முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரிய வகை நோயுடன் போராடும் குழந்தையின் சிகிச்சைக்கு உதவ பொதுமக்களிடம் பெற்றோர் வேண்டுகோள்

சென்னை, ஆகஸ்ட் 2024: தண்டுவட தசைநார் சிதைவு நோயுடன் போராடும் தங்கள் இளம் மகள் ஷ்ரீனிகாவை காப்பாற்ற  சென்னையை சேர்ந்த அஜித் குமாரும் அவரது குடும்பத்தினரும் பொதுமக்களின் உதவியை எதிர்நோக்கியுள்ளனர். ஒரு அரிய மரபணு நோயான இந்நோய் சுவாசிக்கவும், விழுங்கவும், இறுதியில் நகரவும் முடியாதபடி படிப்படியாக தசைகளை பலவீனப்படுத்த கூடியதாகும். இந்த நோயுடன் போராடி வரும் ஷ்ரீனிகாவின் சிகிச்சைக்கு சோல்கென்ஸ்மா என்னும் ஊசி தேவைப்படுகிறது. 19,512 அமெரிக்க டாலர் விலை மதிப்புடைய இந்த ஊசி இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் ஆகும். இந்த ஊசி உடனடியாக தேவைப்படுவதால்   இக்குழந்தையின் பெற்றோர் தங்களது பணத்தேவைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மகளின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர் தெருக்களில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும், ஆட்டோக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மக்களிடம் சென்று உதவி கோரி வருகிறார்ககள். இதன்மூலம் பொதுமக்களின் ஆதரவுடன் ஷ்ரீனிகாவின் பெற்றோர் ரூபாய் 1.8 கோடி வரை சேகரித்துள்ளனர். குழந்தையின் சி...

உலகளாவிய STEM போட்டியான “மெக்கத்லான் 2024”

காமன்வெல்த் இளைஞர் பேரவை மற்றும் மாணவர் சங்கமும், K12 டெக்னோ சர்வீசஸ் மற்றும் GUSD (நீடித்த வளர்ச்சிக்கான உலகளாவிய புரிந்துணர்வு) இணைந்து அறிமுகம் செய்யும் உலகளாவிய STEM போட்டியான “மெக்கத்லான் 2024” ● இளம் கண்டுபிடிப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த தனித்துவமான போட்டி, இந்தியாவில் உள்ள 6 முக்கிய நகரங்களிலும், உலகளவில் 9 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் நடைபெறும்.  இந்தப் போட்டியானது ஆராய்ச்சி செய்வதற்கும், உருவாக்குவதற்கும், கண்டுபிடிப்பதற்கும் இளைஞர்களுக்கு ஒரு தளத்தை வழங்குகிறது. மெக்கத்லான்  2024 போட்டியானது, STEM செயல்திட்டங்களின் மூலம் யதார்த்த உலகில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, ஆழ்ந்த சிந்தனை, குழுப்பணி மற்றும் சூழ்நிலைக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல் போன்ற வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்துவதற்கான ஆற்றலை மாணவர்களுக்கு வழங்குகிறது.  சென்னை (ஆகஸ்ட் 12, 2024):  தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் இந்த உலகத்தில்,  K12 டெக்னோ சர்வீசஸ் (ஆர்க்கிட்ஸ் தி இன்டர்நேஷனல் பள்ளியின் கல்விச் சேவை வழங்குநர்) நிறுவனமானது காமன்வெல்த் இளைஞர் பேரவை, காமன்வெ...