ஸ்மார்ட்போன்களின் வருகையால் சோசியல் மீடியா எனப்படும் சமூக வலைதளப் பக்கங்களின் வருகை அதிகரித்திருப்பதோடு, இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு ஆஃப்களின் வருகையும் அதிகரித்துள்ளது. ஆனால், இத்தகைய ஆஃப்கள் பெரும்பாலும் இந்தியா அல்லாமல், பிற நாடுகளைச் சேர்ந்தவைகளாகவே இருக்கிறது. சமீபத்தில் கூட சீனா நாட்டை சேர்ந்த பல ஆஃப்க்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. அதில் ஒன்று மக்கள் அதிகம் பயன்படுத்திய Tik Tok என்பதால், அதன் பயன்பாட்டாளர்கள் ரொம்பவே அப்செட்டாகி விட்டார்கள். அப்படி அப்செட்டானவர்களுக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஆம், டிக் டாக் பயன்பாட்டாளர்களுக்காக டிக் டாக்கை விட பாதுகாப்பான அதே சமயம் பொழுதுபோக்கு மற்றும் தொழில்துறை பயன்பாட்டுக்கும் சேர்த்து புதிய ஆஃப் ஒன்று அறிமுகமாகியுள்ளது. ரீட்டோ (Reto) என்ற இந்த புதிய ஆஃப்பை சென்னையை சேர்ந்த மூன்று பெண்கள் உருவாக்கியுள்ளார்கள். சென்னையை சேர்ந்த கனிணி பொறியாளரான ஃபேட்ரிஸியா என்ற பெண், டிக் டாக் இருக்கும் போதே அதற்கு போட்டியாக ஒரு ஆஃப்பை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். அவரது பணி முடியும் தருவாயில் டிக் டாக் தடை செய்யப்பட, தற்போது ஃபேட...