முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

அக்டோபர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடமும் தீபாவளி

தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சங்கம் சார்பாக சிறப்பு மலர் வெளியிட்டும், சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கியும் விழா நடத்தி மகிழ்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியை ஒரு திருவிழா மனநிலையோடு பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருடன் வருடந்தோறும் விழா நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் தீபாவளி மலர் வெளியீட்டு விழா நடத்த முடியாமல்  இருந்தது.  இந்த வருடம் உறுப்பினர்களின் இரண்டு வருடகால ஏக்கத்தைப் போக்கும் வகையில் இன்று (22.10.2022)  பிரம்மாண்டமாக தீபாவளி சிறப்பு மலர்   வெளியிடப்பட்டு,  ,உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப்-ல் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பழம்பெறும் பாடகி பத்மபூஷன் திருமதி பி.சுசீலா,  தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு, மற்றும் இயக்குனர் ஜெயம் ராஜா, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சதீஷ், நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், காமெடி நடிகர் 'ப...

சபரிமலை மேல் சாந்தி, "ஶ்ரீ சபரி ஐயப்பன்" திரைப்படத்தின் முதல் பார்வையை, சபரிமலையில் வெளியிட்டார்

ஸ்ரீ வெற்றிவேல் பிலிம் அகாடமி சார்பில், ஐயப்ப பக்தர்களின் கூட்டு முயற்சியில் தயாரிக்கும் திரைப்படம் "ஸ்ரீ சபரி ஐயப்பன்".  தமிழ் சினிமா வரலாற்றில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு ஐயப்பன் திரைப்படம் மிகப்பிரமாண்டமாக அதிக பொருட்செலவில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இத் திரைப்படத்தை நட்பின் நூறாம் நாள் திரைப்பட இயக்குனர் ராஜா தேசிங்கு இயக்குகிறார். இந்தத் திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெறக்கூடிய அளவில் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் பெரிதும் பேசப்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மணிகண்ட சாமிகள் இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.  இத்திரைப்படத்தில் கதாநாயகனாக விஜய பிரசாத், கதாநாயகியாக பூஜா நாகர், ஐயப்பனாக பேபி நேத்ரா, சபரிமலை மாலை அணியும் வில்லியாக சோனாவும் படத்தின் குரு சாமியாக இயக்குனர் ராஜா தேசிங்கு போட்டி போட்டு நடித்திருக்கிறார்கள். வில்லனாக அறிமுகம் ராஜாசாமி மிரட்டி இருக்கிறார். கஞ்சா கருப்பு, சாம்ஸ் முத்துக்காளை, ராஜேந்திரநாத், உடுமலை ரவி, மங்கி ரவி, வடிவேலு கணேஷ், விஸ்வ காந்த், லதா, சின்னாளப்பட்டி சுகி, சுமதி, ஸ்வேதா...

நடிகர் பிரபாசுக்கு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்த ' புராஜெக்ட் கே' படக்குழு

ரெபெல் நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று, முன்னணி இயக்குநர் நாக் அஸ்வின் தலைமையிலான படக்குழு, பிரத்யேக போஸ்டரை கவனமீர்க்கும் வாசகங்களுடன் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறது. திரைப்பட தயாரிப்புகளில் ஈடுபட்டு ஐம்பதாவது ஆண்டை கொண்டாடும் தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வைஜெயந்தி மூவிஸ் நிறுவனத்தின் பொன்விழா படைப்பாக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரிப்பாளர் அஸ்வினி தத் தயாரிக்கும் திரைப்படம் ' புரொஜெக்ட் கே'. இதில் ரெபெல் ஸ்டார் பிரபாஸ் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கிறார். இவர்களுடன் நடிகர் அமிதாபச்சன் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க படத்தை பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். இந்த தருணத்தில் படத்தின் நாயகனான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு பிரத்யேகமான போஸ்டரை வடிவமைத்து வெளியிட்டிருக்கிறது. அந்த போஸ்டரில் நடிகர் பிரபாஸின் கை காற்றில...

கவனம் ஈர்க்கும் நடிகர் பிரபாஸின் 'ஆதி புருஷ்' பட போஸ்டர்

‘பாகுபலி’ படப்புகழ் வசூல் சக்கரவர்த்தி நடிகர் பிரபாஸின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக, 'ஆதி புருஷ்' பட குழுவினர் தெய்வீகம் ததும்பும் ராமரை போல் தோற்றமளிக்கும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டிருக்கிறார்கள். முன்னணி தயாரிப்பாளர் பூஷன் குமார் தயாரிப்பில், இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் திரைப்படம் 'ஆதி புருஷ்'. கடின உழைப்பாளியும், விடா முயற்சியும் உள்ள நடிகரான பிரபாஸின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு  வாழ்த்து  தெரிவிக்க படக்குழுவினர் வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டனர்.  ராமாயண காவியத்தில் நாயகனான ராமபிரானின் அனைத்து குணங்களின் குறைபாடற்ற கலவையாக இருக்கும் பிரபாஸை போற்றும் வகையில், அவர் ராமராக தோன்றும் பிரத்யேக போஸ்டரை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்திருக்கிறார்கள். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பிரபாஸ் - 'ஆதி புருஷ்' படக் குழு. நடிகர் பிரபாஸின் ராம அவதார உருவப்படம், தெய்வீகம் ததும்பும் வகையில் அமைந்திருப்பதால் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இணையத்தில் வைரல...

மூன்று மொழி.. முத்தான கதாபாத்திரங்கள்... உற்சாகத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள தேசத்து நடிகையான ஐஸ்வர்யா லட்சுமி ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில், அழுத்தமான வேடங்களில் நடித்து, ரசிகர்களிடம் நற்பெயரை சம்பாதித்த உற்சாகத்தில் இருக்கிறார். விஷால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' என்ற படத்தில் ஈழத் தமிழில் பேசி அனைவரையும் ஆச்சரியப்படுத்திய இவர், 'கார்கி' என்ற படத்தை தயாரித்திருந்தார். இவர் தற்போது உற்சாகமாக காணப்படுகிறார். மகிழ்ச்சிக்கான காரணத்தை பற்றி அவரே விவரிக்கையில், '' செப்டம்பர் 30-ம் தேதி அன்று மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் முதல் பாகம்' வெளியானது. அதில் பூங்குழலி கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். இதற்கு எதிர்பாராத இடங்களிலிருந்து கிடைத்து வரும் பாராட்டுகள் என்னை உற்சாகமடைய செய்திருக்கிறது. தற்போது 'அம்மு' என்ற பெயரில் தயாராகி இருக்கும் தெலுங்கு திரைப்படமொன்று அமேசான் பிரைம் வீடியோ டிஜிட்டல் தளத்தில் அக்டோபர் 19ஆம் தேதி அன்று வெளியாகி...