இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் உருவாகியிருக்கும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஒரிஜினல் சீரிஸான “மை3” வெப் சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராஜேஷ் M இயக்கத்தில் மிகவும் எதிர்பார்ப்பிற்குள்ளாகியிருக்கும், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் ‘மை3’ சீரிஸ், செப்டம்பர் 15 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒரிஜினல் சீரிஸில் நடிகை ஹன்சிகா மோத்வானி, நடிகர்கள் முகேன் ராவ், சாந்தனு ஆகியோர் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் ஜனனி, ஆஷ்னா ஜவேரி, அபிஷேக், சக்தி, சுப்பு பஞ்சு அருணாச்சலம் உள்ளிட்டவர்களும் இணைந்து நடித்துள்ளனர். ரொமான்டிக் காமெடியாக உருவாகியிருக்கும் “மை3” வெப் சீரிஸ் இயக்குநர் ராஜேஷ் M இயக்கும் முதல் வெப் சீரிஸ் என்பது குறிப்பிடத்தக்கது. டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஹாட்ஸ்டார் இந்த ஒரிஜினல் வெப்சீரிஸின் டிரெய்லரை கடந்த செவ்வாயன்று வெளியிட்டது. டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் இந்த வெப் சீரிஸுக்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. நகைச்சுவை மற்றும் காதல் கலந்த கலவையாக அமைந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. முகேன், ஒரு பணக்கார பிஸினஸ்மேன். மனித தொடுதல் என்பது அவருக்கு ஒவ்வாமை. யாராவது அவரைத் தொட்டால் அவருக்கு அலர்ஜியாகி, தீவி...