'பிக் பாஸ்' புகழ் ஐஸ்வர்யா தத்தா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் அனித்ராநாயர், ஆராத்யா, சாண்ட்ரியா, நடோடிகள் சாந்தினி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி, பிக்பாஸ் ஜூலி, ஆகியோரும் நடிக்கின்றனர்.
தாதா87 படத்திற்கு பிறகு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கும் இப்படத்தில் தமிழில் முதன் முதலாக ஐரோப்பாவின் லாடுவியா நாட்டைச் சார்ந்த 'ஃபைவ் ஓ' இரண்டு பாடல்களை பாடி அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இப்படத்தின்
கள்ள காதலா
எந்தன் காதலா
அந்தி விலாகுதா
உந்தன் காதலும்
எந்தன் ஊடலும்
மனம் விரும்புதா
என்ற பாடலை இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி எழுதி பிரபல இசையமைப்பாளர் தமன் இணையதளத்தில் வெளியிட்டடார். தற்சமயம் ரசிகர்களிடம் இப்பாடல் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது.
ஜி மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை 'பொல்லாத உலகில் பயங்கர கேம்' (பஜ்ஜி) படமானது 2021ம் ஆண்டு பொங்கலன்று ரசிகர்களுக்கு விருந்து படைக்க வருகிறது என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக