முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கிளாப் போர்ட் அடித்து துவக்கி வைத்த ’பேராசை’ படப்பிடிப்பு


மக்களின் பேவரைட் தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றான ‘யாரடி நீ மோஹினி’ தொடர் மூலம் மக்களிடம் பிரபலமானவர் ஸ்ரீ, பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததோடு, பல திரைப்படங்களிலும் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். சினிமாத்துறையில் பல

வருட போராட்டங்களுக்குப் பிறகு சின்னத்திரை உலகில் தனக்கான தனி இடத்தை பிடித்திருப்பவர் தற்போது ‘பேராசை’ என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

சினிமாவுக்காக பல வருடங்கள் போராடி வெற்றி பெற்ற ஸ்ரீ, நினைத்திருந்தால் ரொம்ப எளிதாக சினிமாவுக்குள் ஹீரோவாக நுழைந்திருக்கலாம். காரணம், அவருடைய பின்னணி அப்படிப்பட்டது. ஆம், 1000 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்திருக்கும் சங்கர் கணேஷின் மகன் மற்றும் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து பல வெற்றிப் படங்களை தயாரித்த பழம்பெரும் 
தயாரிப்பாளர் ஜி.எல்.வேலுமணியின் பேரன் என்ற அடையாளம் இருந்தும், அவற்றை எங்கேயும் காட்டிக்கொள்ளாமல் சினிமாவில் பயணித்து வருகிறார்.

தற்போது ஸ்ரீ ஹீரோவாக அறிமுகமாகும் ‘பேராசை’ திரைப்படம் மதுவினால் ஏற்படும் தீமைகளை சொல்லும் சமூகத்திற்கான படமாகவும், அதே சமயம், அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையிலான கமர்ஷியல் திரைப்படமாகவும் உருவாகிறது.

ஈசன் மூவிஸ் சார்பில் சக்தி அருண்கேசவன், ஷிஹான்  சரவணன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘பேராசை’ படத்தில் ஸ்ரீ-க்கு ஜோடியாக அறிமுக நாயகி தீஷிகா, இரண்டாவது கதாநாயகனாக ராஜா, நடிகை அனுகிருஷ்ணா, நடிகை வெண்பா POWER STAR ஸ்ரீனிவாஸன், பூ விலங்கு மோகன்  நடிக்கிறார். இவர்களுடன் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம்  ஈசன். சங்கர் கணேஷிடம் பல படங்களுக்கு இசை உதவியாளராக பணியாற்றிய வி.ஆர்.ராஜேஷ் என்கிற சுதர்சன் இப்படத்திற்கு இசையமைக்க, ஜேசன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். குன்றத்தூர் ஹார்ஸ் பாபு சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, ராதிகா நடனம் அமைக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 4 ஆம் தேதி சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் கலந்துக் கொண்டு, கிளாப் அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், “என் மகன் ஸ்ரீ ஹீரோவாக அறிமுகமாகிறார். இதுவரை சினிமாவில் அவருக்கு நான் எங்கேயும் சிபாரிசு செய்ததில்லை. அவரே தனது சொந்த முயற்சியால் இந்த நிலைக்கு வந்துள்ளார். பல ஆண்டுகள் சினிமாவுக்காக
போராடி வருகிறார். தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கியவர், இன்று ‘யாரடி நீ மோஹினி’ தொடர் மூலம் உலக தமிழகர்களின் உள்ளத்தில் நுழைந்திருக்கிறார். நான் எங்கு சென்றாலும், ஸ்ரீ-யின் அப்பா இவர், என்று சொல்கிறார்கள்.

அதை கேட்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கிறது. இந்த படத்தின் மூலம் அவர் சினிமாவிலும் பெரிய பெயர் எடுக்க வேண்டும். ‘பேராசை’ படக்குழுவினர் அனைவரும் பெரிய வெற்றி பெற வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

ஹீரோ ஸ்ரீ பேசுகையில், “நான் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம். சந்தோஷமாக இருக்கிறது. இந்த நாளுக்காக தான் காத்துக் கொண்டிருந்தேன். சினிமாவில் என் தந்தையும், தாத்தாவும் பெரிய ஜாம்பவான்களாக இருந்தாலும், அவர்களுடைய பெயரை எங்கேயும் சொன்னதில்லை. எனது சொந்த முயற்சியில் தான் ஒவ்வொரு வாய்ப்பையும் பெற்று வந்தேன். 15 வயதில் என் சினிமா பயணத்தை தொடங்கினேன். ஜூனியர் நடிகராக 50 ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறேன். வசதியான குடும்பத்தில் பிறந்தாலும், சினிமாவுக்காக நிறைய கஷ்ட்டங்களை அனுபவித்திருக்கிறேன். ஆனால், நிச்சயம் சினிமாவில் சாதிப்பேன்.” என்றார்.

இயக்குநர் ஈசன் பேசுகையில், “இன்று மது பழக்கம் அனைவரிடமும் இருக்கிறது. சுமார் 99 சதவீதம் மக்கள் மது குடிப்பவர்களாக இருக்கிறார்கள். அதனால், அவர்களின் குடிக்க வேண்டாம் என்று சொல்ல முடியாது. ஆனால், அதை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும், என்று சொல்கிறோம். அளவற்ற போதையில் ஏற்படும் விளைவுகளை, கமர்ஷியலாக சொல்லியிருக்கிறோம். காமெடி, காதல், குடும்ப செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்து மக்களுக்கான பொழுதுபோக்கு படமாக ‘பேராசை’ இருக்கும்.” என்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்

*தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி* அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று (05-01-2025),  *விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகம்* சார்பாக, விக்கிரவாண்டி தொகுதி, கயத்தூர் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவினை கொண்டாடும் வகையில், நலத்திட்ட உதவிகளாக 400 பேருக்கு 5 கிலோ அரிசி, 12-வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு, எவர் சில்வர் பாத்திரங்கள், கரும்பு, மஞ்சள், பாய், போர்வைகள் மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவு ஆகியவற்றை *கழகப் பொதுச் செயலாளர் திரு.என்.ஆனந்த்* அவர்கள் வழங்கினார்.! இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகி திரு.R.பரணிபாலாஜி அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட கழக நிர்வாகி திரு.N.மோகன், அணி நிர்வாகிகள் திரு.G.P.சுரேஷ், திரு.S.சக்திவேல், திரு.குணசரவணன், மாவட்ட கழக நிர்வாகிகள் திரு.A.வடிவேல்,  திரு.G.சேகர், திரு.T.காமராஜ், திரு.E.ரமேஷ், திரு.M.சிவகுமார், திரு.S.கார்த்திக், திரு.SP.நவீன்ராஜ், திரு.R.முத்து, திரு.R.விஜய்தீப், திருமதி.R.வாசுகி, திரு.ப்ரித்திவிராஜ், திரு.A.தாஸ் மற்றும் கள்ளக்குறிச்சி ம...

இனி, சட்டப்படி பேசுங்கள்

நீதிமன்றம், சட்டம், தண்டனை போன்ற வார்த்தைகள் இன்றும் பலருக்கு அச்சம் தருவதாக இருக்கிறது. அதோடு இன்றைய ஏஐ உலகில் நாளுக்கு நாள் சைபர் கிரைம் குற்றங்களும், பணம் பறிக்கும் மோசடிகளும் அதிரிகரித்து வருகின்றன.  இந்த நிலையில் மக்களுக்கு சட்டம் பற்றிய எளிமையாகச் சொல்லித் தரும் வகையில் புதுயுகத்தில் சட்டம் ஒரு வகுப்பறை புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது.  சட்டப்படி பாதுகாப்பாக இருப்பது எப்படி, பாதிக்கப்பட்டவர்கள் மீள்வது எப்படி என்பது போன்ற சட்டம் சார்ந்த கேள்விகளுக்கு பிரபல வழக்கறிஞர்கள் விளக்கம் தருகிறார்கள். புதுயுகம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு நேரலையில் ஒளிபரப்பாக உள்ளது.

Annual Eye Screening Must for Diabetics to Save Eyesight: Dr Agarwals Eye Hospital

Chennai, November 2024: “There are 101 million people diagnosed with diabetes and 136 million people diagnosed with prediabetes in India. Around 10% of individuals (approx. 1 in 10) with diabetes will develop some form of diabetic eye disease post 10 years of their diagnosis or even earlier. This can lead to severe vision loss or even blindness. However, a vast portion of diabetics population do not go for eye checkups because there is not enough awareness that diabetes could affect eyes as much as it does heart or kidney. Also, diabetic retinopathy can remain free of symptoms initially” said Dr. Manoj Khatri, Clinical Lead and Head, Department of Vitreo-Retina, Dr Agarwals Eye Hospital, Chennai.   “Regular screening and early detection of the risks of this disorder can help crores of Indians either to prevent or manage diabetes. Type 2 diabetes can even be prevented, or its onset can be delayed with a few lifestyle changes and healthy eating. Keeping blood sugar, blood pressure, a...