கடைசி வரை,கள்ளங்கபடமில்லாத குழந்தையாகவே வாழ்ந்து விட்டு, இறைவனிடம் போய்ச்சேர்ந்து விட்டார் - நடிகர் ராஜ்கிரண்
எஸ்.பி.பாலசுப்ரமணியன் அண்ணன்,
கடைசி வரை,கள்ளங்கபடமில்லாத குழந்தையாகவே வாழ்ந்து விட்டு, இறைவனிடம் போய்ச்சேர்ந்து விட்டார்...
ஆகஸ்டு மாசம் 5 ஆம் தேதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று, ஒரு காணொளி வெளியிட்டார்.
அதில், "மிக மிக சிறிய அளவிலான தொற்று தான். வீட்டிலேயே தனிமையில் இருந்தாலே சரியாகிவிடும். ஆனாலும், என் குடும்பத்தினருக்கு எவ்வித பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதால் தான், மருத்துவ மனைக்கு வந்து விட்டேன், வெகு சீக்கிரம் வீட்டுக்கு வந்துவிடுவேன்" என்று, மிகுந்த நம்பிக்கையோடும், தெளிவாகவும் பேசியிருந்தார்...
ஆனால் இன்று...அவர் நம்முடன் இல்லை... இந்த இழப்பை தாங்க முடியவில்லை.
அண்ணனின் ஆத்மா சாந்தியடைய, எல்லாம் வல்ல இறைவனிடம் மன்றாடுகிறேன்...
- நடிகர் ராஜ்கிரண்
படப்பிடிப்பில் எஸ்பிபி-க்கு அஞ்சலி செலுத்திய விஜய் ஆண்டனி , ஆனந்த கிருஷ்ணன் மற்றும் படக்குழுவினர்
கருத்துகள்
கருத்துரையிடுக