நடிகர் உதயா முதன்முறையாக இயக்குனராகி 65 வயது முதியவராக நடித்துள்ளார்... இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்தும் விதமாக இக்குறும்படம் அமைந்துள்ளது.. திரையுலக பிரமுகர்கள், அரசியல் பிரமுகர்கள், பத்திரிகை, ஊடக நண்பர்கள் பொதுமக்கள் அனைவரும் குறும்படத்தை மிகவும் பாராட்டியது குறிப்பிடத்தக்கது...
தெலுங்கு, மலையாளம் கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்து... விரைவில் வெளிவர இருக்கிறது.... Jaeshan studios ,Sachin cinema's இது போன்ற தரமான குறும்படங்களையும் தரமான திரைப்படங்களையும் தயாரிக்கும் என்று நடிகர் உதயா தெரிவித்துள்ளார்...
மேலும் "செக்யூரிட்டி" குறும்படத்தை தரமான படம் என்று பாராட்டி எழுதிய அனைத்து பத்திரிக்கை ஊடக நண்பர்கள், மீடியா நண்பர்கள் அனைத்து திரையுலக நண்பர்களுக்கும், அரசியல் பிரமுகர்களுக்கும், இக்குறும்படத்தை வெளியிட்ட இணைய தளத்திற்கும் மற்றும் பொதுமக்களுக்கும், "செக்யூரிட்டி" குறும்படத்தில் தன்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் நடிகர்கள், நடிகைகள், அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை உதயா தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்துரையிடுக