ரஜினிகாந்த் அரசியலுக்கு எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்களிடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், 2017-ஆம் ஆண்டு டிசம்பரில், ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தான் அரசியல் கட்சி தொடங்கப் போவது உறுதி எனக் கூறி, தன் தேர்தல் அரசியல் பிரவேசத்தை முதல்முறையாக உறுதிப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, அவரது ரசிகர் மன்றத்தின் பெயர், ரஜினி மக்கள் மன்றம் என மாற்றப்பட்டு, நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். அதன்பின்னர், ஏசிஎஸ்.மருத்துவக் கல்லூரி விழாவில், எம்.ஜி.ஆர்.சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினிகாந்த், தன்னால் எம்.ஜி.ஆர்.ஆட்சியை கொடுக்க முடியும் என குறிப்பிட்டு, மீண்டும் தனது அரசியல் வருகையை உறுதிப்படுத்தினார் இதனைதொடர்ந்து ஓரிருமுறை நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்திய ரஜினி, கடந்த மார்ச் மாதம் சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் பேசிய போது, தமிழக மக்களிடம் ஓர் அரசியல் எழுச்சி ஏற்படுவது தெரிந்தால்தான், அரசியலுக்கு வருவேன் என்றார். அதற்குள் கொரோனா பொதுமுடக்கம் தொடங்கியது. இருப்பினும் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து அவ்வப்போது கருத்துகள் ...