணன் செல்வம் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இதில் கதாநாயகனாக விக்னேஷ் சண்முகம் நடித்துள்ளார் .இவர் ஏற்கெனவே இறுதிப்பக்கம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.எதற்கும் துணிந்தவன் , கேம் ஓவர் போன்ற படங்களில் எதிர்மறைப் பாத்திரங்களிலும் மாஸ்டர் படத்தில் குணச்சித்திர வேடத்திலும் நடித்திருப்பவர். கள்ளச்சிரிப்பு என்ற ஜீ5க்கான இணைய தொடரிலும் நடித்துள்ளார். கதாநாயகியாக அறிமுக நடிகை நிரஞ்சனி அசோகன் நடித்துள்ளார். இவர் சில பைலட் படங்களிலும் ஆல்பங்களிலும் நடித்துள்ளவர். வில்லனாக நிவாஸ் ஆதித்தன் நடித்துள்ளார்.இவர் தரமணி, ரெஜினா போன்ற படங்களில் நடித்தவர்.பிரின்ஸ், மிரள், குட்

நடிகர் ஜிவி பிரகாஷ், இயக்குனர் மடோனா அஸ்வின் வெளியிட்ட யோகி பாபுவின் வானவன் மோஷன் போஸ்டர்

யோகி பாபு நடிக்கும் புதிய படமான ‘ வானவன் ’ டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை - நடிகர் GV Prakash Kumar மற்றும் மாவீர இயக்குநர் மடோனா அஸ்வின் வெளியிட்டனர். யோகிபாபு - விற்கு வானவன்  - படகுழுவின் பிறந்தநாள் பரிசு. யோகி பாபு, ரமேஷ் திலக், காளி வெங்கட், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, Master ஷக்தி ரித்விக் ( பிகில், மாஸ்டர்) , ‘லவ் டுடே’ பிராத்தனா நாதன் & கல்கி ராஜா ஆகியோர் நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படம் தயாரிப்பின் இறுதிக்கட்டத்தில் உள்ளது. யோகி பாபுவின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில் ‘ஈடன் ஃபிளிக்ஸ்’ குழுவினர் தங்கள் தலைப்பை இன்று வெளியிட்டுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த சஜின் கே சுரேந்திரன் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், இதற்கு முன் மலையாளத்தின் முதல் வெப் சீரிஸ் மாஸ்குரேட் இயக்கியுள்ளார். பவி கே பவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் (அசோக வனமாலோ அர்ஜுனா கல்யாணம் மற்றும் ரெஜினா புகழ்), அறிமுக எழுத்தாளர் ஹரிஹரன் எழுத்தும் மற்றும் ஃபின் ஜார்ஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா மற்றும் பாடலாசிரியர் கார்த்திக் நேதா ஆகியோர் பல தரப்பட்ட பாடல்களுக்குப் பிறகு மீண்டும

A resident of Mudukulathur district in Tamil Nadu bagged 2 Gold and 1 bronze in Asian sports

Kamatchi is a Ph.D Scholar in Meenakshi Academy of Higher Education and Research, (Demeed to be University Chennai.  She won 2 Gold medal in Traditional and Group event, 1 bronze medal in Artistic pair event in 2nd Asian Yogasana Sports Championship 2023 organized by Yogasana Sports Federation of Thailand collaboration with Yoga Sports Federation of India under auspices of Asian Sports Yogasana Federation and Sharvaya Yoga International.  The Championship took place in Bangkok, Thailand on 24th,25thand 26thJune 2023. The competition ended with a spectacular closing ceremony in Bangkok, Thailand attended by various higher authorities from different countries.  With this historic triumph, Yoga Kamatchi had set a new standard by making this competition one of the biggest events in the field of Yoga, where competitors from 12 countries took part in this championship including India, India, Vietnam, Hongkong, China, Thailand, Iran, etc. The competition was intense and by returni

ஈ.சி.ஆரில் திறக்கப்பட்ட நாசா யூத் ஹப்பின் இரண்டாவது கிளை

சென்னையில் அமைந்துள்ள இளைஞர்களின் பொழுதுபோக்கு ஹப்களிலேயே முதலாவது என்றால் திரு. நாசர் அவர்களால் துவங்கப்பட்ட நாசா யூத் ஹப் தான். அதனுடைய முதல் ஹப் 2017ல் எலியட் கடற்கரை சாலையில் துவங்கப்பட்டு இளைஞர்களின் மைய கவன ஈர்ப்பாக இருந்து வருகிறது. அதனுடைய முதல் கிளைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, கிழக்கு கடற்கரை சாலை அதன் இரண்டாவது கிளையை 21 ஜுலை 2023ல் வரவேற்றுள்ளது. இந்த நிகழ்ச்சி தமிமுன் அன்சாரி மற்றும் டாக்டர் ஹபீப் நாதிரா ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டது. மிர்ச்சி சிவா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஹாரத்தி கணேஷ், கணேஷ்கர், அஜய்ராஜ், உள்ளிட்ட தமிழ் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் தங்களது மதிப்புமிக்க வருகையால் இந்த நிகழ்வை மேலும் சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் நடிகர் மிர்ச்சி சிவா பேசும்போது, “இந்த அற்புதமான கொண்டாட்டத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த ஹப்பின் நிறுவனரான நாசர் சார் என்னுடைய குடும்ப நண்பர். அவரது இந்த சாதனையை கண்டு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அவர் தனது அணுகுமுறையில் ரொம்பவே அப்டேட்டாக இருப்பதுடன் இளைஞர்களின் நாடித்துடிப்பையும் நன்கு தெரி

நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும் ஜே எஸ் கே சதீஷ்குமார்

தயாரிப்பாளர்-விநியோகஸ்தராக தடம் பதித்த பின்னர் தற்போது நடிகராக புதிய பரிமாணம் காட்டி வரும் ஜே எஸ் கே சதீஷ்குமார். பன்மொழி வெற்றிப் படங்களின் விநியோகஸ்தரும், தேசிய விருதுகள் வென்ற 'தங்க மீன்கள்', 'குற்றம் கடிதல்', 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா', 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்', 'மதயானைக் கூட்டம்', 'தரமணி', 'புரியாத புதிர்' மற்றும் விரைவில் வெளியாக உள்ள 'அண்டாவ காணோம்' உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளருமான ஜே எஸ் கே சதீஷ்குமார், நடிகராக தற்போது புதிய பரிமாணம் காட்டி வருகிறார். வசந்தபாலன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'அநீதி' திரைப்படத்தில் காவல் அதிகாரியாக நடித்திருந்த ஜே எஸ் கே சதீஷ்குமார், தனது சிறப்பான நடிப்பிற்காக பல்வேறு தரப்புகளில் இருந்தும் பாராட்டுகளை தொடர்ந்து பெற்று வருகிறார். 2017-ம் ஆண்டு ராம் இயக்கத்தில் உருவான 'தரமணி' படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் தொடங்கிய ஜே எஸ் கே சதீஷ்குமாரின் நடிப்பு பயணம், ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த 'பேரன்பு', சிபிராஜ் நடித்த 'கபடதாரி', ப

“மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ்

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் “மத்தகம்” டீசரை வெளியிட்டுள்ளது !! சென்னை : இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், நடிகர்கள் அதர்வா, மணிகண்டன் மற்றும் நிகிலா விமல் நடிப்பில், இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில், உருவாகியுள்ள ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'மத்தகம்' சீரிஸின் டீசரை வெளியிட்டுள்ளது. பரபரப்புக்குப் பஞ்சமில்லாத இந்த டீசர் மொத்த சீரிஸின் கதையும் ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் என்பதை அழகாக விவரிக்கிறது. வெளியான வேகத்தில் இணையம் முழுக்க இந்த டீசர் பெரும் வரவேற்பைக் குவித்துள்ளது. டீசரின் காட்சிகளில் அதர்வா ஒரு தீவிரமான போலீஸ்காரராகவும், குட் நைட் புகழ் மணிகண்டன் முதல் முறையாக ஒரு வில்லத்தனம் மிகுந்த கேங்ஸ்டராகவும் தோன்றுகிறார்கள். வெகு சிறப்பாக எடிட் செய்யப்பட்டிருக்கும் டீசர், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பைக் கூட்டுவதுடன், இந்த சீரிஸ் ஒரு அற்புதமான த்ரில்லராக இருக்கும் என்பதை வலுவாக வெளிப்படுத்துகிறது. ஒரு இரவில் என்ன செய்ய முடியும் என்று கேட்கும் குரலுடன் டீஸர் தொடங்குகிறது. அதன்பிறகு அது அந்த கேள்விக்கு விடையளிக்கும் வகையில் வெகு பர

அங்கிதா புரடக்ஷன் எஸ். முரளி அதிக பொருட் செலவில் தயாரிக்கும் "லாக் டவுன் டைரி" படத்தின் இசை & ட்ரைலர் வெளியீட்டு விழா

900 படங்களுக்கு ஸ்டண்ட்  மாஸ்டராக  பணியாற்றியிருக்கும் ஜாலி பாஸ்டியன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் பி.கே.எச் தாஸ். இசை ஜாசி கிஃப்ட் & AB முரளி. இதில் ஜாலி பாஸ்டியன் மகன் விஹான் ஜாலி (அமீத்)  கதாநாயகனாக அறிமுகமாகிறார். சஹானா கதாநாயகியாக நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர்,. மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கையாளர்கள்  மீடியாவினர்  முன்னிலையில் நடந்தது.  நிகழ்ச்சியில் சென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கே.ராஜன்,  பெப்சி விஜயன், தவசி ராஜ், நடிகர்கள் முத்துக்களை,  எம்.எஸ்.பாஸ்கர், நடிகை பிரவீனா, லியாகத் அலிகான்,  வசனகர்த்தா பிரபாகரன்,  எஸ்.முரளி மற்றும் பட குழுவினர் கலந்துகொண்டனர். இயக்குனர் ஜாலி பாஸ்டியன் வரவேற்று பேசினார். அவர் கூறியது:  900 படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்து எல்லா ஹீரோக்களுடன்.பணியாற்றி இருக்கிறேன். கன்னடத்தில் ஒரு படம்.இயக்கி இருக்கிறேன். 2வது படமாக லாக் டவுன் டைரி என்ற படத்தை தமிழில் இயக்கி உள்ளேன்.  கொரோனா காலகட்ட லாக் டவுன் நேரத்தில்  மக்கள் எவ்வளவ

தென்னிந்திய மொழிகளில் புதிய படங்கள்.. கைகோர்க்கும் முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள்

கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ஆறாவது ஆண்டு விழாவை ஒட்டி அந்நிறுவனம் சார்பில் புதிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி தென்னிந்திய மொழிகளில் புதிய திரைப்படங்களை எடுக்க டி.வி.எஃப். (TVF) மோஷன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைப்பதாக கே.ஆர்.ஜி. (KRG) ஸ்டூடியோஸ் நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இந்த கூட்டணி மூலம் இரு நிறுவனங்கள் இணைந்து வித்தாயசமான கதை அம்சம் கொண்ட படங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கதை எழுதுவதில் துவங்கி, அதனை படமாக்கி, மக்களிடையே கொண்டு சேர்ப்பது வரை திரைப்படத்தின் அனைத்து பணிகளிலும் ஈடுபடுவதில் கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிக ஈடுபாடு கொண்டிருக்கிறது. புதிய திட்டத்தின் மூலம் வித்தியாசமான, புதுமைமிக்க கதையம்சம் கொண்டவர்களை அர்த்தமுள்ள கூட்டணிகளின் மூலம் ஊக்கப்படுத்துவதை இலக்காக கொண்டிருக்கிறது. இது குறித்து கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ் நிறுவனர் கார்த்திக் கவுடா கூறும் போது, “ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கே.ஆர்.ஜி. ஸ்டூடியோஸ்-ஐ கன்னடா மற்றும் இதர பிராந்திய மொழி படங்களை தயாரித்து அவற்றை பெரிய அளவில் வினியோகம் செய்வதற்காக துவங்கினோம். எங்களின் மிகமுக்கிய நோக்கம், வித்தியாசமா

அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்'

ஆர் கே என்டர்டெயின்மென்ட் ரமேஷ் குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கும் 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஜூலை 28 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று நடைபெற்றது. 'இவன் வேற மாதிரி', 'வேலையில்லா பட்டதாரி' புகழ் சுரபி கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் மாறன், சேது, மொட்டை ராஜேந்திரன், பெப்சி விஜயன், முனீஷ் காந்த், பிரதீப் ராவத், ரெடின் கிங்ஸ்லி, தீனா, தங்கதுரை, மசூம் ஷங்கர், மானசி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர்கள் சந்தோஷ் நாராயணன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் உடன் பணிபுரிந்தவரும், தனிப் பாடல்கள் மூலம் கவனம் ஈர்த்தவருமான ஆஃப்ரோ இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை தீபக் குமாரும், படத்தொகுப்பை ஸ்ரீகாந்தும், கலை இயக்கத்தை மோகனும் கையாண்டுள்ளனர். நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் முக்கிய அம்சங்கள் வருமாறு: எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் பேசியதாவது... "இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மதுரையிலிருந்து வந்திருக்கிறேன். இப

ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'சந்திரமுகி 2' பட அப்டேட்

லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில் இயக்குநரும், நட்சத்திர நடிகருமான ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'சந்திரமுகி 2' படத்தை பற்றிய புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நட்சத்திர இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் 65 ஆவது படமாக தயாராகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி 2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், 'வைகைப்புயல்' வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமிமேனன், சிருஷ்டி டாங்கே, ராவ் ரமேஷ், விக்னேஷ், ரவி மரியா, சுரேஷ் மேனன், சுபிக்ஷா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதினை வென்ற இசையமைப்பாளர் எம். எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா தரணி கலை இயக்கத்தை மேற்கொள்ள, படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி கவனித்திருக்கிறார். ஹாரர் வித் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது. ஜி. கே. எம். தமிழ் குமரன் தலைமை பொறுப்பு வகிக்க.. இப் படத்தின் பணி

மாவீரன் படத்தின் வெற்றி எனக்கு எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் - சிவகார்த்திகேயன்

சாந்தி டாக்கீஸ், அருண் விஸ்வா தயாரிப்பில் மடோனா அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், அதிதி உள்ளிட்டப் பலர் நடித்திருக்ககூடிய ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14-ம் தேதி வெளியானது. இந்த நிலையில் இதன் நன்றி தெரிவிக்கும் விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் முதலில் அருவி மதன் பேசியதாவது, "படத்தின் வெற்றிக்குக் காரணமாக இருந்த பத்திரிகை நண்பர்கள், இயக்குநர், தயாரிப்பாளர், எஸ்.கே.சார் படக்குழு என அனைவருக்கும் நன்றி". நடிகர் திலீபன் பேசியதாவது, "படத்தின் வெற்றிக்காக அனைவருக்கும் நன்றி. சிவா சார் எங்கள் அனைவரையும் ஜாலியாக வைத்திருந்தார். அதிதி மேம் உடன் வேலை பார்க்கும் சூழல் அமையவில்லை. ஆனால், அவருடைய எனர்ஜி கிட்டத்தட்ட ரன்பீர் சார் போல இருக்கும் என்பது தெரியும். சரிதா மேம், அஸ்வின் சார் என அனைவருக்கும் நன்றி" கோ-ரைட்டர் சந்துரு, "இயக்குநர் அணி, தயாரிப்பாளர்கள், ஒளிப்பதிவு அணி என எல்லாருக்கும் நன்றி. இவர்களுடைய ஒத்துழைப்பு காரணமாகதான் சிறப்பாக வேலை செய்ய முடிந்தது. சரிதா மேம் எங்கள் அனைவருடனும் குடும்பம் போல பழகினார். மிஷ்கின் சார் அவ்வளவு ஸ்வீட். குளிர், மழை என அ

பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ள ப்ராஜெக்ட் கே

வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கும் 'ப்ராஜெக்ட் கே' திரைப்படத்தில் நடிக்கும் பிரபாஸின் புதிரான ஃபர்ஸ்ட் லுக்கை , சான் டியாகோ காமிக்-கான் நிகழ்வுக்கு முன்னதாக வெளியிட்டிருக்கிறது. வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் 'ப்ராஜெக்ட் கே' படத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டு, ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அறிவியல் புனைவு கதை திரைப்படமான 'ப்ராஜெக்ட் கே' எனும் திரைப்படத்தினை பற்றிய புதிய தகவலை வெளியிட்டு வைஜெயந்தி மூவிஸ், மீண்டும் ஒருமுறை பார்வையாளர்களின். கற்பனை திறனை விரிவடைய செய்திருக்கிறது. கமல்ஹாசன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து சான் டியாகோவின் காமிக்- கானில் பங்கேற்கும் முதல் இந்திய திரைப்படமாக மாற்றம் அடைந்த பிறகு, ஒரு நாள் முன்னதாக தீபிகா படுகோனின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டதால், ரசிகர்களின் உற்சாகம் அதிகரித்தது. இதனால் வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிலையில், தற்போது பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது. இது ஒரு புரட்சிகரமான சினிமா அனுபவத்தை பார்வையாளர்களுக்க

பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்"

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஒரிஜினல் சீரிஸாக, பிரபல இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில், "சட்னி சாம்பார்" சீரிஸை அறிவித்துள்ளது. தமிழில் தொடர்ந்து ரசிகர்களுக்கு தரமான படைப்புகளை வழங்கி வரும், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக  'சட்னி - சாம்பார்' சீரிஸை அறிவித்துள்ளது. இந்த சீரிஸ் மங்களகரமான பூஜையுடன் ஜூலை 15 அன்று துவங்கியது. இந்த புதிய ஒரிஜினல் சீரிஸை, ‘மொழி' முதல் காலத்தால் அழியாத பல கிளாசிக் படங்களை வழங்கிய, தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பை மேற்கொள்கிறது. யோகிபாபு முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இந்த ஒரிஜினல் சீரிஸ் அனைத்து ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும். இயக்குநர் ராதாமோகன் கூறுகையில்.., "சட்னி - சாம்பார்' சீரிஸின் படப்பிடிப்பை,  அட்டகாசமான குழுவுடன் இணைந்து, மகிழ்ச்சியுடன் துவங்கியிருக்கிறோம். இது முழுக்க முழுக்க காமெடியாக அனைவரும் ரசிக்கும்படியான படைப்பாக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் மட்டுமில்லாமல், இந்த ஹாட்ஸ

'துருவ நட்சத்திரம்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'மை நேம் இஸ் ஜான்' பெப்பி பாடலை எழுதி பாடியுள்ள பால் டப்பா

'துருவ நட்சத்திரம்' படத்தில் இருந்து வெளியாகியுள்ள இரண்டாவது சிங்கிள் 'மை நேம் இஸ் ஜான்' பெப்பி பாடலை பால் டப்பா எழுதி பாடியுள்ளார்! கௌதம் வாசுதேவ் மேனனும் ஹாரிஸ் ஜெயராஜும் படத்திற்காக இணையும் போதெல்லாம், பாடல்களில் நிச்சயம் ஒரு மேஜிக் நிகழும் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். மிகவும் எதிர்பார்க்கப்படும் 'சியான்' விக்ரம் நடித்த 'துருவ நட்சத்திரம்' படத்தின் முதல் பாடலான 'ஒரு மனம்' இசை ஆர்வலர்கள் மத்தியில் அமோக வெற்றியைப் பெற்ற பிறகு, படக்குழு அவர்களின் இரண்டாவது சிங்கிளான 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' உடன் மீண்டும் வந்துள்ளது. இந்தப் பாடல் ஜூலை 19, 2023 அன்று வெளியிடப்பட்டது. இந்த பெப்பியான பாடலுக்கு ரசிகர்கள் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தியுள்ளனர். திறமை மற்றும் துடிப்பான இண்டி ராப்பரும் பாடலாசிரியருமான பால் டப்பா இந்த வசீகரிக்கும் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இதற்கு முன்பு வெளியாகி ஹிட் ஆன பாடலான 'ஐ ஐ ஐ'லையும் அவர்தான் எழுதி உள்ளார். இந்த பாடல் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டிங்கில் உள்ளது. மேலும், இந்தப் பாடலை மியூசிக் லேபிளுடன் இணைந்து தங்க

‘கொலை’ சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர் - விஜய் ஆண்டனி!

"உலகம் முழுவதிலும் உள்ள பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் வெளியாக உள்ள ‘கொலை’ திரைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்களின் கருத்துகளைக் கேட்க ஆர்வமாக உள்ளேன்" - விஜய் ஆண்டனி! தமிழ் திரைப்படத் துறையில் புதுப்புது இயக்குநர்களின் திறமைகளைக் கண்டறிந்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நாளை (ஜூலை 21, 2023) உலகம் முழுவதும் வெளிவரத் தயாராக உள்ள ‘கொலை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகும் இயக்குநர் பாலாஜி குமாருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.a நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா கரியரில் ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தனக்குள்ளேயே

'ப்ராஜெக்ட் கே' படத்தில் நடித்திருக்கும் தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

  வைஜெயந்தி மூவிஸ் தயாரிப்பில் உருவாகி வரும் அறிவியல் புனைவுகதை படைப்பான ப்ராஜெக்ட் கே எனும் திரைப்படத்திலிருந்து, ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த நடிகை தீபிகா படுகோனின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் இந்த திரைப்படம் பொருத்தமான காரணங்களுக்காக பெரும் சலசலப்பை உருவாக்கி, இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட இந்திய படமாக இந்த திரைப்படம் மாற்றம் பெற்றிருக்கிறது. சான் டியாகோ காமிக்-கானில் உள்ள ஐகானிக் ஹெச் ஹாலில் பிரம்மாண்டமாக அறிமுகமாகவிருக்கிறது 'ப்ராஜெக்ட் கே'. அமிதாப்பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா படானி உள்ளிட்ட முன்னணி நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பன்மொழி திரைப்படம் உலகளாவிய பார்வையாளர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்ற வாக்குறுதியால் பெரும் கவனத்தை கவர்ந்திருக்கிறது. ப்ராஜெக்ட் கே படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக்கில் தீபிகா படுகோனின் தோற்றம், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. செஃபியா டோன் எனும் காட்சிப் பின்னணியில் அவர் ஒரு தீவிரமான ஒளியை வெளிப்படுத்துகிறார். அவ

Gleneagles Global Health City Organises Mental Wellness Session and Basic Life Support Training to Police Personnel in Chennai

~A weeklong session for Police Personnel was Inaugurated by Dr. A Amalraj, I.P.S. Commissioner of Police, Tambaram Police Commissionerate ~ Chennai, July 18th, 2023: Gleneagles Global Health City (GGHC), a leading healthcare institution known for its excellence in providing comprehensive medical services in Chennai, has organised a week-long mental wellness session tailored specifically for the police force, as well as basic life support training for law enforcement professionals, in collaboration with Tambaram Police Commissionerate. The session was inaugurated today by Dr. A Amalraj, I.P.S. Commissioner of Police, Tambaram Police Commissionerate, in the presence of Dr. Alok Khullar, CEO, Gleneagles Global Health City. The mental wellness session is headed by Dr. Siddhika Ayyer, Consultant – Psychiatrist, GGHC. Dr. Siddhika provided valuable insights, strategies, and resources to help police personnel effectively manage stress, build resilience, and promote overall mental well-being.