வெங்கட்பிரபு-சிம்பு கூட்டணியில் மாநாடு என்கிற மிகப்பெரிய வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன் தற்போது ராம் இயக்கத்தில் நிவின்பாலி, அஞ்சலி நடிப்பில் உருவாகும் படத்தை தயாரித்து வருகின்றது. அதேசமயம் இன்னொரு பக்கம் மாநாடு படத்திற்குப் பின் ஜீவி-2 என்கிற படத்தையும் சத்தமில்லாமல் தயாரித்து முடித்து விட்டது. கடந்த 2019ல் நடிகர் வெற்றி, கருணாகரன் ஆகியோர் நடிப்பில் வித்தியாசமான கதை அம்சத்துடன் வெளியாகி ரசிகர்கள், விமர்சகர்கள் மட்டுமல்லாது திரையுலக பிரபலங்கள் அனைவரிடமும் பாராட்டுக்களை பெற்ற படம் ஜீவி.. இயக்குநர் VJ கோபிநாத் இயக்கிய இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் தற்போது ஜீவி-2 உருவாகியுள்ளது. ஜீவி படத்தின் கதையே தொடர்பியல் விதியை மையப்படுத்தித் தான் உருவாக்கப்பட்டிருந்தது.. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும் இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்துகொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார். அவரால் அது முடிந்ததா என்பது தான் முதல் பாகத்தின் கதை.. இந...