‘வலிமை’ திரைப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருக்கும் நடிகை ஹூமா குரேஷி, தனது தனித்துவமான நடிப்பால், தமிழ் ரசிகர்களின் விருப்பமிகு நாயகியாக மாறியுள்ளார். ‘வலிமை’ படத்தில் அவரது நடிப்பு, பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடமிருந்து அன்பும் பாராட்டும் குவிந்து வருவதால், நடிகை ஹூமா குரேஷி மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளார். குறிப்பாக, படத்தில் அவரது ஆக்சன் காட்சிகள் அவருக்கு சிறப்பான பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. வலிமை படத்தின் பிரமாண்ட வெற்றியில் பெரும் உற்சாகத்துடன் இருக்கும் நடிகை ஹுமா குரேஷி கூறியதாவது.., “அஜித் ரசிகர்களின் அளவற்ற அன்பும், பாசமும் என்னை வியப்படைய செய்துள்ளது. இந்நேரத்தில் அஜித் குமார் ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அஜித் சாருடன் பணிபுரிய வேண்டும் என்கிற எனது நீண்ட நாள் கனவு தற்போது நனவாகியுள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கதாபாத்திரத்தை, எனக்கு பரிசளித்த அஜித் சார், திரு.போனி கபூர் மற்றும் இயக்குனர் எச்.வினோத் ஆகியோருக்கு நன்றி. ஒட்டுமொத்தமாக இது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது, மேலும் இந்த திரைப்பட...