சிவநாடார் பல்கலைக்கழகம் சென்னை தொடக்கம்- தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்குப் பிறகு உதயமானது முதல் தனியார் பல்கலைக்கழகம்
சிவநாடார் பல்கலைக்கழகம் சென்னை தொடக்கம்- தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்குப் பிறகு உதயமானது முதல் தனியார் பல்கலைக்கழகம்
பல்கலைக்கழகத்தின் வேந்தராக திரு ஆர்.ஸ்ரீனிவாசனும், இணை வேந்தராக முனைவர் கலா விஜயகுமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய ரிசர்வ் வங்கியின் 19-வது ஆளுநர் டாக்டர் சி.ரங்கராஜன்,
இந்திய-அமெரிக்க கணினி விஞ்ஞானியும், டர்னிங் அவார்டு
வெற்றியாளருமான டாக்டர் ராஜ் ரெட்டி ஆகியோர் பல்கலைக்கழகத்தின் ஆலோசர்களாக செயல்பட உள்ளனர்.
ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங்கின் கீழ் நான்கு படிப்புத் திட்டங்களையும்,
வணிகவியல் மற்றும் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் சார்பிலும் எதிர்வரும் 2021-22-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கை குறித்த அறிவிப்புகளையும் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
சென்னை, அக்டோபர் 29, 2020: உயர்கல்வியில் மூன்றாவது முன்முயற்சியாக சிவநாடார் பல்கலைக்கழகம் சென்னை தொடங்குவதற்கான அறிவிப்பை சிவநாடார் அறக்கட்டளை இன்று அறிவித்துள்ளது. தமிழகத்தில் 90 ஆண்டுகளுக்குப் பிறகு தனியார் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. 1928-ஆம் ஆண்டு தனி சட்டத்தின் மூலமாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
உருவாக்கப்பட்டது. இப்போது தனி சட்டத்தின் மூலமாக சிவநாடார்
பல்கலைக்கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவநாடார் பல்கலைக்கழகம்
சென்னையானது, பரந்து விரிந்த பரப்பில் காலவாக்கத்தில் அமைக்கப்பெற்று இருக்கிறது. இங்கு உலகத் தரத்திலான கல்வி மற்றும் ஆராய்ச்சிப் பிரிவுகள், தனித்துவம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம், நூலகம், விளையாட்டு மையம், மாணவர்களுக்கான விடுதி வசதி, ஆசிரியர்களுக்கான வீட்டுவசதி வளாகம், கலையரங்கம், விருந்தினர் விடுதி, 24 மணி நேரமும் இணையதள வசதி
ஆகியன ஏற்படுத்தப்பட்டுள்ளன. புதிய பல்கலைக்கழகத்துக்கான அறிவிப்பை காணொலி வழியாக எச்சிஎல்., டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரும், சிவநாடார் அறக்கட்டளையின் அறங்காவலருமான திருமதி ரோஷிணி நாடார் மல்கோத்ரா வெளியிட்டார். அப்போது சிவநாடார் பல்கலைக்கழகத்தின் வேந்தர் திரு ஆர்.ஸ்ரீனிவாசன், இணைவேந்தர் முனைவர் கலா விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பல்கலைக்கழகத்தின் ஆலோசர்களாக இரண்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுநரும் மற்றும் கொள்கை
வகுப்பாளர்களில் ஒருவராகவும் திகழும் டாக்டர் சி.ரங்கராஜன், சிறந்த
கணினி விஞ்ஞானியும், கார்னிஜி மேலோன் பல்கலைக்கழகத்தின்
பேராசிரியருமான டாக்டர் ராஜ் ரெட்டி ஆகியோர் ஆலோசர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஐஐடியில் இருந்து புகழ்பெற்ற கல்வியாளர் ஒருவர், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தனது பொறுப்புகளை எதிர்வரும் டிசம்பரில் ஏற்றுக் கொள்வார். இதேபோன்று, கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையின் தலைவராக டாக்டர் டி.நாகராஜன்,
வணிகவியல் மற்றும் மேலாண்மை பள்ளியின் வணிகவியல் துறை தலைவராக டாக்டர் எஸ்.குருசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் எச்சிஎல் டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவரும், சிவநாடார் அறக்கட்டளையின் அறங்காவலருமான திருமதி ரோஷிணி நாடார் மல்கோத்ரா பேசியதாவது:-
எனது தந்தையான சிவநாடார், கல்வியால் வளர்த்தெடுக்கப்பட்டவர்.
மனிதர்களின் வாழ்க்கை நிலையை மாற்றும் அபார சக்தி கல்விக்கே உள்ளது என்பதில் அவர் தீர்க்கமான நம்பிக்கையைக் கொண்டிருந்தார். இந்த நம்பிக்கையை அச்சாரமாகக் கொண்டே சிவநாடார் அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. நாட்டை கட்டமைப்பில் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் கல்வியை உலகத்தரத்தில் அளிப்பதற்கு வசதியாக சிவநாடார் அறக்கட்டளை மூலமாக கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சமுதாயத்தில் கல்விப் பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. மேலும், எங்களது கல்வி நிறுவனங்கள் தனி ஒருவரின் வாழ்க்கையில் மட்டுமின்றி, சமுதாயத்தின் பலதரப்பினரின் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் காட்ட முடியும் என்பதை நிரூபித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக இப்போது உலகத்தரத்திலான ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியையும், பூரிப்பையும் அடைகிறோம்.
சிவநாடார் பல்கலைக்கழகம் சென்னையானது, புதிய ஆராய்ச்சிகள், புதுமுக கண்டுபிடிப்புகள் மற்றும் புதிய சிந்தைகளை வெளிப்படுத்தும் கிரியா ஊக்கியாகத் திகழும். சிவநாடார் பல்கலைக்கழகம் சென்னையின் வேந்தர் ஸ்ரீனிவாசன் பேசியது:-
உயர்கல்வியில் எங்களது இதர கல்வி நிறுவனங்களின் மூலமாக அளிக்கப்பட்டு வரும் சிறப்பான கல்வியானது, இப்போது நாங்கள் தொடங்கும் இந்தப் பல்கலைக்கழகத்துக்கு மிகச்சிறந்த வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. குறிப்பாக, பெற்றோர்கள் மற்றும் எங்களது கல்வி நிறுவனத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஆகியோர் அளப்பரிய வரவேற்பை அளித்துள்ளனர். சிறப்பான கல்வி முறை, ஆராய்ச்சிப் படிப்புகளின் தன்மை, நீடித்த நிலைத்த வகையில் தொழில் துறையுடன் பின்னிப் பிணைந்து செயல்படுவது போன்ற அம்சங்கள் மூலம் மாணவர்களுக்கு கல்வியில் முழுமையான பரிமாணத்தையும், வளர்ச்சியையும் அளிக்க முடியும் என்பதில் எங்களது பல்கலைக்கழகம் முழு நம்பிக்கை கொண்டிருக்கிறது. இதையே நோக்கமாகவும் வைத்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் பொறியியல் மற்றும் வணிகவியல்-மேலாண்மை ஆகிய இரண்டு பாடப் பிரிவுகளைத்
தொடங்குகிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் சட்டப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளைத் தொடங்க உள்ளோம். உலகத்தின் மனித
வள தேவையைப் பூர்த்தி செய்வதில் சிறப்பான பங்களிப்பை அளிக்கவும், புதிய அறிவுக் களஞ்சியத்தை உருவாக்கும் பயணத்தில் ஈடுபடவும் கல்வியாளர்களையும், விஞ்ஞானிகளையும் இந்தத் தருணத்தில் நாங்கள் மகிழ்வுடன், பூரிப்புடனும் அழைக்கிறோம் என்றார்.
சிவநாடார் பல்கலைக்கழகம் சென்னையின் இணை வேந்தர் முனைவர்
கலா விஜயகுமார் கூறியதாவது:-
உலகத்தின் எந்த மூலையிலும் தேவைப்படக் கூடிய திறன்களைக் கொண்ட மாணவர்களை உருவாக்கும் வகையில் நாங்கள் பாடங்களை
வடிவமைத்துள்ளோம். இந்தப் பாடங்கள் உலகத் தரத்தில் மிகச்சிறந்த
முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிக பரந்து விரிவுபடுத்தப்பட்ட முறையில் கல்வி அமைப்பு போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டிருக்கிறது. மாணவர்களின் சிறப்பான, வெற்றிகரமான வருங்காலத்துக்கு வித்திடும் வகையில் அமைக்கப்பட்ட பாடத் திட்டங்களுடன் கொண்ட பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க மாணவர்களை அழைப்பதில் நாங்கள் மகிழ்வும், பெருமிதமும் கொள்கிறோம் என்றார்.
எதிர்வரும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் இருந்து சேர்க்கைகள் தொடங்கவுள்ளன. பொறியியல் மற்றும் வணிகவியல் பிரிவுகளில் நான்கு விதமான தனித்துவம் வாய்ந்த கோர்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்தியா மற்றும் சர்வதேச ்அளவில் வேலைவாய்ப்பின் தேவையைக் கருத்தில் கொண்டு பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
பொறியியல் பாடப் பிரிவில் நான்கு ஆண்டுகள் இளநிலை படிக்கும் வகையில் பாடத் திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், கணினி அறிவியல், இணையதள பொருண்மை கொண்ட பொறியியல் பாடம் ஆகியன கற்றுத்தரப்பட உள்ளன. மாணவர்கள் பாடங்களை படிப்பதற்கும் அதேசமயம் படித்த பாடங்களை நடைமுறை சார்ந்த அறிந்து கொள்ளும் வகையிலும் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
மாணவர்களை சி.ஏ., சிடபிள்யூஏ, சிஎம்ஏ போன்றவற்றுக்குத் தயார் செய்யும் வகையில் இளநிலை வணிகவியல் பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிதிசார்ந்த விவகாரங்கள் குறிப்பாக உலக அளவிலான நிதி குறித்த விஷயங்கள், சிக்கல்கள், அதற்கான தீர்வுகள் போன்றவற்றை மாணவர்கள் அறியும் வகையில் பாடத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இத்துட் வணிக மேலாண்மை தொடர்பாக நான்காண்டு இளநிலை படிப்பையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது 2022-23-ஆம் ஆண்டில் தொடங்கப்பட உள்ளது.
For more information, please visit https://shivnadaruniversitychennai.edu.in/
சிவநாடார் பல்கலைக்கழகம், சென்னை இளநிலை பட்டப் படிப்பில் பல்வேறு தனித்துவம் வாய்ந்த சிறப்பான பாடப் பிரிவுகளை வழங்குகிறது. ஆராய்ச்சியை மையப்படுத்திய பல்கலைக்கழகமாகவும் திகழ்கிறது. இந்த பல்லைக்கழகமானது சிவநாடார் அறக்கட்டளை மூலமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை, எச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனரான திரு சிவநாடார் உருவாக்கியுள்ளார். எச்சிஎல்., நிறுவனம் 9.9 பில்லியன் அமெரிக்க
டாலர்களுடன் வர்த்தகம் செய்யும் முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது. உயர்கல்வியில் முன்னணி நிறுவனமாகவும், உலக அளவில் உயர்கல்விக்கான முத்திரைகளை பதிப்பதாகவும் இது திகழும். இந்த பல்கலைக்கழகமானது கற்றல், கற்பித்தல் என இரண்டுக்கும் ஏற்ற இடமாகத் திகழ்கிறது. குறிப்பாக, இங்கு உட்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளன. கூட்ட அரங்குகள், கலையரங்கம், நூலகம், விளையாட்டு மைதானங்கள், ஆண், பெண் இருபாலருக்கும் விடுதி வசதிகள், 24 மணி நேரமும் இணைய இணைப்பு வசதி போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன.
வகுப்பறைக்கும், உலக அளவிலான தேவைகளுக்குமான இடைவெளி தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனை நிறைவு செய்யும் வகையில் முழுமையான கல்விக்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தருகிறது. உலகளவில் சிறந்த சிந்தனையாளர்கள், கல்வியாளர்கள், பேராசிரியர்களைக் கொண்டு கற்பித்தல் பணியானது தொடங்கப்பட உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக