KH பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் ஹரி பாஸ்கர், ODO பிக்சர்ஸ் சார்பாக தயாரிப்பாளர் நேதாஜி இணைந்து தயாரிக்க, லயோனல் ஜோசுவா இயக்கும் படம் "அண்ணபூர்ணி". இன்று பூஜையுடன் இனிதே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
லிஜோமோல் ஜோஸ், ஹரி கிருஷ்ணன், லாஸ்லியா முதன்மை
த்ரில்லர் டிராமாவாக உருவாகும் அண்ணபூர்ணி படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். பிரபல பாடலாசிரியர் யுகபாரதி இப்படத்திற்கு வசனங்களும் பாடல்களும் எழுதுகிறார்.
ஒளிப்பதிவு - ஹெக்டர், படத்தொகுப்பு - கலைவாணன், கலை - அமரன், மக்கள் தொடர்பு - சதீஷ் (AIM)
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறுகிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக