லென்டி ஸ்டுடியோ சார்பில் வீரபாண்டியபுரம் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சுசீந்திரன்.
இதில் ஜெய், மீனாட்சி கோவிந்தராஜன், அகன்ஷா சிங், பாலசரவணன், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட், சரத் லோகிதாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை-ஜெய், ஒளிப்பதிவு-வேல்ராஜ், மக்கள் தொடர்பு-சுரேஷ்சந்திரா, ரேகா

ஜெய்யும், மீனாக்ஷியும் காதலிக்கிறார்கள். மீனாக்ஷியின் குடும்பம் காதலை ஏற்காது என்பதால் யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்துக்கொள்ள மீனாக்ஷி முடிவு செய்கிறார். ஆனால், அதற்கு சம்மதிக்காத ஜெய், பெற்றோர் சம்மதத்துடன் தான் திருமணம் நடக்க வேண்டும், என்று கூறி மீனாக்ஷியின் தந்தையிடம் அவரை அழைத்து சென்று, நடந்தவற்றை கூறுகிறார். அவரும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி, ஜெய்க்கு மீனாக்ஷியை திருமணம் செய்து வைக்கும் ஏற்பாடுகளை செய்வதோடு, திருமணத்திற்கு முன்பு ஜெய்யை கொலை செய்ய திட்டமிடுகிறார். ஆனால், ஜெய் அவரை கொலை செய்துவிடுவதோடு, அவருடைய தம்பிகளையும் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடுகிறார். ஜெய் யார்? எதற்காக மீனாக்ஷியின் குடும்ப ஆண்களை கொலை செய்கிறார்? என்பது தான் படத்தோட மீதிக்கதை.
சிவாவாக ஜெய் கிராமத்து இளைஞராக சண்டை காட்சிகளில் அதிக கவனம் செலுத்தி முடிந்தவரை ஸ்கோர் செய்திருக்கிறார். நாயகியாக வரும் மீனாட்சி கோவிந்தராஜன் அழகாக வளைய வந்தும், அகன்ஷா சிங் கொடுத்த வேலையை சிறப்பாக செய்தும் இருவரும் சமமாக நடித்துள்ளனர்.
காமெடி என்ற பெயரில் சில இடங்களில் சிரிக்க வைத்துள்ளார் பாலசரவணன். வில்லனாக சரத் லோகிதாஸ், ஹரீஷ் உத்தமன், ஜெயபிரகாஷ், காளி வெங்கட் ஆகியோரின் நடிப்பு சிறப்பு.
இசையமைப்பாளராக புது அவதாரம் எடுத்திருக்கும நடிகர் ஜெய் ஒரு பாடலில் சிறப்பாக செய்து, பின்னணி இசையில் இயல்பாக கொடுத்துள்ளார்.
கிராமத்து அழகையும், சண்டை சச்சரவுகளையும், பகையையும் எப்போழுதும் போல் தன் காமிரா கோணங்களால் சிறப்பாக படம் பிடித்துள்ளார் வேல்ராஜ்.
பழிவாங்கும் கிராமத்து பகையை பல படங்களில் பார்த்திருப்பதை திரும்பவும் நினைவுபடுத்தி இன்னொரு திரைக்கதையில் தன் பாணியில் ஆக்ஷன் கலந்த காதல் கதையுடன் கொடுத்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக