முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இரண்டாம் குத்து-க்கு ஆதரவாக சாம்ஸ்


“இரண்டாம் குத்து” படத்திற்கு “கலாச்சாரம் கெட்டு விட்டது” “கண் கூசுகிறது” என்று பலதரப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன.

இதனையடுத்து அந்த படத்தில் நடித்துள்ள காமெடி நடிகர் சாம்ஸ் தன் சில சந்தேகங்கள்… குழப்பங்கள்…

தியேட்டர்

பிட்டுப்பட தியேட்டர்கள் நம் ஊரில் எதற்காக இருக்கிறது ? கலையை கலாச்சாரத்தை வளர்க்கவா அல்லது செக்ஸ் கல்வி கற்றுக் கொடுக்கவா ?

எனக்கு தெரிந்து அங்கே ஆண்கள் மட்டும்தான் படம் பார்க்க வருகிறார்கள்… அதை ஆண்கள் மட்டும் பார்த்து கற்றுக் கொண்டால் போதுமா ? வீட்ல போய் சொல்லி கொடுப்பார்களோ ?

அந்த மாதிரி படங்களை பார்த்து மனம் சபலப்பட்டு தவறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கு என்று நினைத்தால் அதை எல்லாம் ஏன் இத்தனை நாட்கள் விட்டு வச்சிருக்கோம் ?

நம் கலாச்சாரத்தை கெடுத்து இருக்கும் ஏரியாவிற்கு கலங்கத்தை ஏற்படுத்தி பெண்கள் அந்தப்பக்கம் செல்வதற்கே தயங்கும் அந்தத் தியேட்டர்களை எதிர்த்து ஏன் யாருமே போராடவில்லை ?

இளமைக்காலத்தில் அதையெல்லாம் பார்த்து ரசித்தவர்கள் ( நான் உட்பட ) இன்று குரல் கொடுத்தால்… ஒரு வேளை வருந்தி திருந்தி விட்டோமோ ?

தொலைக்காட்சி

பெரியோர் முதல் சிறியோர் வரை இருக்கும் வீட்டுக் கூடத்திற்குள் இருக்கும் டிவி பெட்டிக்குள் சென்சார் இல்லாமல் கண்ட கருமமும் வருகிறதே. புலம்புகிறார்களே தவிர அதை தடுக்கவோ தட்டிக் கேட்கவோ இதுவரை யாருமே வரவில்லை ? ஓ.. அதெல்லாம் பெரிய இடம் முடியாது என்று விட்டு விட்டார்களோ ?

இணையதளம்

டிவியை விட பல மடங்கு நெட் மூலமாக கம்ப்யூட்டரிலும் செல்லிலும் அநியாயத்திற்கு நம்மை கேட்காமலேயே சென்சார் செய்யப்படாமல் படு பயங்கரமாக வருகிறதே அது தவறாக தெரியவில்லையா ? அதற்காக யாரேனும் பொங்கி இருக்கிறார்களா ? அது இன்னும் மிகப்பெரிய இடம் என்று கண்ணை மூடிக்கொண்டு போகிறார்களோ ?

சினிமா

பாகவதர் காலம் முதல் இன்றைய காலகட்டம் வரை படங்களில் இலை மறை காய் மறையாக இருக்க வேண்டிய விஷயங்களில் அளவு (புடவை to ஸ்விம் சூட்) மாறுபட்டுக் கொண்டே வருகிறதே இதில் எது சரியான அளவு ?

குடிப்பதை போல காட்சியை படத்தில் வைத்து “குடி குடியை கெடுக்கும்” என சப்-டைட்டில் போடுவது போல ஆபாச காட்சியை வைத்து விட்டு “மன நலத்தை கெடுக்கும்” என்று சப்டைட்டில் போட்டால் பிரச்சனை தீர்ந்துவிடுமா ?

‘யு’ சர்டிபிகேட் வாங்கிய படத்தில் சில சமயம் ‘ஏ’ சர்டிபிகேட் அளவிற்கு சில காட்சிகள் வந்து நெளிய வைக்கிறதே அது எப்படி ?

A சர்டிபிகேட் படங்கள் ஏதேனும் ஒரு விதத்தில் யாரையாவது பாதிக்கிறது என்பதால் பேசாமல் இனிமேல் U சர்டிபிகேட் படங்கள் மட்டுமே தயாரித்தால் என்ன ? அந்த U விற்கு அளவு என்ன ?

பொதுவான சில சந்தேகங்கள்

ஆங்கிலம் மற்றும் பிற மொழி படங்களில் வருகின்ற ஆபாச காட்சிகளை பார்க்கவும் ரசிக்கவும் செய்யும்போது கெடாத கலாச்சாரம் பாதிக்காத நம் மனம் நம்மூர் காரன் செய்தால் கெட்டுவிடுமா ?

நம்ம ஊர் கலாச்சாரத்தை காப்பாற்றும் பல உத்தமர்கள் தாய்லாந்து சென்று வந்ததை குறிப்பாக பட்டாயா சென்று அந்த ஊர் கலாச்சாரத்தை தெரிந்து கொண்டு வந்ததை ரகசியமாக பெருமை பேசிக் கொள்வார்கள் தானே ?

ஒருவர் தயாரிக்கிறார் பலர் நடிக்கிறார்கள் அரசாங்கம் நியமித்திருக்கிற சென்சார் போர்டு அதிகாரிகள் முறையான சர்டிபிகேட் தந்திருக்கிறார்கள் பல தியேட்டர்களில் திரையிடுகிறார்கள். பலர் பார்க்க தயாராக இருக்கிறார்கள். எல்லோரையும் விட்டுவிட்டு இயக்குனரை மட்டும் காய்ச்சுவது ஏனோ ?

நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்றால் … யார் செய்தாலும் குற்றம் தானே ?

யானை அளவு விஷயம் கை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது எலி அளவை பிடித்து தட்டிக் கேட்டுக் கொண்டிருக்கிறோம்…

அதுதான் புரியவில்லை ?

நிறுத்தினால் எல்லாவற்றையும் நிறுத்துவோம்…

தெளிய காத்திருக்கும்…

சாம்ஸ்

மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

இனி, சட்டப்படி பேசுங்கள்

நீதிமன்றம், சட்டம், தண்டனை போன்ற வார்த்தைகள் இன்றும் பலருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. அதோடு இன்றைய ஏஐ உலகில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்களும், பணம் பறிக்கும் மோசடிகளும் அதிரிகரித்து வருகின்றன.  இந்த நிலையில் மக்களுக்கு சட்டம் பற்றிய எளிமையாகச் சொல்லித் தரும் வகையில் புதுயுகத்தில் சட்டம் ஒரு வகுப்பறை புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.  சட்டப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது எப்படி என்பது போன்ற சட்டம் சார்ந்த கேள்விகளுக்கு பிரபல வழக்கறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.

Annual Eye Screening Must for Diabetics to Save Eyesight: Dr Agarwals Eye Hospital

Chennai, November 2024: “There are 101 million people diagnosed with diabetes and 136 million people diagnosed with prediabetes in India. Around 10% of individuals (approx. 1 in 10) with diabetes will develop some form of diabetic eye disease post 10 years of their diagnosis or even earlier. This can lead to severe vision loss or even blindness. However, a vast portion of diabetics population do not go for eye checkups because there is not enough awareness that diabetes could affect eyes as much as it does heart or kidney. Also, diabetic retinopathy can remain free of symptoms initially” said Dr. Manoj Khatri, Clinical Lead and Head, Department of Vitreo-Retina, Dr Agarwals Eye Hospital, Chennai.   “Regular screening and early detection of the risks of this disorder can help crores of Indians either to prevent or manage diabetes. Type 2 diabetes can even be prevented, or its onset can be delayed with a few lifestyle changes and healthy eating. Keeping blood sugar, blood pressure, a...