பெங்களூர், மே 31– சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிக்கும் வகையில் சுகாதார மேலாண்மைக்கான சிறந்த தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனம் தகவல் பாதுகாப்பிற்காக ஹைடிரஸ்ட் சான்றிதழை பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் இணைய அச்சுறுத்தல்களுக்கு எதிராக பரந்து விரிந்த முழுமையான இணையப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் எந்தவிதான சிக்கல் மற்றும் பிரச்சினைகள் இல்லாமல் முக்கிய தகவல் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை சரியான முறையில் நிர்வகித்து வருவதை கருத்தில் கொண்டு இந்நிறுவனத்திற்கு ஹைடிரஸ்ட் (i1) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனை மூலம், ஹைடிரஸ்ட் i1 சான்றிதழைப் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் ஒமேகா ஹெல்த்கேர் நிறுவனமும் இணைந்துள்ளது. தகுந்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகளுடன் சீரமைத்தல் மற்றும் ஒருங்கிணைப்பதன் மூலம், இணைய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும், இணைய பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தவும் இந்த சான்றிதழ் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஒமேக...