தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் ஒவ்வொரு வருடமும் தீபாவளி திருநாளை முன்னிட்டு சங்கம் சார்பாக சிறப்பு மலர் வெளியிட்டும், சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் வழங்கியும் விழா நடத்தி மகிழ்வது வழக்கம். இந்த நிகழ்ச்சியை ஒரு திருவிழா மனநிலையோடு பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருடன் வருடந்தோறும் விழா நடத்தி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறையில் இருந்த காரணத்தால் தீபாவளி மலர் வெளியீட்டு விழா நடத்த முடியாமல் இருந்தது. இந்த வருடம் உறுப்பினர்களின் இரண்டு வருடகால ஏக்கத்தைப் போக்கும் வகையில் இன்று (22.10.2022) பிரம்மாண்டமாக தீபாவளி சிறப்பு மலர் வெளியிடப்பட்டு, ,உறுப்பினர்களுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டது சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத்லேப்-ல் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக பழம்பெறும் பாடகி பத்மபூஷன் திருமதி பி.சுசீலா, தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு, மற்றும் இயக்குனர் ஜெயம் ராஜா, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் சதீஷ், நாட்டுப்புற பாடகர் வேல்முருகன், காமெடி நடிகர் 'ப...