முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் 'நமோ'



வரும் 22.01.21 அன்று கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான விஜேஷ் மணியின் சமஸ்கிருத மொழித் திரைப்படம் 'நமோ'.

இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் ஜெயராம் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வெங்கட் சுபாவும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்திற்கு கதை எழுதி இயக்கியுள்ளார் விஜேஷ் மணி.

விஜேஷ் மணி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் ஒரு தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர். இதுவரை, மலையாளத்தில் இரண்டு படங்கள், ஒரு சமஸ்கிருத மொழிப்படம், இருளா மொழியில் ஒரு படம் மற்றும் குரும்பா மொழியில் ஒரு திரைப்படம் என ஐந்து திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.

இவர் இயக்கிய திரைப்படங்களில் எல்லாம் ஏதேனும் ஒரு புதுமையைப் புகுத்தி அதற்காக கின்னஸ் புத்தகம், ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் ஆகியனவற்றில் இடம்பெற்று புகழை சேர்த்துக்கொண்டுள்ளார்.

விஜேஷ் மணியின் முதல் திரைப்படம் 'விஸ்வகுரு'. இது மலையாளத் திரைப்படம். இத்திரைப்படத்தை மெடிமிக்ஸ் நிறுவன உரிமையாளர் அனூப் தயாரித்தார். இத்திரைப்படத்தை விஜேஷ் மணி 51 மணி நேரத்தில் கதை எழுதி படப்பிடிப்பு நடத்தி சென்சார் செய்து

விளம்பரப்படுத்தினார். இத்திரைப்படம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றது.
அதனைத் தொடர்ந்து 2017ல் 'புழயம்மா' என்ற மலையாளத் திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தை கோகுலம் கோபாலன் தயாரித்தார். இத்திரைப்படம் சிறந்த சுற்றுச்சூழல் விழிப்புணர்வுத் திரைப்படமாக அறியப்பட்டு ஏசியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றது. இப்படம் முழுவதுமே ஆற்றிலேயே நடப்பதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது இதன் தனிச்சிறப்பு.

மூன்றாவதாக 2018ல் இருளா மொழியில் ஒரு திரைப்படத்தை இயக்கினார். 'நேதாஜி' எனப் பெயரிடப்பட்ட அத்திரைப்படத்தை ஜானி குருவில்லா தயாரித்தார். இந்தத் திரைப்படம் இந்தியன் பனோராமாவுக்குத் தேர்வானது. கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற்றது.

இதேபோல் 'குரும்பா' என்று யாரும் அறிந்திராத மொழியில் ஒரு திரைப்படத்தைத் இயக்கியிருக்கிறார். சோஹன் ராய் தயாரித்திருக்கிறார்.

'ம்ம்ம்' என்பதுதான் இத்திரைப்படத்தின் பெயர். படத்திற்கு கதையெழுதி இயக்கியிருக்கிறார் விஜேஷ் மணி. இத்திரைப்படம் ஆஸ்கர் தேர்வுக்கான திரையிடலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இவர் இயக்கியுள்ள சமஸ்கிருத மொழித் திரைப்படம் 'நமோ' கோவா சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 22.01.21 அன்று திரையிடப்படுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

இனி, சட்டப்படி பேசுங்கள்

நீதிமன்றம், சட்டம், தண்டனை போன்ற வார்த்தைகள் இன்றும் பலருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. அதோடு இன்றைய ஏஐ உலகில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்களும், பணம் பறிக்கும் மோசடிகளும் அதிரிகரித்து வருகின்றன.  இந்த நிலையில் மக்களுக்கு சட்டம் பற்றிய எளிமையாகச் சொல்லித் தரும் வகையில் புதுயுகத்தில் சட்டம் ஒரு வகுப்பறை புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.  சட்டப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது எப்படி என்பது போன்ற சட்டம் சார்ந்த கேள்விகளுக்கு பிரபல வழக்கறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.

Annual Eye Screening Must for Diabetics to Save Eyesight: Dr Agarwals Eye Hospital

Chennai, November 2024: “There are 101 million people diagnosed with diabetes and 136 million people diagnosed with prediabetes in India. Around 10% of individuals (approx. 1 in 10) with diabetes will develop some form of diabetic eye disease post 10 years of their diagnosis or even earlier. This can lead to severe vision loss or even blindness. However, a vast portion of diabetics population do not go for eye checkups because there is not enough awareness that diabetes could affect eyes as much as it does heart or kidney. Also, diabetic retinopathy can remain free of symptoms initially” said Dr. Manoj Khatri, Clinical Lead and Head, Department of Vitreo-Retina, Dr Agarwals Eye Hospital, Chennai.   “Regular screening and early detection of the risks of this disorder can help crores of Indians either to prevent or manage diabetes. Type 2 diabetes can even be prevented, or its onset can be delayed with a few lifestyle changes and healthy eating. Keeping blood sugar, blood pressure, a...