“விஜய் ஆண்டனியின் பின்னணி இசையுடன் ரசிகர்களுக்கு ஒரு முழு சினிமாட்டிக் அனுபவத்தை ‘மார்கன்’ வழங்கும்” – இயக்குநர் லியோ ஜான் பால்
தமிழ் சினிமா துறையின் மிகச் சிறந்த மற்றும் பாராட்டப்பட்ட எடிட்டர்களில் ஒருவர் லியோ ஜான் பால், தனது இயக்குநர் அவதாரமாக ‘மார்கன்’ திரைப்படத்தை இயகியுள்ளார். விஜய் ஆண்டனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவரவுள்ளது. எடிட்டிங் துறையில் ஸ்லீக் மற்றும் ஸ்டைலிஷ் ட்ரான்ஸிஷன்களில் தேர்ச்சி பெற்றவர், இப்போது இயக்குநராக தாழ்மையுடன் தன் பயணத்தைத் தொடங்குகிறார். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ ப்ரொமோக்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இயக்குநர் லியோ ஜான் பால், ரசிகர்களுக்கு இந்தப் படத்தின் சிறப்பம்சங்களைப் பற்றி பகிர்ந்துள்ளார். “இந்தப் படத்தின் கதை எழுத தொடங்கியபோது, சினிமாவை அனுபவத்தை திரையரங்கில் முழுமையாக அனுபவிக்க விரும்பும் ரசிகர்களுக்காகவே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆரம்பித்தோம். மார்டர் மிஸ்டரி, சயின்ஸ் ஃபிக்ஷன் மற்றும் சூப்பர்நேச்சுரல் விஷயங்கள் இணைத்திருப்பதால், ஒரு புதிய, முற்றிலும் வேறுபட்ட ஆடியோ-விஸ்வல் அனுபவத்தை தர முயற்சி செய்திருக்கிறோம்”. “மிகவும் நம்பிக்க...